From 1ae0306a3cf2ea27f60b2d205789994d260c2cce Mon Sep 17 00:00:00 2001 From: Christian Grothoff Date: Sun, 11 Oct 2020 13:29:45 +0200 Subject: add i18n FSFS --- .../blog/articles/ta/linux-and-gnu.html | 317 +++++++++++++++++++++ 1 file changed, 317 insertions(+) create mode 100644 talermerchantdemos/blog/articles/ta/linux-and-gnu.html (limited to 'talermerchantdemos/blog/articles/ta/linux-and-gnu.html') diff --git a/talermerchantdemos/blog/articles/ta/linux-and-gnu.html b/talermerchantdemos/blog/articles/ta/linux-and-gnu.html new file mode 100644 index 0000000..aaad2eb --- /dev/null +++ b/talermerchantdemos/blog/articles/ta/linux-and-gnu.html @@ -0,0 +1,317 @@ + + + + + + +லினக்ஸும் குனு திட்டமும் - குனு திட்டம் - கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளை + + + + + + +

லினக்ஸும் குனு திட்டமும்

+ +

ஆசிரியர்: ரிச்சர்ட் +எம். ஸ்டால்மேன்

+ +
+

இப்பேதம் குறித்து மேலும் அறிய குனு/லினக்ஸ் +கேள்வி பதில் பகுதியையும், ஏன் +குனு/லினக்ஸ்? பக்கத்தையும் குனுவினைப் பற்றி கேள்விப் +பட்டிராத குனு பயனர்கள் ஆகியப் பக்கங்களையும் வாசிக்கலாம்.

+
+
+ +

+கணினியினைப் பயன்படுத்தும் பெரும்பாலானோர் குனு அமைப்பின் மாறுபட்ட +வெளியீட்டினைப் பயன்படுத்துகின்றோம் என்பதை உணராமலேயே +பயன்படுத்துகின்றனர். விசித்திரமானச் சம்பவங்களின் விளைவாக, இன்று பரவலாக +பயன்படுத்தப் படும் குனுவின் வெளியீடு பெரும்பாலும் “லினக்ஸ்” என்றே அறியப் +படுகின்றது. குனு திட்டத்துடன் +இதற்குள்ளத் தொடர்பினை பெரும்பாலான பயனர்கள் அறியாமலே உள்ளனர்.

+ +

+லினக்ஸ் என்றொன்று இருக்கின்றது. இம்மக்கள் அதனைப் பயன்படுத்துகின்றனர். ஆனால் +அது இயங்கு தளம் அன்று. லினக்ஸ் ஒரு கருவாகும். தாங்கள் இயக்கும் ஏனைய +நிரல்கட்கு இயந்திரத்தின் வளங்களை ஒதுக்கும் ஒரு நிரல்.கருவும் இயங்கு தளத்தின் +இன்றியமையாத பாகந்தான். ஆனால் தன்னந்தனியாக அது பயனற்றது. முழுமையானதொரு இயங்கு +தளமென்னும் நோக்கத்தில் மாத்திரமே அது பணி செய்ய முடியும். சாதாரணமாக லினக்ஸ் +குனு இயங்கு தளத்துடன் பயன்படுத்தப் படுகிறது. முழுமையான அமைப்பென்பது +அடிப்படையில் குனு. லினக்ஸ் அதன் கருவாகச் செயல்படுகின்றது.

+ +

+லினக்ஸெனும் கருவுக்கும் முழுமையான அமைப்புக்கும் உள்ள வித்தியாசத்தினை +பெரும்பாலான பயனர்கள் அறியாது இருக்கிறார்கள். முழு அமைப்பினையுமே அவர்கள் +“லினக்ஸ்” என அழைக்கின்றனர். குழப்பமான இப் பெயர் பிரயோகம் புரிதலை +பேணவில்லை. இப்பயனர்கள் அனைவரும் சிறு உதவியுடன் 1991 ல் லைனஸ் டோர்வால்ட்ஸ் +முழு இயங்கு தளத்தினையும் உருவாக்கியதாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

+ +

+லினக்ஸ் ஒரு கருவென்பது நிரலாளர்களுக்குப் பொதுவாகத் தெரியும்.முழு அமைப்பையும் +அவர்களும் லினக்ஸ் என்றே பொதுவாகக் கேள்விப்படிருப்பதால் , முழு அமைப்பினையும் +கருவினை அடிப்படையாகக் கொண்டு பெயரிடும் மரபை பெரும்பாலும் +ஆமோதிக்கின்றனர். உதாரணத்திற்கு கருவினை லைனஸ் டோர்வால்ட்ஸ் இயற்றிய பிறகு, +அதன் பயனர்கள் அதனுடன் பொருந்தக் கூடிய பிற மென்பொருள்களை தேடியதாகவும்,அங்ஙனம் +யுனிக்ஸ் போறதொரு இயங்கு தளத்திற்குத் தேவையான அனைத்தும் ஏற்கனவே கிடைத்ததைக் +(எந்தவொரு காரணமும் இல்லாமல்) கண்டெடுத்ததாகவும் பலர் நம்புகின்றனர்.

+ +

+அவர்களுக்கு கிடைத்தது ஏதோ விபத்தால் விளைந்தது அல்ல. அது முழுமைப் பெறாத குனு +அமைப்பு. குனு திட்டம் 1984 லிருந்து இயங்கு தளமொன்றை உருவாக்க பணிபுரிந்து +வந்தக் காரணத்தால் கிடைக்கப் பெற்ற கட்டற்ற +மென்பொருட்கள் சேர்க்கப் பட்டு ஒரு முழு அமைப்பு உருவானது. குனு செயற்திட்டத்தில் யுனிக்ஸ் போன்றதொரு குனு +எனும் கட்டற்ற அமைப்பினை உருவாக்கும் இலட்சியத்தினை முன்மொழிந்திருந்தோம். குனு +திட்டத்தின் முதல் அறிவிப்பும் +குனு அமைப்பின் பூர்வாங்கத் திட்டங்கள் குறித்து விரித்துரைக்கின்றது. லினக்ஸ் +இயற்றப் பட்டபொழுது குனு கிட்டத்தட்ட நிறைவினை எட்டியிருந்தது.

+ +

+குறிப்பிட்ட பணியினைச் செய்யும் பொருட்டு குறிப்பிட்ட மென்பொருள் உருவாக்க +வேண்டுமென்பதை பெரும்பாலான கட்டற்ற மென்பொருள் திட்டங்கள் இலக்காகக் +கொள்ளும். உதாரணத்துக்கு லைனஸ் டோர்வால்ட்ஸ் யுனிக்ஸ் போன்றதொரு கருவினை இயற்ற +முற்பட்டார். டொனால்ட் கினட்ச் உரைப் பகுப்பிற்கென ஒரு செயலியினை (டெக்ஸ்) +இயற்ற முற்பட்டார். பாப் ஸ்கீய்பஃலர் சாளர அமைப்பொன்றினை இயற்ற முற்பட்டார் +(எக்ஸ் சாளர அமைப்பு). இத்தகையத் திட்டங்களை அத்திட்டங்களிலிருந்து வரக் கூடிய +குறிப்பிட்ட நிரல்களைக் கொண்டு மதிப்பிடுவது இயற்கையானது.

+ +

+குனு திட்டத்தின் பங்களிப்பினை இங்ஙனம் நாம் அளவிட்டால் எத்தகையதொரு முடிவிற்கு +நம்மால் வர இயலும்? வட்டொன்றினை விநியோகிக்கும் ஒருவர் தங்கள் “லினக்ஸ் +வழங்களில்” ஒட்டுமொத்த மூல நிரல்களில் கிட்டத்தட்ட 28% சதவிகிதத்தினைக் கொண்டு, +தனிப்பெரும் பங்கினை குனு +மென்பொருள் பெற்றிருந்ததாக கண்டறிந்தார். மேலும் அமைப்பின் இருப்பிற்கே +அத்தியாவசியமான முக்கிய பாகங்களைக் இது உள்ளடக்கியிருந்தது.லினக்ஸ் ஏறத்தாழ 3 +சதவிகிதம் தான். ஆக அமைப்பின் நிரலை யார் இயற்றினார் என்பதை வைத்து தாங்கள் ஒரு +பெயரினைத் தேர்வு செய்யப் போகின்றீர்கள் என்றால் மிகவும் பொருத்தமானத் தேர்வு +“குனு” வாகத்தான் இருக்கும்.

+ +

+ஆனால் கேள்வியினை அணுகுவதற்கு இதனைச் சரியான முறையாக நாங்கள் கருதவில்லை. குனு +குறிப்பிட்ட மென்பொருள் பொதிகளை உருவாக்க வேண்டி உருவானத் திட்டம் +அல்ல. இப்பொழுதும் அப்படித்தான். சி ஒடுக்கி +ஒன்றினை உருவாக்கிட விழைந்த திட்டம் அல்ல. இருந்தபோதும் நாங்கள் அதனைச் +செய்தோம். உரைத் தொகுப்பு பயன்பாடொன்றை உருவாக்கிட விழைந்த திட்டமுமல்ல. இருந்த +பொழுதும் ஒன்றை நாங்கள் உருவாக்கினோம். குனு திட்டத்தின் இலக்கு குனு என்ற +முழுமையான கட்டற்ற யுனிக்ஸ் போன்றதொரு இயங்கு தளத்தினை உருவாக்குவது.

+ +

+அமைப்பிலுள்ள கட்டற்ற மென்பொருட்களுக்கு பலர் பங்களித்துள்ளனர். அவர்கள் +அனைவருக்கும் நன்மதிப்பில் பங்குண்டு. குனு திட்டம் ஒரு ஒருங்கிணைக்கப் பட்ட +அமைப்பினை உருவாக்க முனைந்த காரணத்தால் அது அங்ஙனம் ஆனது. மேலும் அது பயனுள்ள +நிரல்களின் தொகுப்பு மாத்திரம் அல்ல. முழுமையானதொரு கட்டற்ற இயங்குதளத்தினை +உருவாக்கத் தேவையான நிரல்களை நாங்கள் பட்டியலிட்டோம். மேலும் அப்பட்டியலில் +உள்ளவற்றை முறைப்படி இனங்கண்டு, இயற்றி அல்லது மக்களைக் இனங்கண்டு இயற்ற +முற்பட்டோம். கவர்ச்சியற்ற(1) ஆனால் இன்றியமையாத +பாகங்களை இயற்றவும் செய்தோம். அவை இல்லாமல் ஒரு அமைப்பினைத் தங்களால் பெற +இயலாது. எங்களால் இயற்றப் பட்ட அமைப்பின் சிலப் பாகங்கள், நிரலாக்கக் கருவிகள், +அவையாகவே நிரலாளர்கள் மத்தியில் பிரபலமாயின. ஆனால் கருவிகளாக இல்லாதப்(2) பலப் பாகங்ளை இயற்றினோம். நாங்கள் செஸ் விளையாட்டு +ஒன்றினையும் உருவாக்கினோம். ஏனெனில் முழுமையான அமைப்பொன்றுக்கு நல்ல +விளையாட்டுக்களும் தேவை.

+ +

+1990 ம் வருடத்தின் துவக்கத்தில் கருவினைத் தவிர ஏனைய அனைத்தையும் நாங்கள் +ஒன்றிணைத்திருந்தோம் (அதோடு மாக் மீது இயங்கும் குனு ஹர்ட் கருவிலும் நாங்கள் பணிபுரிந்து +கொண்டிருந்தோம்). இக்கருவை உருவாக்குவதென்பது நாங்கள் எதிர்பார்த்ததைக் +காட்டிலும் மிகக் கடினமாக இருந்தது. குனு ஹர்ட் 2001 லிருந்து +நம்பகத்தன்மையுடன் பணிபுரியத் துவங்கியது. குனு ஹர்ட்டினைக் கொண்ட குனு +அமைப்பினை வெளியிட நாங்கள் ஆயத்தமாகி வருகின்றோம்.

+ +

+லினக்ஸ் கிடைத்த காரணத்தினால், அதிருஷ்ட வசமாக, நாங்கள் ஹர்ட்டுக்காக +காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லாது போனது. லினக்ஸினை லைனஸ் டோர்வால்ட்ஸ் +இயற்றியப் பொழுது கடைசியாக இருந்த இடைவெளியியை நிரப்பினார். குனு அமைப்புடன் +லினக்ஸினையும் ஒன்றிணைத்து முழுவதும் கட்டற்ற தன்மையுடைய அமைப்பினை மக்களால் +இயற்ற முடிந்தது: லினக்ஸினை சார்ந்த குனுவின் அமைப்பு. சுருக்கமாக குனு/லினக்ஸ் +அமைப்பு.. ஆரம்ப காலத்து லினக்ஸ் வெளியீட்டுக் குறிப்பு குனுவின் பகுதிகளைப் +பயன்படுத்தும், லினக்ஸ் ஒரு கருவென்பதை ஏற்றது: “லினக்ஸுடன் +பயன்படுத்தப் படும் பெரும்பாலான கருவிகள் குனு மென்பொருளாகும். மேலும் அவை குனு +காபிலெப்ஃடின் கீழ் வருபவை. இக் கருவிகள் வழங்கலில் இல்லை - மேலும் +விவரங்களுக்கு எம்மையோ (அல்லது குனுவையோ) கேளுங்கள்.”

+ +

+இவற்றை ஒன்றாக கோர்ப்பது கேட்பதற்குச் சுலமாக இருக்கலாம், அது அதிக +முக்கியத்துவம் இல்லாத பணியாக இருந்து விடவில்லை. லினக்ஸுடன் பணியாற்றும் +பொருட்டு சில குனு பாகங்களில்(3) குறிப்பிடத் +தக்க மாற்றங்கள் செய்ய வேண்டியிருந்தது.“ பெட்டியைத் திறந்ததும்” பணி புரியத் +தக்க முழுமையானதொரு வழங்கலை ஒருங்கிணைப்பதும் மிகப் பெரிய பணியாக +இருந்தது. எப்படி அமைப்பினை துவக்குவது மற்றும் நிறுவுவது போன்ற +பிரச்சனைகளுக்கு தீர்வுத் தர வேண்டியிருந்தது.நாங்கள் அத்தகைய நிலையினை அடையாது +இருந்தக் காரணத்தால் இதனை எங்களால் ஈடு செய்ய முடியவில்லை. பல்வேறு வழங்கல்களை +உருவாக்கியோர் குறிப்பிடத்தக்க பங்களித்தனர்.

+ +

+குனு திட்டம் குனு அமைப்போடு கூடவே குனு/லினக்ஸ் அமைப்புகளையும் +ஆதரிக்கின்றது. நிதியும் அளிக்கின்றது. லினக்ஸ் தொடர்புடைய குனு சி நிரலக +விரிவாக்கங்களை மீண்டும் இயற்ற நாங்கள் நிதி அளித்தோம். இதன் காரணமாக அவை +தற்பொழுது நல்ல முறையில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. மேலும் புதிய குனு/லினக்ஸ் +வழங்கல்கள் மாற்றங்கள் ஏதுமற்ற நடைமுறையிலுள்ள நிரலகத்தினைப் +பயன்படுத்துகின்றன. டெபியன் குனு/ லினக்ஸ் வழங்கலின் உருவாக்கத்தின் ஆரம்ப +கட்டத்திற்கும் நாங்கள் நிதியளித்தோம்.

+ +

+எங்களின் அனைத்துப் பணிகளுக்காகவும் நாங்கள் இன்று லினக்ஸ் சார்ந்த குனு +அமைப்பினை பயன்படுத்துகின்றோம். அதனைத் தாங்களும் பயன்படுத்துவீர்கள் என +நினைக்கின்றோம். குனு/லினக்ஸின் மாறுபட்ட பல வடிவங்கள் இன்று கிடைக்கப் +பெறுகின்றன (“வழங்கல்கள்”) என அவை அழைக்கப் படுகின்றன. அவற்றுள் பெரும்பாலானவை +கட்டுடைய மென்பொருட்களைப் பயன்படுத்துகின்றன. அதனை உருவாக்குவோர் குனு +கொள்கைகளைக் காட்டிலும் லினக்ஸுடன் தொடர்புடைய கொள்கையினைக் +கடைபிடிக்கின்றனர். ஆனால் முற்றிலும் கட்டற்ற +குனு/ லினக்ஸ் வழங்கல்களும் உள்ளன.

+ +

தாங்கள் குனு/ லினக்ஸ் பயன்படுத்துகின்றீர்களோ இல்லையோ, தயவு செய்து +சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில்“ லினக்ஸ் ” என்ற பெயரைப் பயன்படுத்தி பொது +மக்களை குழப்பாதீர்கள். லினக்ஸ் ஒரு கரு. அமைப்பின் இன்றியமையாத முக்கியமான ஒரு +பாகம். ஒட்டுமொத்த அமைப்பு கிட்டத்த்ட குனு அமைப்பு. லினக்ஸ் அதில் சேர்க்கப் +பட்டுள்ளது. இதன் கூட்டமைப்பினைப் பற்றி தாங்கள் பேசுகிறபொழுது தயவு செய்து +“குனு/ லினக்ஸ்” என்றழைக்கவும்.

+ +

+மேற்கோளிடும் பொருட்டு “குனு/ லினக்ஸுக்கு” தாங்கள் இணைப்பினை வழங்க +விழைந்தால், இப்பக்கமும் +http://www.gnu.org/gnu/the-gnu-project.html பக்கமும் உகந்தத் +தேர்வுகள். கருவாகிய லினக்ஸினைத் தாங்கள் குறிப்பிட்டு அதற்கு மேற்கோளிட +விரும்பினால் http://foldoc.org/linux +அதன் பொருட்டு பயன்படுத்த உகந்த இணைப்பாக இருக்கும்.

+ +

பிற்சேர்க்கைகள்

+ +

+குனுவினைத் தவிர, வேறொருத் திட்டமும் சுயேச்சையாக கட்டற்ற யுனிக்ஸ் போன்றதொரு +இயங்குதளத்தினைப் உருவாக்கியுள்ளது. இது பி.எஸ்.டி என வழங்கப் படுகின்றது. இது +யு.சி பெர்க்லியில் உருவாக்கப் பட்டது. அது 1980 களில் கட்டுடையதாக இருந்தது, +1990 களின் துவக்கத்தில் கட்டற்றதானது. இன்று இருக்கக் கூடிய கட்டற்ற இயங்கு +தளமொன்று உறுதியாக ஒன்று குனு அமைப்பின் வழி வந்திருக்கும் , அல்லது பி.எஸ்.டி +யினைப் போலிருக்கும்.

+ +

+பி.எஸ்.டியும் குனுவின் வழிவகைதானா என மக்கள் சிலச் சமயங்களில் +கேட்பதுண்டு. தங்களின் நிரல்களை கட்டற்றதாக்க பி.எஸ்.டியை உருவாக்குவோர் குனு +திட்டத்தின் உதாரணத்தினால் உந்தப் பட்டனர். மேலும் குனு இயக்கத்தினரின் +முன்முனைந்த கோரிக்கைகள் அவர்களை ஏற்க வைக்க உதவி புரிந்தது. ஆனால் நிரல் சற்று +மேல்படர்ந்திருந்தது. குனு அமைப்பும் அதன் வழிவந்தவையும் சில பி.எஸ்டி நிரல்களை +பயன்படுத்துவது போலவே, பி.எஸ்.டி அமைப்பும் இன்று சில குனு நிரல்களைப் +பயன்படுத்துகின்றன. ஒட்டு மொத்தமாகப் பார்க்கிற பொழுது தனந்தனியே பரிணாமம் +கொண்ட இரு வேறு அமைப்புகள் அவை. பி.எஸ்.டி உருவாக்குவோர் கருவினை உருவாக்கி +அதனை குனுவுடன் இணைக்க வில்லை. ஆகையால் குனு/பிஎஸ்டி எனும் பெயர் +சூழ்நிலைக்குப் பொருந்தாது.(4)

+ +

குறிப்புகள்:

+
    +
  1. +கவர்ச்சியற்ற ஆனால் இன்றியமையாத பாகங்கள் குனு ஒன்றிணைப்பாளர், ஜி.ஏ.எஸ் +மற்றும் இணைப்பர், ஜி.எல்.டி (இவையிரண்டு தற்சமயம் குனு பின்யுடில்ஸ் பொதியின் அங்கங்களாகும்), குனு டார் முதலியவற்றை உள்ளடக்கியவை.
  2. + +
  3. +உதாரணத்திற்கு, பார்ன் அகைன் ஷெல், போஸ்ட் ஸ்கிரிப்ட் வரியொடுக்கியான கோஸ்ட்ஸ்கிரிப்ட், மற்றும் +குனு சி நிரலகம் போன்றவை நிரலாக்கக் +கருவிகளல்ல. குனு காஷ், குநோம் மற்றும் குனு செஸ்ஸும் இத்தகையதே.
  4. + +
  5. +உதாரணத்திற்கு குனு சி நிரலகம்.
  6. + +
  7. +ஆனால் இக்கட்டுரை இயற்றப் பட்டதிலிருந்து உருண்டோடிய வருடங்களில் குனு சி +நிரலகம் ப்ஃரீபிஎஸ்டி கருவிற்கு உகந்ததாக்கப் பட்டது. இதனால் குனு அமைப்பினை +அக்கருவுடன் இணைக்க முடிந்தது. குனு/லினக்ஸைப் போலவே, இவை குனுவின் +வழிவந்தவையே. ஆகவே அவை அவற்றின் கருவினை அடிப்படையாகக் கொண்டு +குனு/கேப்ஃரீபிஎஸ்டி அல்லது குனு/கேநெட்பிஎஸ்டி என வழங்கப் படுகின்றன. அதனதன் +பணித் திரையில் சாதாரணப் பயனர்களால் குனு/லினக்ஸ் மற்றும் குனு/*பிஎஸ்டி +களுக்கிடையே வித்தியாசம் காண்பது அரிதானது.
  8. + +
+ +
+ + +
+ + + + + + + + -- cgit v1.2.3