why-free.html (42851B)
1 <!--#set var="PO_FILE" 2 value='<a href="/philosophy/po/why-free.ta.po"> 3 https://www.gnu.org/philosophy/po/why-free.ta.po</a>' 4 --><!--#set var="ORIGINAL_FILE" value="/philosophy/why-free.html" 5 --><!--#set var="DIFF_FILE" value="" 6 --><!--#set var="OUTDATED_SINCE" value="2009-10-18" --> 7 8 <!--#include virtual="/server/header.ta.html" --> 9 <!-- Parent-Version: 1.77 --> 10 11 <!-- This file is automatically generated by GNUnited Nations! --> 12 <title>மென்பொருட்கள் ஏன் உரிமையாளர்களைக் கொண்டிருத்தலாகாது - குனு திட்டம் - கட்டற்ற 13 மென்பொருள் அறக்கட்டளை</title> 14 15 <meta name="Keywords" content="GNU, GNU Project, FSF, Free Software, Free Software Foundation, Why Software Should Not Have Owners" /> 16 17 <!--#include virtual="/philosophy/po/why-free.translist" --> 18 <!--#include virtual="/server/banner.ta.html" --> 19 <!--#include virtual="/server/outdated.ta.html" --> 20 <h2>மென்பொருட்கள் ஏன் உரிமையாளர்களைக் கொண்டிருத்தலாகாது</h2> 21 22 <p>ஆசிரியர்: <a href="http://www.stallman.org/"><strong>ரிச்சர்ட் 23 எம். ஸ்டால்மேன்</strong></a></p> 24 25 <p> 26 டிஜிட்டல் தகவல் தொழில்நுட்பம் தகவல்களை நகலெடுப்பதையும் மாற்றுவதையும் 27 எளிமையாக்குவதன் மூலம் உலகிற்கு தம் பங்கினையாற்றுகிறது. கணினிகள் இதனை நம் 28 அனைவருக்கும் எளிமையாக்க உறுதியளிக்கின்றன.</p> 29 30 <p> 31 அனைவரும் இவை இப்படி எளிமையாக இருந்துவிட விரும்புவதில்லை. பதிப்புரிமை 32 முறையானது மென்பொருள் நிரல்கட்கு “ சொந்தக் காரர்களைக் ” 33 கொடுக்கிறது. இவர்களில் பெரும்பான்மையானோர் மென்பொருளின் ஆக்கப் பூர்வமான பயன் 34 இதர மக்களுக்குச் சென்றடையா வண்ணம் தடை ஏற்படுத்தவே 35 தீர்மானிக்கிறார்கள். இவர்கள் தாங்கள் மாத்திரமே நாம் பயன் படுத்தும் 36 மென்பொருளை நகலெடுக்கவும் மாற்றவும் இயல வேண்டும் என ஆசைப் படுகிறார்கள்.</p> 37 38 <p> 39 பதிப்புரிமைச் சட்டம் அச்சுத் துறையோடு வளர்ந்தது. இத் துறை மிகப் பெரிய அளவில் 40 நகலுற்பத்தி செய்வதற்கான ஒரு தொழில்நுட்பமாகும். மிகப் பெரிய அளவில் 41 நகலெடுப்போரைத் தடுப்பதால் இத்தொழில்நுட்பத்திற்குப் பதிப்புரிமை பொருந்துகிறது 42 . வாசிப்போரின் சுதந்தரத்தை இது தடை செய்து விடவில்லை. அச்சகம் எதையும் நடத்த 43 இயலாத சாதாரண வாசகர் புத்தகங்களை பேனா மையின் துணைக் கொண்டே நகலெடுக்க 44 முடியும். இதற்காக சிலர் வழக்குகளை சந்திக்க நேர்ந்ததுமுண்டு.</p> 45 46 <p> 47 அச்சுத் துறையையோடு ஒப்பிடுகையில் டிஜிட்டல் தொழில் நுட்பம் வளைந்துக் கொடுக்க 48 வல்லது. தகவலானது டிஜிட்டல் வடிவத்தில் கிடைக்கும் பொழுது பிறரோடு பகிர்ந்துக் 49 கொள்வது சுலபமாகிறது . வளைந்துக் கொடுக்கும் இத்தன்மையால் பதிப்புரிமைப் 50 போன்றச் சட்டங்களுடன் இசைவது கடினமாகிறது. கொடுங்கோன்மையோடுக் கூடிய மட்டமான 51 முறைகளைக் கையாண்டு மென்பொருளுக்கான பதிப்புரிமையை நிலைநாட்ட முயலும் 52 முயற்சிகளுக்கு இதுவே காரணமாகிறது. . மென்பொருள் பதிப்புக் கூட்டமைப்பின் 53 (மெ.ப.கூ) கீழ்காணும் நான்கு வழக்கங்களைக் கருத்தில் நிறுத்துங்கள்.</p> 54 55 <ul> 56 <li>தங்கள் நண்பருக்கு தாங்கள் உதவுவது உருவாக்கியவருக்கு அடிபணியாதச் செயல் என்றத் 57 தீவிரப் பிரச்சாரம்.</li> 58 59 <li>உடன் பணிபுரிவோர் குறித்து துப்பு கொடுப்போருக்கு பரிசளிப்பது.</li> 60 61 <li>உடன் பணிபுரிவோர் குறித்து துப்பு கொடுப்போருக்கு பரிசளிப்பது.</li> 62 63 <li>நகலெடுத்ததற்காக அல்ல மாறாக நகலெடுக்கும் வசதிகளை காக்காமலும் அதன் 64 பயன்பாட்டைத் தடுக்காமலும் சென்றமைக்காக <abbr title="Massachusetts Institute 65 of Technology">எம்.ஐ.டியின்</abbr> டேவிட் லாமசியா போன்றோர் மீது வழக்குத் 66 தொடுத்தமை. (மெ.ப.கூ வின் தூண்டுதலின் பெயரில் யு.எஸ் அரசு செய்தது.)</li> 67 </ul> 68 69 <p> 70 இந்நான்கு முறைகளும் முன்னாள் சோவியத் யூனியனில் நடைமுறையிலிருந்த பழக்கங்களை 71 ஒத்திருக்கின்றன. அங்கே நகலெடுக்கும் ஒவ்வொரு கருவியும் தடைசெய்யப் பட்ட 72 முறையில் நகலெடுப்பதை தடுக்கும் பொருட்டு காவலாளிகளைக் கொண்டிருக்கும். “ 73 சமிசட் ” ஆக தகவலை நகலெடுத்து இரகசியமாக ஒவ்வொருவரும் கைமாற்ற வேண்டும். ஒரு 74 சிறிய வேறுபாடுண்டு. சோவியத் யூனியனில் தகவல் கட்டுப்பாட்டின் நோக்கம் 75 அரசியல். யு.எஸ் ஸில் இதன் நோக்கம் இலாபம். நோக்கங்களைக் காட்டிலும் செயல்களே 76 நம்மைப் பாதிக்கின்றன. தகவல்களைப் பகிர்ந்துக் கொள்வதை தடுக்கும் எந்தவொரு 77 முயற்சியும் ஒரேவிதமான முறைகளுக்கும் முரட்டுத் தன்மைகளுக்கும் இட்டுச் 78 செல்கின்றன.</p> 79 80 <p> 81 தகவல்களை நாம் எவ்வாறு பயன்படுத்த வேண்டுமென்பதை தீர்மானிக்கும் அதிகாரம் 82 தங்களுக்கு தரப்பட வேண்டும் என உரிமையாளர்கள் பலக் காரணங்களை முன்வைக்கிறாரகள்:</p> 83 84 <ul> 85 <li id="name-calling">பெயர் சூட்டிக் கொள்ளுதல் 86 87 <p> 88 மக்களை ஒரு குறிப்பிட்டக் கோணத்தில் சிந்திக்க வைப்பதன் பொருட்டு 89 “திருட்டுத்தனம்”, “போலித்தனம்” முதலிய தரம் தாழ்ந்த சொற்களையும், “அறிவுசார் 90 சொத்து”, “சேதம்” முதலிய அறிவாளித்தனமான பதங்களையும் உரிமையாளர்கள் 91 பயன்படுத்துகிறார்கள். நிரல்களுக்கும் பௌதீக பொருட்களுக்கும் இடையேயுள்ள சாதாரண 92 ஒப்புமைக் குறித்து..</p> 93 94 <p> 95 திடப் பொருள் சார்ந்த சொத்து குறித்த நமது சிந்தனைகளும் கண்ணோட்டங்களும் 96 பிறரிடமிருந்து ஒரு பொருளைக் கவர்வது சரியா என்பதைப் பற்றியது. இதனை ஒரு பொருளை 97 நகலெடுப்பதற்கு அப்படியே பொருத்த இயலாது. ஆனால் உரிமையாளர்கள் எப்பாடுபட்டாவது 98 அங்ஙனம் பொருத்தக் கோருகிறார்கள்.</p></li> 99 100 <li id="exaggeration">மிகைப்படுத்துதல். 101 102 <p> 103 பயனர்கள் தாங்களாகவே நிரல்களை நகலெடுக்கும் போது, பொருளாதார இழப்புகளும் 104 தீமைகளும் தங்களுக்கு நேருவதாக உரிமையாளர்கள் சொல்கிறார்கள்.ஆனால் நகலெடுப்பது 105 உரிமையாளரின் மீது எவ்விதமான நேரடி பாதிப்பை ஏற்படுத்துவதும் கிடையாது, 106 யாருக்கும் தீங்கு விளைவிப்பதும் கிடையாது.மாறாக நகலெடுத்த ஒருவர் 107 உரிமையாளரிடமிருந்து நகலொன்று பெற்றமைக்காக ஏதாவதுக் கொடுத்திருந்தால் 108 வேண்டுமாயின் உரிமையாளருக்கு இழப்பு ஏற்படலாம்.</p> 109 110 <p> 111 சிறிது யோசித்துப் பார்த்தால் இத்தகைய மக்கள் நகல்களை வாங்கியிருக்க 112 மாட்டார்கள். ஆயினும் ஒவ்வொருவரும் நகலை வாங்கியிருக்கக் கூடும் என பாவித்துக் 113 கொண்டு உரிமையாளர்கள் அவர்களின் “நஷ்டத்தை” கணக்கெடுப்பார்கள். மிகைப் 114 படுத்துதல் என இதனை மிகச்சாதாரணமாகச் சொல்லலாம்.</p></li> 115 116 <li id="law">சட்டம். 117 118 <p> 119 உரிமையாளர்கள் தற்போதைய சட்டத்தின் நிலைமையையும், கிடைக்கக் கூடிய கடுமையான 120 தண்டனைகளையும் அடிக்கடிச் சொல்லி பயமுறுத்துகிறார்கள். இவ்வணுகுமுறையில் 121 உட்பொதிந்த விடயம் யாதெனின் இன்றையச் சட்டம் கேள்விகளுக்கப்பாற்பட்ட அறங்களை 122 பிரதிபலிக்கின்றன என்பதே. ஆனால் அதே சமயம் இத்தண்டனைகளை இயற்கையின் நியதிகளாக 123 யார் மீதும் குறைகூறாத படிக்கு கருதுமாறு நாம் பணிக்கப் படுகின்றோம்.</p> 124 125 <p> 126 தாஜா செய்யும் இப்போக்கானது கூர்ந்த சிந்தனையின் முன் நிற்பதற்கு 127 திராணியற்றது. பழக்கவழக்கத்தால் ஏற்பட்ட மனம்போன பாதைகளை மீண்டும் சுமத்த 128 முற்படுகிறது.</p> 129 130 <p> 131 சரியாத் தவறா என்பதை சட்டங்கள் தீர்மானிக்காது என்பது பிள்ளைப் பாடம். நாற்பது 132 ஆண்டுகளுக்கு முன்னர் கருப்பினத்தைச் சார்ந்த ஒருவர் பேருந்தின் முற்பகுதியில் 133 அமர்வது அமேரிக்காவின் பல மாகாணங்களில் சட்டப் படி தவறாகும். ஆனால் நிறவெறிப் 134 பிடித்தவர்கள் மாத்திரமே அப்படி உட்கார்வதை தவறெனச் சொல்லுவார்கள்.</p></li> 135 136 <li id="natural-rights">இயற்கை உரிமங்கள் 137 138 <p> 139 தாங்கள் எழுதிய நிரல்களோடு தங்களுக்கு ஏதோ சிறப்பான தொடர்பு இருப்பதாகவும் அதன் 140 காரணமாக தங்களின் விருப்பங்களும் ஈடுபாடுகளும் மற்ற எவருடையதைக் காட்டிலும் 141 ,ஏன் ஒட்டு மொத்த உலகத்தைக் காட்டிலும் மேலானது எனவும் இயற்றியவர்கள் உரிமைக் 142 கோருகிறார்கள். (சொல்லப் போனால் தனி நபர்களைக் காட்டிலும் நிறுவனங்களே 143 மென்பொருட்களின் மீது பதிப்புரிமைக் கொள்கின்றன. இம் மாறுபாட்டைப் புறந்தள்ள 144 நாம் எதிர்பார்க்கப் படுகிறோம்.)</p> 145 146 <p> 147 தங்களைக் காட்டிலும் இயற்றியவரே மேலானவர் என்றும் இதனை அறத்தின் கூற்றாகவும் 148 தாங்கள் சொன்னால், பிரபலமான நிரலாளராகக் கருதப் படும் நான் உங்களுக்கு இதைப் 149 புதைகுழி என்றுதான் சொல்ல வேண்டும்.</p> 150 151 <p> 152 பொதுவாக இரண்டு காரணங்களுக்காக மக்கள் இயற்கையான உரிமங்களின் மீதான 153 கோரிக்கைகளுக்கு அனுதாபம் கொண்டு விளங்குகிறார்கள்.</p> 154 155 <p> 156 புலன் நுகர் பொருட்களொடு மிகையாக ஒப்பு நோக்குவது இதற்கான முதற் காரணம். நான் 157 ஸ்பகெட்டி சமைத்தால், இன்னொருவர் அதை சாப்பிட்டால், என்னால் அதைச் சாப்பிட 158 முடியாத காரணத்தால், நிச்சயம் எதிர்ப்பேன். அவருடைய செயல் அவருக்கு எவ்வளவு 159 சாதகமாக அமைகிறதோ அதே அளவு எமக்கு பாதகமாகவும் அமைகிறது.ஆக எங்களில் ஒருவர் 160 தான் ஸ்பகட்டியை சாப்பிட முடியும். என்ன செய்ய? தார்மீக சமன்பாட்டை அடைய 161 எங்களுக்குள் இருக்கும் சிறு வேறுபாடு போதுமானது.</p> 162 163 <p> 164 நான் எழுதிய நிரலொன்றை தாங்கள் இயக்குவதும் மாற்றுவதும் தங்களை நேரடியாகவும் 165 என்னை மறைமுகமாகவும் தான் பாதிக்கின்றன. அதன் நகலொன்றை தாங்கள் தங்கள் 166 நண்பரொருவருக்குத் தருவதென்பது என்னை பாதிப்பதைக் காட்டிலும் தங்களையும் தங்கள் 167 நண்பரையுமே அதிகமாக பாதிக்கின்றது. இதைச் செய்யக் கூடாதென்று தங்களைச் சொல்ல 168 எனக்கு அதிகாரமில்லை. யாருக்கும் தான்.</p> 169 170 <p> 171 இரண்டாவது காரணம் இயற்றியவர்களுக்கான இயற்கை உரிமமென்பது ஏற்கப்பட்ட, 172 கேள்விகளுக்கப்பாற்பட்ட நமது சமூகப் பாரம்பரியம் என மக்களுக்கு புகட்டப் 173 பட்டுள்ளது. </p> 174 175 <p> 176 வரலாற்றைப் பார்த்தல் இதன் மறுபக்கமே உண்மையாகும். யு.எஸ் ஸின் அரசியல் சாசனம் 177 இயற்றப் பட்ட போது இயற்கை உரிமங்கள் குறித்த சிந்தனைகள் பரிந்துரைக்கப் பட்டு 178 உறுதியாக நிராகரிக்கவும் பட்டன. அதனால் தான் அரசியல் சாசனமானது பதிப்புரிமை 179 முறையைத் தேவையானதாகக் கொள்ளாது அம்முறைக்குஅனுமதி மட்டும் வழங்குகிறது.அதனால் 180 தான் பதிப்புரிமையை தற்காலிகமானதாகப் பகற்கிறது. பதிப்புரிமையின் நோக்கம் 181 முன்னேற்றம் காணவேயன்றி இயற்றியவர்களுக்கு பரிசளிப்பதல்ல எனவும் 182 சொல்கிறது. பதிப்புரிமை இயற்றியோருக்குச் சிறிய அளவிலும் பதிப்பிப்போருக்குப் 183 பெரிய அளவிலும் பயனளிக்கிறது.</p> 184 185 <p> 186 நமது சமூகத்தின் நிரூபிக்கப் பட்ட மரபோ பதிப்புரிமை பொது மக்களின் இயற்கை 187 உரிமங்களுக்கு தடை விதிக்கின்றது என்பதேயாகும். மேலும் இது பொது மக்களின் 188 பொருட்டு மட்டுமே நியாயப் படுத்த வல்லது.</p></li> 189 190 <li id="economics">பொருளாதாரம். 191 192 <p> 193 இது மென்பொருட்கள் உற்பத்திக்கு மென்மேலும் வித்திடும் என்பதே மென்பொருட்கள் 194 உரிமையாளர்களைக் கொண்டிருக்கலாம் என்பதற்கு கடைசியாக முன் வைக்கப்படும் வாதம்.</p> 195 196 <p> 197 மற்றவைகளோடு ஒப்பிடுகையில் இவ்வாதம் சற்றே உருப்படியான அணுகுமுறையைக் கொண்டு 198 விளங்குகிறது. மென்பொருட்களைப் பயன்படுத்தும் பயனர்களைத் திருப்தி 199 படுத்தவேண்டும் எனும் ஏற்கத் தக்க ஒரு இலக்கினை ஆதாரமாகக் கொண்டுள்ளது. அதிகமான 200 சம்பளம் கொடுக்கப் பட்டால் அங்ஙனம் கொடுக்கப்படுகிற காரணத்தால் மக்கள் அதிகமாக 201 உருவாக்குவார்கள் என்பது அனுபவப் பூர்வமாகத் தெளிவாகிறது.</p> 202 203 <p> 204 ஆனால் இப்பொருளாதாரக் கூற்றும் தன்னிடத்தே ஒரு குறையைக் கொண்டு 205 விளங்குகிறது. அது நாம் எவ்வளவு விலைக் கொடுக்க வேண்டியுள்ளது என்பதுதான் 206 வேறுபாடு எனும் அனுமானத்தை ஒட்டி அமைகிறது.“மென்பொருள் உற்பத்தியினையே” நாம் 207 வேண்டுகிறோம் என்றும், உரிமையாளர்களைக் கொண்டிருக்கின்றதா இல்லையா என்பதைப் 208 பற்றி அல்ல என்றும் அது அனுமானம் கொள்கிறது.</p> 209 210 <p> 211 புலன் நுகர் பொருட்களுடனான தமது அனுபவங்களுடன் ஒத்துப் போவதன் காரணமாக மக்களும் 212 இவ்வனுமானங்களை உடனே ஏற்றுக் கொண்டு விடுகிறார்கள். ஒரு சான்ட்விச்சினை 213 உதாரணத்துக்கு எடுத்துக் கொள்வோம். தங்களால் மற்றுமொரு சான்ட்விச்சினை 214 இலவசமாகவோ அல்லது விலைக்கோ பெற்றுக் கொள்ள இயலும். அப்படி இருக்குமாயின் 215 தாங்கள் கொடுக்கும் விலை மாத்திரமே வித்தியாசம். தாங்கள் அதை விலைக் கொடுத்து 216 வாங்குகிறீர்களோ இல்லையோ, சான்ட்விச்சின் சுவையும் அதிலுள்ள புரதச் சத்தும் 217 ஒன்றாகவே இருக்கப்போகின்றன. மேலும் இவ்விரு தருணங்களிலும் தங்களால் அதனை ஒரு 218 முறை மாத்திரமே புசிக்க இயலும். சான்ட்விச்சினைத் தாங்கள் ஒரு 219 உரிமையாளரிடமிருந்து பெற்றீர்களா இல்லையா என்பது கடைசியில் தங்கள் கையில் 220 தங்கப் போகும் காசைத் தவிர வேறெந்த நேரடி பாதிப்பையும் எற்படுத்தப் போவதில்லை.</p> 221 222 <p> 223 எந்தவொரு புலன் நுகர் பொருளுக்கும் இது பொருந்தும். அதற்கு உரிமையாளர் ஒருவர் 224 இருக்கிறாரா இல்லையா என்பது அது எத்தன்மையது என்பதையோ அதை வாங்குகிற காரணத்தால் 225 அதைக் கொண்டு தாங்கள் என்ன செய்ய இயலும் என்பதையோ நேரடியாக பாதிக்காது.</p> 226 227 <p> 228 ஆனால் அதுவே நிரலொன்றுக்கு உரிமையாளரொருவர் இருக்கிறாரென்றால் , அது 229 எத்தன்மையது என்பதும் அதன் நகலொன்றை வாங்குவதன் மூலம் தாங்கள் என்ன செய்யலாம் 230 என்பதும் பாதிப்புக்குள்ளாகிறது. இவ்வேறுபாட்டுக்குக் காரணம் பணம் மாத்திரம் 231 மட்டுமல்ல. மென்பொருளுக்கு உரிமையாளர்களைக் கொண்டிருக்கும் முறையானது, 232 மென்பொருள் உரிமையாளர்களை, சமுதாயத்துக்கு உண்மையாகவே அவசியமற்ற மென்பொருட்களை 233 உருவாக்கவும் ஊக்குவிக்கின்றது. சிந்தைக்குள் சிக்காது அறத்துக்கு களங்கம் 234 விளைவிப்பதால் இது நம் அனைவரையும் பாதிக்கின்றது.</p></li> 235 236 </ul> 237 238 <p> 239 சமூகத்தின் தேவைதான் என்ன? தமது குடிமக்களுக்கு உண்மையாகவே கிடைக்கக் கூடியத் 240 தகவல்கள் வேண்டும். உதாரணத்திற்கு இயக்க மட்டுமல்லாது கற்க, வழுநீக்க, ஏற்று 241 மேம்படுத்த வல்ல நிரல்கள் தேவை. ஆனால் மென்பொருட்களின் உரிமையாளர்கள் 242 தருவதென்னவோ நம்மால் கற்கவும் மாற்றவும் இயலாத ஒரு கருப்புப் பெட்டி.</p> 243 244 <p> 245 சமூகத்திற்கு விடுதலையும் தேவைப் படுகிறது. நிரலொன்றுக்கு உரிமையாளரிருந்தால் 246 பயனர்கள் தங்கள் வாழ்வின் ஒரு பகுதியைத் தாங்களே கட்டுப் படுத்தும் விடுதலையை 247 இழக்கிறார்கள்.</p> 248 249 <p> 250 எல்லாவற்றுக்கும் மேலாக சமூகமானது தமது குடிகளிடையே பரஸ்பரம் ஒத்துழைத்து வாழக் 251 கூடிய சிந்தனை வளர ஊக்குவிக்க வேண்டும். மென்பொருளின் உரிமையாளர்கள் இயற்கையாக 252 நாம் நமது சுற்றத்தாருக்கு உதவுவதை “போலித்தனம்” எனப் பகன்றால் அது நமது 253 சமூகத்தின் குடிமை இயல்பையேக் களங்கப் படுத்துவதாகும்.</p> 254 255 <p> 256 ஆகையால் தான் நாங்கள் <a href="/philosophy/free-sw.html">கட்டற்ற 257 மென்பொருள்</a> என்பது விலையினை அடிப்படையாகக் கொள்ளாது விடுதலையை 258 அடிப்படையாகக் கொண்டது என்கிறோம்.</p> 259 260 <p> 261 உரிமையாளர்களின் பொருளாதாரக் கூற்று வழுவுடையது ஆனால் பொருளாதார பிரச்சனை 262 என்னவோ உண்மைதான். சிலர் மென்பொருள் இயற்றுவதை சுகமாகக் கருதுவதன் காரணமாகவோ 263 அல்லது அதன் மீதுள்ள ஈடுபாடு மற்றும் விருப்பத்தின் காரணமாகவோ மென்பொருள் 264 இயற்றுகிறார்கள். ஆனால் மென்மேலும் மென்பொருட்கள் வளர வேண்டுமாயின் நாம் 265 நிதிகள் திரட்ட வேண்டும்.</p> 266 267 <p> 268 பத்து ஆண்டுகளாக , கட்டற்ற மென்பொருட்களை உருவாக்குவோர் நிதி திரட்டுவதற்கான 269 பல்வேறு முறைகளைக் கையாண்டு சில வெற்றியும் பெற்றுள்ளார்கள். யாரையும் 270 பணக்காரர்களாக்கும் அவசியம் எதுவும் இல்லை. ஒரு சராசரி யு.எஸ் குடும்பத்தின் 271 வருமானம் சுமார் 35 ஆயிரம் டாலர். இதுவே நிரலெழுதுவதைவிட குறைந்த திருப்தி 272 அளிக்கக் கூடிய பெரும்பாலான பணிகளுக்கு போதுமான ஊக்கத் தொகையாக 273 நிரூபணமாகியுள்ளது.</p> 274 275 <p> 276 பரிவுத் தொகை அவசியமற்றதாக்கிய வரையில், பல வருடங்களுக்கு , நான் இயற்றிய 277 கட்டற்ற மென்பொருளை மேம்படுத்தியதால் கிடைத்த வருவாயைக் கொண்டே வாழ்ந்து 278 வந்தேன். ஒவ்வொரு மேம்பாடும் நிலையான வெளியீட்டோடு சேர்க்கப் பட்டமையால் 279 இறுதியில் பொதுமக்களுக்கும் கிடைக்கக் கூடியதாக அமைந்தது. இல்லையெனில் 280 முக்கியம் வாய்ந்ததாக எமக்குத் தோன்றிய மாற்றங்களை செய்யாது, நுகர்வோர் 281 விரும்பிய மேம்பாடுகளை நிறைவேற்றியமைக்காக எமக்கு நிதியளித்தார்கள்.</p> 282 283 <p> 284 ஆதரவுப் பணிகளை மேற்கொள்வதன் மூலமாக கட்டற்ற மென்பொருட்கள் உருவாக்கும் சிலர் 285 சம்பாதிக்கின்றனர். (இக்கட்டுரை எழுதப் பட்ட போது) ஏறத்தாழ ஐம்பது 286 பணியாளர்களைக் கொண்ட சைக்னஸ் சப்போர்ட், தமது பணியாளர்களின் 15% பணிகள் கட்டற்ற 287 மென்பொருட்கள் உருவாக்குவது எனக் கணக்கிடுகிறது. இது மென்பொருள் நிறுவனமொன்றில் 288 மதிக்கத் தக்க பங்காகும்.</p> 289 290 <p> 291 இன்டல், மோடோரோலா, டெக்ஸாஸ் இன்ஸ்ட்ருமென்ட்ஸ் மற்றும் அனலாக் டிவைசஸ் போன்ற 292 நிறுவனங்களும் சி நிரலாக்கத்திற்கான குனு ஒடுக்கியின் தொடர்ச்சியான 293 உருவாக்கத்திற்கு நிதியளிக்க ஒன்றிணைந்துள்ளார்கள். அதே சமயம் அடா மொழியின் 294 குனு ஒடுக்கிக்கு யு.எஸ் விமானப் படை நிதியளிக்கிறது. அதிக தரமுடைய நிதி 295 சேமிக்கக் கூடிய ஒடுக்கியை உருவாக்க இதுவே உகந்த முறையென்று அது 296 கருதுகிறது. [சில காலங்களுக்கு முன்னர் வீமானப் படையின் நிதியளிப்பு 297 நிறைவடைந்தது. தற்போது குனு அடா ஒடுக்கி பயன்பாட்டிலுள்ளது. அதன் 298 பராமரிப்புக்கான நிதி வணிக ரீதியில் சேர்க்கப் படுகின்றது.]</p> 299 300 <p> 301 இவையனைத்தும் மிகச் சிறிய அளவிலான உதாரணங்களே. கட்டற்ற மென்பொருளியக்கம் 302 இன்னும் சிறிய அளவிலேயே இளமையுடன் இருக்கின்றது. இந்நாட்டில் (யு.எஸ்) 303 கேட்போருடன் கூடிய வானொலியின் எடுத்துக் காட்டானது பயனர்களைக் கட்டாயப் படுத்தி 304 பணம் வசூலிக்காது இன்னும் பலச் செயலை ஆதரிக்க இயலும் எனவும் காட்டுகிறது.</p> 305 306 <p> 307 கணினியினைப் பயன்படுத்தும் ஒருவராக தாங்கள் ஒரு <a 308 href="/philosophy/categories.html#ProprietarySoftware">தனியுரிம</a> 309 மென்பொருளைப் பயன்படுத்தலாம். தங்களின் நண்பரொருவர் நகலொன்றை கேட்டால் முடியாது 310 என மறுப்பது தவறாகிவிடும். பதிப்புரிமையினைக் காட்டிலும் ஒத்துழைப்பு அதிக 311 முக்கியத்துவம் வாய்ந்தது. திரை மறைவான நெருக்கமான ஒத்துழைப்பென்பது நல்லதொரு 312 சமூகத்திற்கு வித்திடாது. தனி நபரொருவர் நேர்மையானதொரு வாழ்வினை பொதுப்படையாக 313 பெருமையுடன் மேற்கொள்ள விழைய வேண்டும். இதன் அர்த்தம் யாதெனின் தனியுரிம 314 மென்பொருட்களை “வேண்டாம்” என்று சொல்வதே.</p> 315 316 <p> 317 மென்பொருளைப் பயன்படுத்தும் ஏனைய பயனர்களுடன் திறந்த மனதோடும் 318 விடுதலையுணர்வோடும் ஒத்துழைக்கத் தாங்கள் உரிமைக் கொண்டுள்ளீர்கள். மென்பொருள் 319 பணி செய்யும் முறையினைக் கற்கும் ஆற்றல் கொள்ளவும், தங்களின் மாணாக்கருக்கு 320 கற்று கொடுக்கவும் தாங்கள் உரிமைக் கொண்டுள்ளீர்கள். மென்பொருள் பழுதாகும் போது 321 தாங்கள் விரும்பும் நிரலாளரைக் கொண்டு அதனை சரி செய்ய தாங்கள் உரிமைக் 322 கொண்டுள்ளீர்கள்.</p> 323 324 <p> 325 கட்டற்ற மென்பொருள் தங்களின் உரிமை.</p> 326 327 <hr class="thin" /> 328 <blockquote id="fsfs"><p class="big"><a href="http://shop.fsf.org/product/free-software-free-society/">கட்டற்ற 329 மென்பொருள் விடுபெற்ற சமூகம்: ரிச்சர்ட் எம். ஸ்டால்மேனின் தேர்வு செய்யப் பட்ட 330 கட்டுரைகள்</a> ஆவணத்தில் இக்கட்டுரை பதிப்பிக்கப் பட்டுள்ளது.</p></blockquote> 331 332 <div class="translators-notes"> 333 334 <!--TRANSLATORS: Use space (SPC) as msgstr if you don't have notes.--> 335 </div> 336 </div> 337 338 <!-- for id="content", starts in the include above --> 339 <!--#include virtual="/server/footer.ta.html" --> 340 <div id="footer"> 341 <div class="unprintable"> 342 343 <p>FSF & GNU தொடர்பான வினவல்களை <a 344 href="mailto:gnu@gnu.org"><gnu@gnu.org></a> அனுப்பவும். FSF ஐ <a 345 href="/contact/">தொடர்பு கொள்ளும் வேறு வழிகளும்</a> உண்டு. துண்டிக்கப்பட்ட 346 இணைப்புகள், திருத்தங்கள், பரிந்துரைகள் உள்ளிட்டவற்றை <a 347 href="mailto:webmasters@gnu.org"><webmasters@gnu.org></a> என்ற 348 முகவரிக்கு அனுப்பவும்.</p> 349 350 <p> 351 <!-- TRANSLATORS: Ignore the original text in this paragraph, 352 replace it with the translation of these two: 353 354 We work hard and do our best to provide accurate, good quality 355 translations. However, we are not exempt from imperfection. 356 Please send your comments and general suggestions in this regard 357 to <a href="mailto:web-translators@gnu.org"> 358 359 <web-translators@gnu.org></a>.</p> 360 361 <p>For information on coordinating and submitting translations of 362 our web pages, see <a 363 href="/server/standards/README.translations.html">Translations 364 README</a>. --> 365 இந்த கட்டுரையின் மொழிபெயர்ப்பை ஒருங்கிணைப்பது, சமர்ப்பிப்பது தொடர்பான 366 விவரங்களுக்கு <a 367 href="/server/standards/README.translations.html">மொழிபெயர்ப்புகள் README 368 கோப்பைக்</a> காணவும்.</p> 369 </div> 370 371 <!-- Regarding copyright, in general, standalone pages (as opposed to 372 files generated as part of manuals) on the GNU web server should 373 be under CC BY-ND 4.0. Please do NOT change or remove this 374 without talking with the webmasters or licensing team first. 375 Please make sure the copyright date is consistent with the 376 document. For web pages, it is ok to list just the latest year the 377 document was modified, or published. 378 If you wish to list earlier years, that is ok too. 379 Either "2001, 2002, 2003" or "2001-2003" are ok for specifying 380 years, as long as each year in the range is in fact a copyrightable 381 year, i.e., a year in which the document was published (including 382 being publicly visible on the web or in a revision control system). 383 There is more detail about copyright years in the GNU Maintainers 384 Information document, www.gnu.org/prep/maintain. --> 385 <p>Copyright © 1994 Richard Stallman (ரிச்சர்ட் ஸ்டால்மேன்)</p> 386 387 <p>இப்பக்கம் <a rel="license" 388 href="http://creativecommons.org/licenses/by-nd/4.0/">Creative Commons 389 Attribution-NoDerivatives 4.0 International License</a> உரிமத்தின் கீழ் 390 வெளியிடப்படுகிறது.</p> 391 392 <!--#include virtual="/server/bottom-notes.ta.html" --> 393 <div class="translators-credits"> 394 395 <!--TRANSLATORS: Use space (SPC) as msgstr if you don't want credits.--> 396 தமிழில்: ஆமாச்சு</div> 397 398 <p class="unprintable"><!-- timestamp start --> 399 புதுப்பிக்கப் பட்ட விவரம்: 400 401 $Date: 2020/07/05 14:11:21 $ 402 403 <!-- timestamp end --> 404 </p> 405 </div> 406 </div> 407 </body> 408 </html>