diff options
author | Christian Grothoff <christian@grothoff.org> | 2020-10-11 13:29:45 +0200 |
---|---|---|
committer | Christian Grothoff <christian@grothoff.org> | 2020-10-11 13:29:45 +0200 |
commit | 1ae0306a3cf2ea27f60b2d205789994d260c2cce (patch) | |
tree | 53117a55c27601e92172ea82f1d8cd11d355c06c /talermerchantdemos/blog/articles/ta/manifesto.html | |
parent | 2e665813a44988bfd906c0fab773f82652047841 (diff) | |
download | taler-merchant-demos-1ae0306a3cf2ea27f60b2d205789994d260c2cce.tar.gz taler-merchant-demos-1ae0306a3cf2ea27f60b2d205789994d260c2cce.tar.bz2 taler-merchant-demos-1ae0306a3cf2ea27f60b2d205789994d260c2cce.zip |
add i18n FSFS
Diffstat (limited to 'talermerchantdemos/blog/articles/ta/manifesto.html')
-rw-r--r-- | talermerchantdemos/blog/articles/ta/manifesto.html | 650 |
1 files changed, 650 insertions, 0 deletions
diff --git a/talermerchantdemos/blog/articles/ta/manifesto.html b/talermerchantdemos/blog/articles/ta/manifesto.html new file mode 100644 index 0000000..a46a336 --- /dev/null +++ b/talermerchantdemos/blog/articles/ta/manifesto.html @@ -0,0 +1,650 @@ +<!--#set var="PO_FILE" + value='<a href="/gnu/po/manifesto.ta.po"> + https://www.gnu.org/gnu/po/manifesto.ta.po</a>' + --><!--#set var="ORIGINAL_FILE" value="/gnu/manifesto.html" + --><!--#set var="DIFF_FILE" value="" + --><!--#set var="OUTDATED_SINCE" value="2004-01-17" --> + +<!--#include virtual="/server/header.ta.html" --> +<!-- Parent-Version: 1.77 --> + +<!-- This file is automatically generated by GNUnited Nations! --> +<title>The GNU Manifesto - குனு திட்டம் - கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளை</title> + +<!--#include virtual="/gnu/po/manifesto.translist" --> +<!--#include virtual="/server/banner.ta.html" --> +<!--#include virtual="/server/outdated.ta.html" --> +<h2>The GNU Manifesto</h2> + +<h3 id="whats-gnu">GNU என்றால் என்ன? Gnu's Not Unix!</h3> + +<p> + யூனிக்ஸுடன் ஒத்தியலும் கனு (GNU - short for Gnu's Not Unix) என்னும் +மென்பொருளை நான் மற்றவர்களுக்குச் சுதந்திரமாக வழங்கும் நோக்கத்துடன் +எழுதிக்கொண்டிருக்கின்றேன். இதில் எனக்கு பலர் உதவுகிறார்கள். நேரம், பணம், +நிரலிகள் (programs), சாதனங்கள் போன்றவைகளின் வடிவிலான உதவிகள் எங்களுக்கு +மிகவும் தேவை.</p> + +<p> + இதுவரை Lispஇல் கட்டளைகளை எழுதக்கூடிய திறனுடைய Emacs text editor, ஒரு source +level debugger, ஒரு yacc-compatible parser generator, ஒரு linker மற்றும +கிட்டத்தட்ட 35 நிரலிகள் எங்களிடம் உள்ளன. ஒரு shell முடிவடையும நிலையில் +உள்ளது. ஒரு C தொகுப்பி (compiler) தன்னைத்தானே தொகுத்து விட்டது, அடுத்த +வருடம் அதை வெளியிட்டுவிடுவோம். ஒரு கரு (kernel) ஆரம்ப நிலையில் +உள்ளது. கருவையும் தொகுப்பியையும் முடித்த பிறகு கனுவை நிரலிகள் எழுதுவதற்கு +விநியோகம் செய்யலாம். TeXஐ உரை வடிவமைப்புக்கு உபயோகிக்கலாம். சுதந்திரமான X +window systemஐயும் உபயோகித்துக் கொள்வோம். இதன் பின் Common Lisp, ஒரு Empire +விளையாட்டு, ஒரு விரிதாள் (spreadsheet), மற்றும் நூற்றுக்கணக்கான மற்ற பல +நிரலிகளைச் சேர்ப்போம். இதற்கான ஆவணங்களையும் (documentation) சேர்த்துக் +கொள்வோம். இறுதியில் யூனிக்ஸுடன் வரும் அனைத்து உபயோகமுள்ள நிரலிகளையும் +நாங்கள் வழங்குவோம்.</p> + +<p> + கனுவில் யூனிக்ஸ் நிரலிகளை இயக்க முடியும், ஆனால் முற்றிலும் அதே போல +இருக்காது. மற்ற இயங்கு தளங்களில் (Operating system) உள்ள எங்களது அனுபவத்தின் +அடிப்படையிலும், நமது வசதிக்கேற்பவும் மாற்றங்கள் செய்கிறோம். குறிப்பாக, +நீளமான கோப்பின் பெயர்கள், கோப்பின் பதிப்பு எண்கள், முறியாக் கோப்பு முறைமை, +கோப்புப் பெயர் நிரைவேற்றல், terminal-independent display மற்றும் lispஐ +அடிப்படையாகக் கொண்ட சாளர முறைமை (window system) ஆகியவற்றைச் செய்கிறோம். C +மற்றும் Lisp மொழிகள் அமைப்பு நிரலாடலுக்கு (system programming) +உபயோகிப்போம். UUCP, MIT Chaosnet மற்றும் இணைய நெறிமுறைகளைத் தகவல் +தொடர்பிற்கு உபயோகிப்போம்.</p> + +<p> + மெய்நிகர நினைவகம் உடைய 68000/16000 வகை கணினிகளில், கனு முதலில் இயங்கும், +ஏனென்றால் அதில் இயங்கவைப்பதற்கு எளிதாக இருக்கும். சிறிய கணினிகளில் இயங்க +வைப்பதைத் தேவையானவர்கள் செய்துகொள்ள விட்டு விடுவோம்.</p> + +<p> + இந்த செயல்திட்டத்தின் பெயரை உபயோகிக்கும் பொழுது, GNU என்னும் வார்த்தையில் +<em>G</em> யை உச்சரியுங்கள்.</p> + +<h3 id="why-write">நான் ஏன் கனுவை எழுத வேண்டும்?</h3> + +<p> + எனக்குப் பிடித்த நிரலை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வது ஒரு சீரிய முறை, என்பது +எனது கருத்து. மென்பொருள் விற்பவர்கள் மென்பொருள் பயனாளர்களுக்குள் +பகிர்ந்துகொள்ள அனுமதிப்பதில்லை. இதன் மூலம் மென்பொருள் பயனாளர்களைப் பிரித்து, +அவர்கள் விற்பவர்களின் தயவில் வாழும் சூழ்நிலை ஏற்படுகிறது. இது போல மற்ற +மென்பொருள் பயனாளர்களிடம் இருந்து தனிமைப் படுத்துவது எனக்குப் +பிடிக்கவில்லை. மனசாட்சிக்கு விரோதமாக என்னால் NDAவிலோ (Non-Disclosure +Agreement) அல்லது மென்பொருள் உரிம ஒப்பந்தத்திலோ கை எழுத்து இட +முடியாது. MITயின் Artificial Intelligence ஆய்வகத்தில் இது போன்ற மனோபாவங்களை +எதிர்த்தேன், ஆனால் கை நழுவி விட்டது: எனக்குப் பிடிக்காதவற்றை எனக்குச் +செய்யும் ஸ்தாபனத்தில் என்னால் இருக்க முடியவில்லை.</p> + +<p> + கணினிகளை எனக்கு அவமதிப்பில்லாத வகையில் உபயோகிக்கப் போதுமான தளையறு மென்பொருளை +(Swatantra Software or Free Software) எழுத முடிவு செய்திருக்கிறேன். இதனால் +எனக்குச் சுதந்திரம் தராத மென்பொருளை உபயோகிக்க வேண்டியது இருக்காது. கனுவைப் +பகிர்ந்து கொள்வதைச் சட்டபூர்வமாக மறுக்கும் உரிமையை MITக்கு நிராகரிக்க நான் +MIT AI ஆய்வகத்திலிருந்து ராஜினாமா செய்துவிட்டேன்.</p> + +<h3 id="compatible">ஏன் யுனிக்ஸோடு கனு ஒத்துப்போகிறது(compatible)?</h3> + +<p> + என்னைப் பொருத்தவரை, யுனிக்ஸ் ஒரு மிகச் சிறந்த இயக்குதளம் (Operating System) +கிடையாது, ஆனால் அது மிகவும் மோசம் இல்லை. யுனிக்ஸின் அடிப்படை அம்சங்கள் +சிறப்பாக உள்ளன. மேலும், யுனிக்ஸைக் கெடுக்காமல் அதை மேம்படுத்த முடியும் என்று +நம்புகிறேன் (மொழிபெயர்ப்பாளரின் குறிப்பு : கனுவை எழுத அரம்பித்த பொழுது, +யூனிக்ஸ்தான் பெரிதும் உபயோகத்தில் இருந்தது).</p> + +<h3 id="available">கனு எப்படிக் கிடைக்கும்?</h3> + +<p> + கனு public domainல் இல்லை. எல்லோரும் கனுவை மாற்றவும், பரிமாறவும் +அனுமதிக்கப்படுவார்கள், ஆனால் பரிமாறுபவர்கள் மீண்டும் தடை விதிக்க +முடியாது. அதாவது, தனியுரிமை (<a +href="/philosophy/categories.html#ProprietarySoftware">proprietary</a>) +மாற்றங்கள் அனுமதிக்கப்பட மாட்டா. கனுவின் எல்லா பரிமாணங்களிலும் இந்தச் +சுதந்திரங்கள் இருக்க நான் தேவையான எச்சரிக்கைகளை எடுத்திருக்கிறேன்.</p> + +<h3 id="why-help">ஏன் மற்ற நிரலாளர்கள் (programmers) உதவுகிறார்கள்</h3> + +<p> + பல நிரலாளர்கள் கனுவில் ஆர்வம் காட்டுகிறார்கள். உதவவும் விரும்புகிறார்கள்.</p> + +<p> + பல நிரலாளர்கள், மென்பொருளில் விதிக்கப்பட்டுள்ள தடைகளை +விரும்பவில்லை. அத்தடைகள் நிரலாளர்களை இலட்ச லட்சமாகச் சம்பாதிக்க உதவலாம், +ஆனால் அத்தடைகள் அவர்களை ஒருவருக்கு ஒருவர் நண்பர்களாகக் கருத +விடுவதில்லை. நிரலாளர்களுக்குள் நட்பை வெளிப்படுத்தும் அடிப்படையான செயல், +நிரல்களைப் பகிர்ந்துகொள்வதுதான்; இப்போது உள்ள வியாபார அமைப்புகள், +நிரலாளர்களைத் தங்களுக்குள் நண்பர்களாகக் கருத விடுவதில்லை. மென்பொருள் +வாங்குபவர்கள் நட்பு அல்லது சட்டம, இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டிய +சூழ்நிலை ஏற்படுகிறது. பொதுவாக, நட்புதான் முக்கியம் என்று பலர் முடிவு +செய்கிறார்கள். ஆனால் சட்டத்தைப் பின்பற்ற நினைப்பவர்கள், இரண்டிலும் திருப்தி +அடைவதில்லை. அவர்களுக்கு மற்றவர்களின் நல்லெண்ணத்தின் மீது நம்பிக்கையின்மை +ஏற்படுகின்றது. மேலும், நிரல் எழுதுவதை வெறும் பணம் சம்பாதிக்கும் ஒரு வழியாக +கருதிவிடுகிறார்கள்.</p> + +<p> + கனுவை உருவாக்கி அதை உபயோகித்தால் நாம் எல்லோருடனும் ஒற்றுமையாகவும் சட்டத்தை +மீறாமலும் இருக்கலாம். மேலும் கனு, மென்பொருளைப் பகிர்ந்துகொள்வதற்கு ஒரு +உத்வேகமாகவும் ஒரு முன்மாதிரியாகவும் திகழும். தனியுரிம (proprietary) +மென்பொருள் உபயோகித்தால், சுதந்திர மென்பொருள் உபயோகிக்கும்பொழுது கிடைக்கும் +ஒற்றுமையுணர்வு கிடைக்காது. நான சந்தித்த பல நிரலாளர்களுக்குப், பணத்தால் ஈடு +செய்ய முடியாத மகிழ்ச்சியை இதுவே தரும்.</p> + +<h3 id="contribute">நீங்கள் எப்படி உதவலாம்?</h3> + +<p> + நான் கணினி உற்பத்தியாளர்களிடம் பணம் மற்றும் கணினியின் மூலம் நன்கொடைகள் +கேட்கிறேன். தனி நபர்களிடமிருந்து நன்கொடையாக உழைப்பு மற்றும நிரல்களைக் +கேட்கிறேன்.</p> + +<p> + கணினியை நன்கொடையளிப்பதனால் ஒரு விளைவு, அந்த கணினிகளில் கனு சீக்கிரமாக +செயல்படும். நன்கொடையாக அளிக்கப்படும் கணினிகள் உபயோகத்திற்கு ஏற்கனவே தயாராக +இருக்க வேண்டும். மேலும, அதை உபயோகிப்பதற்குத் தனிப்பட்ட குளிரூட்டும் +இயந்திரங்கள் தேவைப் படக்கூடாது.</p> + +<p> + பல நிரலாளர்கள் கனுவிற்குப் பகுதி நேரப் பங்களிப்பில் ஆர்வமாக இருப்பதை நான் +பார்க்கிறேன். பல செயல்திட்டங்களுக்கு இத்தகைய பகுதிநேர உழைப்பால் உருவாக்கபட்ட +நிரலிகளை ஒன்றாக இயங்க வைக்க முடியாது. ஆனால் யூனிக்ஸை ஒவ்வொரு பாகமாக மாற்றம் +செய்வதில் இந்தப் பிரச்சனை கிடையாது. ஒரு யூனிக்ஸ் அமைப்பில் பல +நூற்றுக்கணக்கான நிரலிகள் மற்றும் அதற்குரிய ஆவணங்கள் (documentation) +உள்ளன. அவற்றின் இடைமுகக் குறிப்புகள் (interface specifications) யூனிக்ஸ் +ஒத்தியல்பால் (compatibility) தீர்மானிக்கப்பட்டவை. ஒவ்வொரு பங்களிப்பாளரும் +யூனிக்ஸில் உள்ள நிரலிக்கு ஈடாக நிரல் எழுதி அதன் இடத்தில் சரியாக இயங்க +வைத்தால், அவை அனைத்தையும் ஒன்றாகச் சேர்க்கும்பொழுது சரியாக +இயங்கும். Murphyயின் கூற்றினால் சில எதிர்பாராத பிரச்சனைகள் வந்தாலும் இந்த +இணைப்பு இயன்றதே.</p> + +<p> + நன்கொடைகள் கிடைத்தால், சில நிரலாளர்களை கனுவில் நிரல் எழுத +வைத்துக்கொள்வோம். மற்ற மென்பொருள் எழுதும் உத்தியோகங்களைவிட ஊதியம் +குறைவாகத்தான் இருக்கும், ஆனால் சமூக ஒற்றுமையை, பணம் சம்பாதிப்பதற்கு ஈடாகக் +கருதுபவர்களை நான் எதிர்பார்க்கிறேன். தன்னை இதற்காக அர்ப்பணம் செய்ய +விரும்புவர்கள், தங்களுடைய முழு சக்தியையும் கனுவில் செலுத்த இந்த +உத்தியோகங்கள் உதவும்.</p> + +<h3 id="benefit">எப்படி எல்லா கணினி பயனாளர்களும் பயன் அடைவார்கள்?</h3> + +<p> + கனுவை எழுதிய பிறகு எல்லோருக்கும் இயங்குதள மென்பொருள் (Operating system +software) காற்றுபோல எளிதாகக் கிடைக்கும்.</p> + +<p> + இதன் விளைவு எல்லொருடைய யூனிக்ஸ் உரிமத்தை மிச்சப்படுத்துவதை விட மேலானது - +தேவையில்லாமல் திரும்பத்திரும்ப அதே இயங்குதள நிரலிகள் எழுதுவதைத் +தவிர்க்கலாம். இந்த உழைப்பைத் தொழில்நுட்ப முன்னேற்றத்தில் செலுத்தலாம்.</p> + +<p> + முழு இயங்குதளத்தின் ஆணைமூலம் (source codes) எல்லோருக்கும் +கிடைக்கும். இதனால், யாருக்காவது இயக்க முறைமையில் மாற்றம் வேண்டுமென்றால், +அவரவராக அதைச் சுதந்திரமாகச் செய்துக்கொள்ளலாம், அல்லது எந்த நிரலாளரையும் +பணியில் அமர்த்தி மாற்றிக்கொள்ளலாம். மென்பொருள் பயனாளர்கள் ஒரு நிரலாளர் +அல்லது ஒரு நிறுவனத்தின் தயவில் வாழ வேண்டிய அவசியம் இருக்காது.</p> + +<p> + பள்ளிக்கூடங்கள் மாணவர்களுக்கு ஆணைமூலங்களைப் படிப்பதற்கும் அதை +மேம்படுத்துவதற்கும் பயிற்சியளிக்கும் நல்லதொரு பயிற்சி மையமாக +அமையலாம். Harvard கணினி மையம், முன்பு எந்தவொரு நிரலையும் அதன் ஆணைமூலங்களைப் +பகிரங்கமாக வெளியிடாவிட்டால், அதனை நிறுவப் (install) போவதில்லை என்ற கொள்கை +வைத்திருந்தனர். நான் அதைக் கண்டு மிகவும் ஊக்கம் அடைந்தேன்.</p> + +<p> + கடைசியாக, யார் இயங்குதள மென்பொருளை உரிமை கொண்டாடுவது, அதைவைத்து ஒருவர் என்ன +செய்யலாம், என்ன செய்யக்கூடாது போன்ற தொல்லைகள் இருக்காது.</p> + +<p> + மக்கள் ஒரு நிரலிக்கு எவ்வளவு விலை கொடுக்க வேண்டும் என்று நிர்ணயிப்பது, அதன் +நகல்களை உரிமம் செய்வது போன்ற பல விஷயங்களைத் தீர்மானிக்கும் முறை என்றுமே +சமுதாயத்திற்குப் பல விதமாகச் செலவுகளைக் கொடுக்கிறது. காவல்துறை மட்டுமே +அனைவரும் அதற்களுக்குக் கீழ்படிவதை நடைமுறைப்படுத்த முடியும். உதாரணமாக, +விண்வெளி நிலையம் அமைத்து அதில் மக்கள் வாழ்கிறார்கள் என்று +வைத்துக்கொள்வோம். அவர்கள் சுவாசிக்கும் ஒவ்வொரு லிட்டர் காற்றுக்கும், விலை +நிர்ணயிப்பது நியாயமானது தான். ஆனால் அதற்கு அவர்கள் காற்று அளவையை முகமூடி போல +முகத்தில் மாட்டிக் கொண்டு இரவும் பகலும் அலைவது பொறுக்க முடியாத ஒன்று. அது +மட்டுமின்றி எல்லா இடங்களிலும் புகைப்படம் பிடிக்கும் கருவியை வைத்து நீங்கள +முகமூடியை அகற்றுகிறீர்களா என்று கண்காணிப்பது கொடுமையானது. அதற்குப் பதில் +அந்த இடத்திற்கு மொத்தமாக ஒரு வரி நிர்ணயித்து முகமூடிகளை +தூக்கியெறிந்துவிடலாம்.</p> + +<p> + சுவாசிப்பதைப் போல, ஒரு நிரலியின் அனைத்து அல்லது சில பகுதிகளை படி எடுத்தல் +இயற்கையானதே. அது அந்த அளவு சுதந்திரமாக இருக்க வேண்டியது.</p> + +<h3 id="rebutted-objections">கனுவின் குறிக்கோள்களுக்கு எதிராகக் கூறப்படும் சில வாதங்கள்</h3> + +<p id="support"> +<strong>“இலவசமாகக் கிடைத்தால் யாரும் உபயோகிக்க மாட்டார்கள்.”</strong></p> + +<p> +<strong>“சேவை அளிக்க வேண்டுமென்றால் அதற்குக் காசு வசூல் செய்துதான் ஆக +வேண்டும்.”</strong></p> + +<p> + இலவசமான கனுவை விட கனுவுடன் கட்டணச் சேவையைப் பொது மக்கள் விரும்பினால், வெறும் +சேவையை அளிக்கும் நிறுவனங்கள் லாபத்துடன் இயங்கலாம் வெறும் கைப்பிடித்து +உதவியளிக்கும் சேவையையும், நிரலில் மாற்றங்கள் செய்யும் சேவையையும் நாம் +வித்தியாசப்படுத்த வேண்டும். இரண்டாவது விதமான சேவையை மென்பொருள் +விற்பனையாளர்களிடமிருந்து எதிர்பார்க்க முடியாது. உங்களைப்போல பலருக்கு அதே +மாற்றம் தேவையில்லை என்றால் மென்பொருள் விற்பனையாளன் செய்து தர மாட்டான்.<a +href="#f3">(1)</a></p> + +<p> + உங்களது நிறுவனத்திற்கு நம்பகமான சேவை தேவை என்றால், அந்த மென்பொருளின் மூலக +குறிமுறைகள் மற்றும் அதற்கான சாதனங்கள் உங்களிடம் இருக்க வேண்டும். இருந்தால் +நீங்கள் ஒரு நிரலாளரை வைத்து, நிரலில் உங்களது மாற்றங்களைச் செய்து +கொள்ளலாம். யூனிக்ஸ் மூலகக் குறிமுறைகளின் விலை அதிகமாக இருப்பதால் பெரும்பாலான +நிறுவனங்களுக்கு இது இயலாத ஒன்று. கனுவில் இது போன்ற மூலக குறிமுறைகளில் +மாற்றங்கள் எளிதாக இருக்கும். கனுவில் மாற்றங்கள் செய்யும் திறமை உடையவர்கள் +இல்லாமல் போகலாம். அதற்கு கனுவின் பரிமாறும் முறையைக் குறை கூற முடியாது. கனு +உலகத்திலுள்ள எல்லாப் பிரச்சனைகளையும் தீர்க்காது.</p> + +<p> + கணினி பற்றி ஒன்றும் தெரியாதவர்களுக்குக் கைப்பிடித்து உதவ +வேண்டியிருக்கும். அதாவது அவர்களுக்குச் செய்யத் தெரியாதவைகளைச் செய்து +கொடுப்பது.</p> + +<p> + இது போன்ற சேவைகளை மட்டும் நிறுவனங்கள் அளிக்கலாம். மென்பொருள் மற்றும் சேவையை +விரும்புபவர்கள், மென்பொருளை இலவசமாகப் பெற்றதால் இப்பொழுது சேவையை மட்டும் +வாங்க விரும்புவார்கள். சேவை அளிக்கும் நிறுவனங்கள், தரத்திலும், சேவையிள் +விலையிலும் போட்டியிடுவார்கள். மேலும், கணினி உபயோகிப்பவர்கள் ஒரு நிறுவனத்தை +மட்டும் சார்ந்திருக்க வேண்டியிருக்காது. மேலும் சேவை வேண்டாமென்று +நினைப்பவர்கள் நிரலுக்கான சேவை வாங்காமல் உபயோகிக்கலாம்.</p> + +<p id="advertising"> +<strong>“விளம்பரமின்றி மென்பொருளை விற்பனை செய்ய முடியாது.”</strong></p> + +<p> +<strong>“விளம்பரம் செய்ய வேண்டுமென்றால், மென்பொருளுக்குக் காசு வசூலிக்க +வேண்டும்.”</strong></p> + +<p> + கனு போன்ற மென்பொருளைப் பற்றி மற்றவர்களுக்குத் தெரிவிக்கப் பல எளிமையான வழிகள் +உள்ளன. ஆனால் கணினி உபயோகிப்பவர்களில் பலரை விளம்பரம் மூலம்தான் அணுக +முடியும். அப்படியானால், கனுவை நகலெடுத்து விற்கும் நிறுவனங்கள் கனுவையும் +விளம்பரப்படுத்தலாம். இதன்மூலம் விளம்பரத்திலிருந்து பயன் அடைபவர்கள் +மட்டும்தான் அதற்குச் செலவு செய்வார்கள். </p> + +<p> + பெரும்பாலானோர் கனுவை நண்பர்களிடம் இருந்து பெற்று இதுபோன்ற நிறுவனங்கள் வெற்றி +அடையவில்லை என்றால், கனுவிற்கு விளம்பரம் தேவையில்லை என்று முடிவுசெய்யலாம்.<a +href="#f4">(2)</a></p> + +<p id="competitive"> +<strong>“எனது நிறுவனம் மற்றவர்களோடு போட்டியிடுவதற்குத் தனியுரிம +(proprietary) மென்பொருள் தேவை.”</strong></p> + +<p> + கனு, இயங்குதள (Operating System) உலகத்தில் போட்டி இல்லாமல் +செய்துவிடும். நீங்களோ உங்கள் போட்டியாளரோ இதில் எதையும் இழக்கவோ பெறவோ +போவதில்லை. இருவரும் மற்ற துறைகளில் போட்டியிடுவீர்கள், ஆனால் இயங்குதளத் +துறையில் ஒருவருக்கொருவர் உதவுவீர்கள். இயங்குதளங்களை விற்பது உங்கள் தொழிலாக +இருந்தால், கனுவை உங்களுக்குப் பிடிக்காது, ஆனால் அது உங்கள் கஷ்டம். உங்களது +தொழில் வேறாக இருந்தால் கனு உங்களை இயங்குதளங்களை விற்கும் விலையுயர்ந்த +வியாபாரத்திலிருந்து காப்பாற்றும்.</p> + +<p> + நான் எதிர்காலத்தில் கனுவின் முன்னேற்றத்திற்குப் பல நிறுவனங்களும், +பயனாளர்களும் உதவி செய்து, ஒவ்வொருவரின் செலவைக் குறைப்பதைக் காண +விரும்புகிறேன்.<a href="#f5">(3)</a></p> + +<p id="deserve"> +<strong>“நிரலாளர்கள் தங்களது படைக்கும் திறனிற்கு வெகுமதி பெறத் +தகுதியற்றவர்களா?”</strong></p> + +<p> + ஏதாவது ஒன்று வெகுமதி பெறத்தக்கது என்றால் அது சமுதாயப் பங்களிப்பே. படைக்கும் +அறிவின் பலன் எவ்வளவு தூரம் சமுதாயத்திற்குத் தடையில்லாமல் கிடைக்கிறது +என்பதைப் பொருத்தே அது சமுதாயப் பங்கா இல்லையா என்று கூற முடியும். நிரலாளர்கள் +தங்களது புதுமையான நிரலாளர்களுக்கு வெகுமதி பெறத் தகுதியானவர்கள் என்றால், அதே +கோணத்தில், அந்த நிரலியின் உபயோகிப்பதை அவர்கள் தடுத்தால் தண்டனைக்கு +உண்டாகவும் தகுதியானவர்களே.</p> + +<p id="reward"> +<strong>“ஒரு பயனாளர் தனது படைக்கும் திறனிற்கு வெகுமதி +கேட்கக்கூடாதா?”</strong></p> + +<p> + செய்த வேலைக்கு காசு கேட்பதில் எந்தத் தவறும் இல்லை. தனது வருமானத்தை அதிகப் +படுத்த நினைப்பதிலும் எந்தத் தவறும் இல்லை. ஆனால் சேதம் விளைவிக்கும் வழிகள் +உபயோகிக்கக்கூடாது. இன்றைய மென்பொருள் உலகத்தில் இது போன்ற சேதம் விளைவிக்கும் +வழிகள்தான் உபயோகிக்கிறார்கள்.</p> + +<p> + ஒரு நிரலியை உபயோகிபவர்களுக்குத் தடை விதித்து காசைச் சுறண்டுவது சேதம் +விளைவிக்கக்கூடியது. ஏனென்றால் இது போன்ற தடைகள், மென்பொருளை உபயோகிக்கக்கூடிய +வாய்ப்புகளைக் குறைகிறது. இத்தடைகள், மனித இனம் அந்த நிரலியிடமிருந்து +பெறக்கூடிய லாபத்தை குறைத்துவிடுகிறது.</p> + +<p> + ஒரு நல்ல குடிமகன் பணக்காரனாவதற்கு இது போன்ற நஷ்டத்தை விளைவிக்கும வழிகளை +உபயோகிக்க மாட்டான். ஏனென்றால், எல்லோரும் இது போலச் செய்தால் நாம் எல்லோரும் +அந்தப் பரஸ்பர சேதங்களால் ஏழைகளாகி விடுவோம். இதுதான் 'Kantian Ethics' அல்லது +'the Golden Rule'. தடைகள் விதிப்பதால் ஏற்படும் விளைவுகள் எனக்குப் +பிடிக்காததால், நான் இதை யார் செய்தாலும் தவறு எனக் கருதுகிறேன்.</p> + +<p id="starve"> +<strong>“நிரலாளர்கள் பட்டினியால் இறந்துவிட மாட்டார்களா?”</strong></p> + +<p> + நிரல் எழுத, யாரும் கட்டாயப் படுத்தப்படவில்லை, என்று நான பதில் +அளிக்கலாம். பலரால் தெருவில் வேஷம் போட்டு நின்று காசு சம்பாதிக்க +முடியாது. இதனால் நாம் யாரும் தெருவில் வேஷம் போட்டு நின்று பசியால் +செத்துப்போவதில்லை. நாம் வேறு ஏதாவது வேலை செய்கிறோம்.</p> + +<p> + ஆனால் அது தவறான பதில். ஏனென்றால் அது கேள்வியாளரின் அனுமானத்தை +ஏற்றுகொள்கிறது: அதாவது மென்பொருளிற்கு உரிமையாளர் என்னும் நிலைமை இல்லாமல் +நிரலாளர்களுக்கு ஒரு நயா பைசாக் கூடக் கிடைக்காது என்ற அனுமானத்தை +ஏற்படுத்தும்.</p> + +<p> + நிரலாளர்கள் பட்டினியால் இறந்துவிடமாட்டார்கள், ஏனென்றால், இன்னமும், இன்றைய +அளவிற்கு இல்லாவிடினும், அவர்களால் நிரல் எழுதி காசு சம்பாதிக்க முடியும்.</p> + +<p> + நகலெடுப்பதில் தடை விதிப்பது மட்டுமே மென்பொருள் வாணிகத்தின் +அடிப்படையில்லை. ஆனாலும் அதனை அடிப்படையாகக் கொள்ளக் காரணம், அதனால் கிடைக்கும் +பெரும் இலாபம்தான். வாடிக்கையாளர்கள் இவ்வடிப்படையை மறுத்தாலோ, தடை செய்தாலோ, +தற்போது மிகவும் குறைந்த அளவில் பின்பற்றப்படும் பல வியாபார முறைகளுக்கு, +இந்நிறுவனங்கள் தாவி விடும். எப்போதுமே, வியாபாரத்தை அமைக்க நூற்றுக்கணக்கான +வழிகள் உள்ளன.</p> + +<p> + இந்தப் புதிய முறைகளில், நிரலாளர் வேலைக்கு ஆடம்பரத் தோற்றம் இராது. அதற்காக +இந்த மாற்றம் தேவையில்லை என்று வாதிடமுடியாது. கிளார்க்குகளின் ஊதியம் குறைவாக +இருப்பதை நாம் அநியாயமாகக் கருதுவதில்லை. அதே அளவு ஊதியத்தைப் நிரலாளர்கள் +பெறுவது அநியாயம் ஆகாது. (அப்பொழுதும் கூட, நடைமுறையில் நிரலாளர்கள் அதிகம் +பெறுவார்கள்).</p> + +<p id="right-to-control"> +<strong>“நிரலாளர்களுக்குத் தங்களது சிருஷ்டிக்கும் அறிவை மற்றவர்கள் எப்படி +உபயோகிக்க வேண்டும் என்பதை நிர்ணயிக்க உரிமை இல்லையா?”</strong></p> + +<p> +“ஒருவரின் எண்ணங்களை மற்றவர்கள் உபயோகிப்பதில் அவருக்கு உள்ள அதிகாரம்” என்பது +மற்றவர்களின் வாழ்க்கையில் பாதிப்பை உண்டாக்குகிறது; அது அவர்களின் வாழ்க்கையை +மேலும் சிக்கலானதாக்குகிறது.</p> + +<p> + அறிவுச் சொத்து (Intellectual Property) பற்றித் தெளிவாகக் கற்றறிந்தவர்கள் +(வழக்கறிஞர்கள் போன்றோர்), உண்மையில் அறிவுச் சொத்து அதிகாரம் என்பது இயற்கையான +அதிகாரம் இல்லை என்று கூறுவர். அரசு ஒப்புக்கொள்ளும் அறிவுச் சொத்து +அதிகாரங்கள், குறிப்பிட்ட சில விஷயங்களுக்காக, மசோதாக்கள் மூலம் +உருவாக்கப்பட்டவை.</p> + +<p> + உதாரணமாக, கண்டுபிடிப்பாளர்கள், தங்கள் கண்டுபிடிப்புகளின் விவரங்களை வெளியிட +ஊக்குவிக்கும் வகையில் காப்புரிமை (patent system) உருவாக்கப்பட்டது. அதன் +குறிக்கோள் சமுதாயம் பயன்பெற வேண்டும் என்பதுதான். அப்போது பதினேழு வருடம் +என்பது தொழில்நுட்ப முன்னேற்ற வேகத்தோடு ஒப்பிட்டால் சிறிதாக இருந்தது (ஒரு +காப்புரிமை பதினேழு வருடங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும்). காப்புரிமை என்பது +பெரும்பாலும் தயாரிப்பாளர்களின் கவலை; அவர்களுக்கு விலையும், அனுமதி +ஒப்பந்தங்களும் தயாரிப்பு கட்டுமானங்களை விட மிகச்சிறியது என்பதால் எந்தவித +பாதிப்புமில்லை. அவை எந்தவொரு தனிமனிதனையும் காப்புரிமை செய்யப்பட்ட பொருளை +உபயோகிப்பதைத் தடை செய்வதில்லை.</p> + +<p> + முற்காலத்தில் அச்சுரிமை (copyright) என்னும் ஒரு முறை கிடையாது. அப்பொழுது +அடிக்கடி எழுத்தாளர்கள் மற்றவர்களின் படைப்பிலிருந்து தேவையான பகுதிகளை எடுத்து +உபயோகித்தார்கள். இந்தப பழக்கம் பல எழுத்தாளர்களுக்கு நன்மை +விளைவித்தது. இந்தப் பழக்கத்தால்தான் இன்னமும் பல எழுத்தாளர்களின் படைப்புகள் +நம்மிடையே நிலைத்திருக்கின்றன. புத்தகங்கள் எழுதுவதை ஆதரிப்பதற்காகத்தான் +அச்சுரிமை உருவாக்கப்பட்டது. அது உருவாக்கப்பட்டது +புத்தகங்களுக்காக. புத்தகங்களைச் சிக்கனமாக அச்சகத்தில்தான் நகல் செய்ய +முடிந்தது. இதனால் வாசகர்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை.</p> + +<p> + எல்லா அறிவுச்சொத்து அதிகாரங்களும் சமுதாயத்தின் பொதுநலம் கருதி, சமுதாயத்தால் +அளிக்கபட்ட உரிமங்கள் தான். ஆனால் எந்த ஒரு சூழ்நிலையிலும், நாம் +கேட்கவேண்டியது: இது போன்ற உரிமங்களைக் கொடுப்பது நமக்கு பயன் அளிக்கின்றதா? +என்ன மாதிரி அதிகாரங்களுக்கு நாம் உரிமம் அளிக்கிறோம்?</p> + +<p> + தற்கால நிரலாளர்களின் நிலை, நூறு வருடங்களுக்கு முன்புள்ள புத்தகங்களிலிருந்து +மிகவும் வேறுபட்டிருக்கிறது. ஒரு நிரலை ஒருவரிடம் இருந்து ஒருவர் எளிதாக நகல் +எடுப்பது, ஒரு நிரலின் இலக்கு நிரல் (Object code) மற்றும் மூலக் குறிமுறைகள் +வேறு வேறாக இருப்பது, ஒரு நிரலை வாசித்து மகிழ்வதைக் காட்டிலும் அதனை +உபயோகப்படுத்துவது, இவையெல்லாம் இணைந்து அந்த நிரலியின் உரிமையாளர் அச்சுரிமையை +அமல்செய்யும் பொழுது மனதளவிலும் பொருளளவிலும் சமுதாயத்தைச் சீரழிக்கும் +சூழ்நிலையை உருவாக்குகின்றன; அந்தச் சூழ்நிலையில் சட்டம் அனுமதித்தாலும் கூட +அவர் அதைச் செய்யக்கூடாது.</p> + +<p id="competition"> +<strong>“போட்டியே ஒரு செயல் சிறப்பாகச் செயல்பட +உறுதுணையாயிருக்கும்.”</strong></p> + +<p> + போட்டிக்கு ஒரு சிறந்த உதாரணம் ஓட்டப்பந்தயம். வெற்றி பெறுவோர்க்கு +பரிசளிப்பதன் மூலம் நாம் எல்லோரையும் வேகமாக ஓட ஊக்கமளிக்கிறோம். ஓடுகிறவர், +எதற்காகப் பரிசு வழங்கப்படுகிறது என்பதை மறந்துவிட்டு, வெற்றி இலக்கை மட்டுமே +குறிவைத்து ஓடினால், அவர் பிற போட்டியாளர்களைச சமாளிப்பதற்குப் பல +தந்திரங்களைக் கையாளக்கூடும் - உதாரணமாக, மற்ற போட்டியாளர்களைத் +தாக்குவது. ஒருவேளை போட்டியாளர்கள் கைச்சண்டையில் ஈடுப்பட்டார்களேயானால் +அவர்கள் எல்லோரும பின்தங்க வேண்டிய நிலை வரும்.</p> + +<p> + தனியுரிமை (proprietary) மென்பொருள மற்றும் இரகசிய மென்பொருள் இரண்டும், +கைச்சண்டையிடும் போட்டியாளர்களுக்கு ஒப்பான உதாரணங்களாகும். கவலைக்குரியது +என்னவென்றால், நம்மிடம் இருக்கும் ஒரே நடுவரும் சண்டையை நெறிபடுத்துகிறாரே தவிர +தடுப்பதில்லை (ஒவ்வொரு 10 அடிக்கும் ஒரு குத்து குத்தலாம்). ஆனால் அவர் +உண்மையில் சண்டையை நிறுத்தி அதற்குக் காரணமான போட்டியாளர்களைத் தண்டிக்க +வேண்டும்.</p> + +<p id="stop-programming"> +<strong>“ஊக்கத்தொகை இல்லாததால் நிரலாளர்கள் நிரல் எழுதுவதை +நிறுத்திவிடமாட்டார்களா?”</strong></p> + +<p> + வாஸ்தவமாக, எந்தவிதமான ஊக்கத்தொகையும் எதிர்பாராமல் பலர் நிரல் +எழுதுவார்கள். பொதுவாக நிரல் எழுதுவதில் மிகச்சிறந்தவர்களுக்கு அதில் தவிர்க்க +முடியாத மோகம் உள்ளது. சங்கீதத்தின் மூலம் வாழ்க்கையை நடத்தும் கட்டாயம் +இல்லாவிட்டாலும் கூட, பல சங்கீத மேதைகளுக்குச் சங்கீதத்தில் உள்ள ஈடுபாடு +குறைவதில்லை.</p> + +<p> + இந்தக் கேள்வி பலர் மத்தியில் எழுந்தாலும், இது சரியான கேள்வி +கிடையாது. ஏனென்றால், நிரலாளர்களுக்கு ஊதியம் குறையுமே தவிர +மறைந்துவிடாது. அதனால், சரியான கேள்வி என்னவென்றால், குறைந்த ஊக்கத்தொகையை +நிரலாளர்கள் ஏற்பார்களா? அவர்கள் ஏற்பார்கள் என்று எனது அனுபவம் சொல்கிறது.</p> + +<p> + பத்து வருடங்களுக்கு மேலாக உலகத்தின் தலை சிறந்த நிரலாளர்கள் MITயின் AI +ஆய்வகத்தில் எங்கும் கிடைத்திராத மிகக் குறைந்த ஊதியத்திற்குப் +பணியாற்றினர். அவர்களுக்கு ஊதியத்தைத் தவிர மற்ற ஊக்க விருதுகள் +கிடைத்தன. உதாரணத்திற்குப் புகழ் மற்றும் பாராட்டு. மேலும், படைப்பு +மகிழ்ச்சியைத் தரக்கூடியது, அதுவே ஒரு விருதாகும்.</p> + +<p> + பின்னர், கூடுதல் ஊதியத்திற்கு இதே மாதிரி வேலையைச் செய்ய வாய்ப்பு கிடைத்ததால் +பலர் வெளியேறினர்.</p> + +<p> + நிரலாளர்கள் பணத்தைத் தவிர மற்ற காரணதிற்காகவும் நிரல் எழுதுவார்கள் என்பதை +இந்த நிகழ்ச்சிகள் காட்டுகின்றன. குறைந்த ஊதியத்தை அளிக்கும் கூட்டமைப்புகள், +அதிக ஊதியத்தை அளிக்கும் அமைப்புகளுடன் போட்டியிடத் திணறுகின்றனர். ஆனால், அதிக +ஊதியத்தை அளிக்கும் அமைப்புகள் ஒடுக்கப்பட்டால், அவர்கள மோசமாக செயல்பட +வேண்டியதில்லை.</p> + +<p id="desperate"> +<strong>“எங்களுக்கு நிரலாளர்கள் மிகவும் தேவை. நாங்கள் பிறருக்கு உதவக் கூடாது +என்று நிரலாளர்கள் வாதிட்டால், அதனை நாங்கள் ஏற்றுக்கொள்ளத்தான் +வேண்டும்.”</strong></p> + +<p> + இது போன்ற வாதங்களை ஏற்றுக்கொள்ள வேண்டிய அளவிற்கு உங்கள் நிலைமை எப்பொழுதும், +மோசமாக இருக்காது. நினைவில் கொள்ளுங்கள்: கப்பம் கட்டுவதைவிட விடுதலைக்காகப் +போராடுவதே சிறந்தது!</p> + +<p id="living"> +<strong>“நிரலாளர்கள் எப்படியாவது வாழ்க்கையை நடத்த வேண்டுமே.”</strong></p> + +<p> + புதிய முறையை ஏற்றுக்கொண்ட பிறகு, தொடக்கத்தில் இது உண்மையாக +இருக்கும். எனினும் நிரலாளர்கள் நிரலியின் உரிமத்தை விற்பதைத் தவிர வேறு பல +வழிகளின் மூலம் வாழ்க்கையை நடத்தலாம். உரிமத்தை விற்பது இப்போது வழக்கமாக +உள்ளது, ஏனென்றால், அது அதிகமான லாபத்தைத் தரக்கூடியதே தவிர, அது நிரல்கள் +மூலம் சம்பாதிப்பதற்கு ஒரே வழி கிடையாது. மற்ற வழிகள் தேடினால் எளிதாகக் +கிடைக்கும். இதோ சில எடுத்துக்காட்டுகள்.</p> + +<p> + கணினி தயாரிப்பாளர்கள் புது கணினியை அறிமுகப்படுத்தும் பொழுது, அந்தக் +கணினியில் இயங்குதளங்களை இயங்கவைப்பதற்கு நிரலாளர்களுக்குக் காசு +கொடுப்பார்கள்.</p> + +<p> + நிரலியைக் கற்பிப்பதும், பராமரிப்பதும நிரலாளர்களுக்கு உத்தியோகம் அளிக்கலாம்.</p> + +<p> + புதிய எண்ணங்களை உடையோர் தங்களது நிரலை இலவசமாகக் கொடுத்து, திருப்தி +அடைந்தவர்களிடமிருந்து நன்கொடைகள் கேட்கலாம். இது போல வெற்றிகரமாக வழி +நடத்துபவர்களை நான் சந்தித்துள்ளேன்.</p> + +<p> + சம்பந்தப்பட்ட தேவைகளை உடையோர் குழுக்கள் அமைத்து சந்தா கட்டலாம். அந்தக் +குழுக்கள் நிரல் எழுதும் நிறுவனத்துடன் ஒப்பந்தம் வைத்து அவர்களுக்குத் தேவையான +நிரல்களை எழுதலாம்.</p> + +<p> + எல்லா விதமான மென்பொருள் தயாரிப்பிற்கும் மென்பொருள் வரி மூலம் நிதி திரட்டலாம்</p> + +<p> + கணினி வாங்கும் ஒவ்வொருவரும் அதன் விலையில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை +மென்பொருள் வரியாகக் கட்ட வேண்டும்.</p> + +<p> + கணினி வாங்குபவர் தானாகவே மென்பொருள் தயாரிப்பிற்கு நன்கொடைகள் கொடுக்கிறார் +என்றால, அவர் வரி கட்ட வேண்டியதில்லை. அவர் அவருக்கு விருப்பமான +செயல்திட்டத்திற்கு நன்கொடை கொடுக்கலாம. அவர் நன்கொடை கொடுத்த அளவிற்கு வரி +கட்டத் தேவையில்லை.</p> + +<p> + மொத்த வரியின் சதவீதத்தை வரி கட்டுபவர்களின் வாக்களிப்பின் மூலம் தீர்மானம் +செய்யலாம்.</p> + +<p> + இதன் விளைவுகள்:</p> + +<ul> +<li>கணினி உபயோகிப்பவர்கள் மென்பொருள் தயாரிப்பிற்கு நிதி அளிக்கிறார்கள்.</li> +<li>எந்த அளவிற்கு ஆதரவு தேவை என்பதை அவர்களே முடிவு செய்கிறார்கள்.</li> +<li>எந்தச் செயல்திட்டத்திற்குத் தங்களது பங்கு செல்ல வேண்டும் என்பதைப் பற்றிக் +கவனமாக இருப்பவர்கள், அவர்கள் விரும்பியதைத் தேர்ந்தேடுக்கலாம்.</li> +</ul> +<p> + காலப்போக்கில், தேவைகளுக்காக மிகக்கடினமாக யாரும் உழைக்கத் தேவையில்லாத நிலையை +ஏற்படுத்துவதற்குச் சுதந்திர மென்பொருள், ஒரு முதற்படியாக இருக்கும். மக்கள், +ஒரு வாரத்தில், பத்து மணி நேரங்களில் தங்கள் தினசரி வேலைகளை முடித்து விட்டு, +மற்ற நேரங்களை, மென்பொருள் தயாரித்தல் போன்ற கேளிக்கைகளில் +செலவிடலாம். மென்போருள் தயாரித்து வாழ்க்கையை வாழ வேண்டிய அவசியம் இருக்காது.</p> + +<p> + ஏற்கனவே, தேவையான உற்பத்திக்குச் சமுதாயம் செய்யவேண்டிய வேலைப்பளுவை நாம் +முடிந்தமட்டும் குறைத்து விட்டோம். ஆனால், இவற்றில் சிறிதளவே தொழிலாளர்கள +விரும்பிச் செய்வதாக மாற்றமடைந்துள்ளது. ஏனென்றால் உற்பத்தித் திறன் மிகுந்த +செயல்களுக்கு அதிக அளவில் உற்பத்தித் திறனற்ற செயல்கள் தேவப்படுகின்றன. இதற்கு +முக்கிய காரணங்கள் அதிகாரத்துவமும் போட்டிகளினால் ஏற்படும் தொய்வும் +ஆகும். மென்பொருள் உற்பத்தியில் இதுபோல வீணாகும் உழைப்புகளைச் சுதந்திர +மென்பொருள் முடிந்த மட்டும் குறைத்துவிடும். உற்பத்தித்திறனில் தொழில்நுட்ப +இலாபம் பெற்று அதை நமக்குக் குறைந்த விலையாக்கிட நாம் இதைச் செய்தாக வேண்டும்.</p> + +<h3 id="footnotes">பின்குறிப்புகள்</h3> + +<!-- The anchors do not match the actual footnote numbers because of + revisions over time. And if a new footnote is added, the references + to existing footnotes that follow the new one must be changed. --> +<ol> + +<li id="f3">இது போன்ற பல நிறுவனங்கள் இப்போது உள்ளன.</li> + +<li id="f4">தளையறு மென்பொருட்கள் அமைப்பு (Free Software Foundation) ஒரு நிறுவனத்தைப் +போல் அல்லாமல் அறக்கட்டளையாக இருந்தாலும் தனக்கான நிதியை பெரும்பாலும் +விநியோகச் சேவையின் மூலமாகத்தான் ஈட்டுகிறது. ஒருவேளை *யாரும்* <a +href="/order/order.html">FSFல் இருந்து நகல்களைப்</a> பெறவில்லை என்றால் +இவ்வமைப்பு இயங்க முடியாமல் போகலாம். அதற்காக உரிமக் கட்டுப்பாடுகள் ஒவ்வொரு +பயனாளரையும் வாங்கச் சொல்லி சாந்தப்படுத்தும் என்பதாகாது. உலகப் பயனாளர்களில் +ஒரு சிறிய பங்கினர் FSF இடம் நகல்களை வாங்கினாலே போதும். FSF சீராக +இயங்கும். எனவே பயனாளர்கள் இந்த வழியில் எங்களுக்கு ஆதரவு அளிக்குமாறு +வேண்டுகிறோம். நீங்கள் உங்கள் பங்களிப்பைத் தந்துவிட்டீர்களா? +</li> + +<li id="f5">சமீபத்தில் கணினி நிறுவனங்களில் ஒரு சாரார் GNU C compilerஐப் பராமரிக்க நிதியை +அள்ளிக் கொடுத்துள்ளனர்.</li> + +</ol> + +<div class="translators-notes"> + +<!--TRANSLATORS: Use space (SPC) as msgstr if you don't have notes.--> + </div> +</div> + +<!-- for id="content", starts in the include above --> +<!--#include virtual="/server/footer.ta.html" --> +<div id="footer"> +<div class="unprintable"> + +<p>FSF & GNU தொடர்பான வினவல்களை <a +href="mailto:gnu@gnu.org"><gnu@gnu.org></a> அனுப்பவும். FSF ஐ <a +href="/contact/">தொடர்பு கொள்ளும் வேறு வழிகளும்</a> உண்டு. துண்டிக்கப்பட்ட +இணைப்புகள், திருத்தங்கள், பரிந்துரைகள் உள்ளிட்டவற்றை <a +href="mailto:webmasters@gnu.org"><webmasters@gnu.org></a> என்ற +முகவரிக்கு அனுப்பவும்.</p> + +<p> +<!-- TRANSLATORS: Ignore the original text in this paragraph, + replace it with the translation of these two: + + We work hard and do our best to provide accurate, good quality + translations. However, we are not exempt from imperfection. + Please send your comments and general suggestions in this regard + to <a href="mailto:web-translators@gnu.org"> + + <web-translators@gnu.org></a>.</p> + + <p>For information on coordinating and submitting translations of + our web pages, see <a + href="/server/standards/README.translations.html">Translations + README</a>. --> +இந்த கட்டுரையின் மொழிபெயர்ப்பை ஒருங்கிணைப்பது, சமர்ப்பிப்பது தொடர்பான +விவரங்களுக்கு <a +href="/server/standards/README.translations.html">மொழிபெயர்ப்புகள் README +கோப்பைக்</a> காணவும்.</p> +</div> + +<!-- Regarding copyright, in general, standalone pages (as opposed to + files generated as part of manuals) on the GNU web server should + be under CC BY-ND 4.0. Please do NOT change or remove this + without talking with the webmasters or licensing team first. + Please make sure the copyright date is consistent with the + document. For web pages, it is ok to list just the latest year the + document was modified, or published. + If you wish to list earlier years, that is ok too. + Either "2001, 2002, 2003" or "2001-2003" are ok for specifying + years, as long as each year in the range is in fact a copyrightable + year, i.e., a year in which the document was published (including + being publicly visible on the web or in a revision control system). + There is more detail about copyright years in the GNU Maintainers + Information document, www.gnu.org/prep/maintain. --> +<p>Copyright © 1985, 1993 Free Software Foundation, Inc. (கட்டற்ற +மென்பொருள் அறக்கட்டளை, நிறுவப்பட்டது.)</p> + +<p> +Permission is granted to anyone to make or distribute verbatim copies of +this document, in any medium, provided that the copyright notice and +permission notice are preserved, and that the distributor grants the +recipient permission for further redistribution as permitted by this notice. +<br /> +Modified versions may not be made. +</p> + +<!--#include virtual="/server/bottom-notes.ta.html" --> + +<p class="unprintable"><!-- timestamp start --> +புதுப்பிக்கப் பட்ட விவரம்: + +$Date: 2019/06/23 15:24:26 $ + +<!-- timestamp end --> +</p> +</div> +</div> +</body> +</html> |