From 1ae0306a3cf2ea27f60b2d205789994d260c2cce Mon Sep 17 00:00:00 2001 From: Christian Grothoff Date: Sun, 11 Oct 2020 13:29:45 +0200 Subject: add i18n FSFS --- talermerchantdemos/blog/articles/ta/free-sw.html | 364 +++++++++++++++++++++++ 1 file changed, 364 insertions(+) create mode 100644 talermerchantdemos/blog/articles/ta/free-sw.html (limited to 'talermerchantdemos/blog/articles/ta/free-sw.html') diff --git a/talermerchantdemos/blog/articles/ta/free-sw.html b/talermerchantdemos/blog/articles/ta/free-sw.html new file mode 100644 index 0000000..fa31bc7 --- /dev/null +++ b/talermerchantdemos/blog/articles/ta/free-sw.html @@ -0,0 +1,364 @@ + + + + + + +கட்டற்ற மென்பொருள் விளக்கம் - குனு திட்டம் - கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளை + + + + + + +

கட்டற்ற மென்பொருள் - விளக்கம்

+ +
+ +
+

+ஒரு மென்பொருளின் நிரலானது கட்டற்ற மென்பொருளாக கருதப் படத் தேவையான அம்சங்கள் +குறித்த உண்மையினைத் தெளிவாக உணர்த்தும் பொருட்டு நாங்கள் கட்டற்ற +மென்பொருளுக்கான இவ்விளக்கத்தின் மீது உரிமைக் கொள்கிறோம். +

+ +
+ +

+“கட்டற்ற மென்பொருள்” என்பது விலையினை அடிப்படையாகக் கொள்ளாமல் சுதந்தரத்தினை +அடிப்படையாகக் கொண்டது. இதனை“இலவசமாகக்” கருதாமல் “சுதந்தரமாக” தாங்கள் கருத +வேண்டும். +

+ +

+இது மென்பொருளை பயன்படுத்தும் ஒருவருக்கு அம் மென்பொருளை இயக்க, படியெடுக்க, +விநியோகிக்க, கற்க, மாற்றியமைத்து மேம்படுத்தக் கூடிய உரிமைகளைப் +பற்றியது. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமாயின் மென்பொருளொன்றைப் பயன்படுத்தும் +பயனொருவருக்கு அதன் மீதுள்ள நான்கு வகையான சுதந்தரத்தைப் பற்றியது: +

+ + + +

இச்சுதந்தரங்கள் அனைத்தையும் பயனரொருவருக்குத் தரவல்ல மென்பொருள் கட்டற்ற +மென்பொருள் ஆகும். ஆக, மென்பொருளின் படியினை மாற்றியோ மாற்றாமலோ, இலவசமாகவோ +அல்லது விலைக்கோ எவருக்கும் எங்கேயும் +விநியோகிக்கக் கூடிய சுதந்தரம் தங்களுக்கு வழங்கப் பட்டிருத்தல் +வேண்டும். மற்றவைக்கு மத்தியில் இச் செயல்களை புரியத் தங்களுக்குச் சுதந்தரம் +வழங்கப் பட்டிருக்கிறதென்றால் இதன் பொருட்டு எந்தவொரு அனுமதி பெறவோ அல்லது +விலையினைத் தரவோ அவசியம் இல்லையென்று பொருள். +

+ +

+மென்பொருளினை இயக்கக் கூடிய சுதந்தரம் என்றால், மென்பொருளினை உருவாக்குபவருக்கோ +அல்லது எந்த ஒரு அமைப்பிற்கோ தெரியப்படுத்தாது, எத்தகையதொரு முழுமையானப் +பணிக்காகவோ அல்லது நோக்கத்திற்காகவோ, தனிமனிதரொருவரோ அல்லது ஒரு நிறுவனமோ +எத்தகையதொரு கணினியின் மீதும் பயன்படுத்தக் கூடிய சுதந்தரமாகும். “பயனரின்” +நோக்கம் பூர்த்தியாவதே இவ்விடத்து முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப் +படுகின்றது.“உருவாக்குபவரது” நோக்கம் அல்ல. தங்களின் நோக்கங்களுக்காக +நிரலொன்றினை இயக்கும் சுதந்தரத்தினை நீங்கள் பெறுகிறீர்கள். மற்றொருவருக்கு +தாங்கள் அதனை விநியோகிக்க நேர்ந்தால் அதனை தனது நோக்கங்களுக்காகப் +பயன்படுத்தும் சுதந்தரத்தினை அவர் பெறுகிறார். ஆனால் தங்களின் நோக்கங்களை அவர் +மீது சுமத்தும் அருகதைத் தங்களுக்கு இல்லை. +

+ +

+இங்ஙனம் நடக்கிறது என யாருக்கும் குறிப்பிடாமல் மென்பொருளினை மாற்றியமைத்து +தனிப்பட்ட முறையில் பணி நிமித்தமாகவோ அல்லது விளையாட்டாகவோ பயன்படுத்தக் கூடிய +சுதந்தரமும் தங்களுக்கு வழங்கப் பட்டிருத்தல் வேண்டும். ஒருகால் தாங்கள் செய்த +மாற்றங்களை வெளியிட நேர்ந்தால் அது குறித்து குறிப்பிட்ட யாருக்கும் அறிவிக்க +வேண்டிய அவசியம் எவ்வகையிலும் இருத்தல் கூடாது. +

+ +

+படிகளை விநியோகிக்கக் கூடிய சுதந்தரம் என்கிற போது, நிரல்களின் அப்படிகள் இரும +அல்லது நிறுவும் நிலையிலும் மூல வடிவிலும் இருத்தல் வேண்டும். இது மாற்றப் பட்ட +மற்றும் மாற்றப் படாத படிகளுக்கும் பொருந்தும். (கட்டற்ற இயக்கு தளங்களை +வசதியாக நிறுவும் பொருட்டு விநியோகிக்கப்படும் நிரல்கள் இயக்க வல்லதான நிலையில் +இருத்தல் அவசியம்.) விதிவிலக்கான தருணங்களில் இரும அல்லது நிறுவும் +நிலையிலல்லாத நிரல்கள் (சில நிரலாக்க மொழிகள் அங்ஙனம் நிரல்களைத் தர இயலாத +காரணத்தால்) ஏற்கப் படலாம். ஆனால் ஒருகால் அத்தகையதொரு வழிமுறையினை தாங்கள் +கண்டறிந்தால் அவ்வடிவத்தில் மறுவிநியோகம் செய்யும் சுதந்தரத்தினைக் கட்டாயம் +தாங்கள் பெற்றிருத்தல் வேண்டும். +

+ +

+மாற்றுவதற்கான சுதந்தரம் மற்றும் மேம்படுத்துவதற்கானச் சுதந்தரம் என்பது +பொருள்பட வேண்டுமாயின் மூல நிரல்களை அணுகும் உரிமையினைத் தாங்கள் பெற்றிருத்தல் +வேண்டும். ஆக மூல நிரல்களை அணுகக் கூடிய உரிமையைப் பெற்றிருப்பதே கட்டற்ற +மென்பொருள் என்பதன் இன்றியமையாத அம்சமாகும். +

+ +

+கிடைக்கக் கூடிய துணை நிரல்கள் மற்றும் பாகங்களோடு நிரலொன்றினை இணைப்பது அதனை +மாற்றுவதற்கான ஒரு முக்கியமான வழிமுறையாகும். ஒரு பாகத்தின் பதிப்புரிமைப் +பெற்றவராக தாங்கள் இருந்தால் மாத்திரமே, அப்பாகத்தோடு நிரலினை இணைக்கக் கூடும் +என்று தாங்கள் பயன்படுத்தும் நிரலின் உரிமம் பகன்றால் அந்நிரலின் உரிமம் +கட்டற்றதாகும் தகுதியினை இழக்கிறது. +

+ +

+இச்சுதந்தரங்கள் நிதர்சனமாய் இருக்கவேண்டுமாயின், தாங்கள் பெரியதொரு +குற்றத்தினைப் புரியாத வரையில், இவை திரும்பப் பெற முடியாததாய் இருத்தல் +வேண்டும். ஆதாரமானக் காரணங்களுக்கு தாங்கள் ஏதும் செய்திடாத நிலையில், ஒரு +மென்பொருளுக்கான உரிமத்தினை அதனை உருவாக்கியவர் திரும்பப் பெற இயலுமாயின் +அம்மென்பொருள் கட்டற்ற மென்பொருள் ஆகாது. +

+ +

+அடிப்படையான சுதந்தரங்களோடு முரண்படாத பட்சத்தில் கட்டற்ற மென்பொருளை +விநியோகிக்க மேற்கொள்ளப் படும் சில வழிமுறைகளுக்கான விதிகள் ஏற்கக் +கூடியதே. உதாரணத்திற்கு காபிலெப்ஃட். இவ்விதியானது நிரலினை +மறுவிநியோகம் செய்யும் போது, அடிப்படை சுதந்தரங்களுக்கு பங்கம் நேரும் வண்ணம், +பிறரின் மீது ஒருவர் கட்டுக்களை சுமத்த இயலாது எனக் கூறுகிறது. இவ்விதி +அடிப்படை சுதந்தரங்களைப் பாதுகாக்கிறதே ஒழிய அவற்றோடு முரண்படவில்லை. +

+ +

+குனு திட்டத்தில் இச்சுதந்தரங்களை அனைவருக்காகவும் பாதுகாக்கும் பொருட்டு +நாங்கள் “காபிலெப்ஃட்” பயன்படுத்துகிறோம். காபிலெப்ஃட் +செய்யப் படாத கட்டற்ற மென்பொருட்களும் உள்ளன. காபிலெப்ஃட் பயன்படுத்தப் படுவதற்கான +அத்தியாவசிய காரணங்களை திடமாக நம்புகின்ற அதேவேளையில், தங்களின் மென்பொருள் +காபிலெப்ஃட் செய்யப்படாததாக இருந்தாலும் கூட பயன்படுத்தப் படுவதில் +குறையொன்றுமில்லை.“கட்டற்ற மென்பொருள்”, “காபிலெப்ஃட் மென்பொருள்” மற்றும் இதர +வகையான மென்பொருட்கள் மற்றும் அவற்றுக்கிடையேயான தொடர்புகளைப் பற்றி அறிய கட்டற்ற மென்பொருட்களின் வகைகளை +காணுங்கள். +

+ +

+“கட்டற்ற மென்பொருள்” என்பதால் “வர்த்தகத்துக்கானது அல்ல” என்பது பொருளல்ல. ஒரு +கட்டற்ற மென்பொருள் என்பது வர்த்தகத்துக்கு ஏதுவாய், வர்த்தக ரீதியில் +உருவாக்கப் பட வல்லதாய், வர்த்தரீதியில் விநியோகிக்கப் படத் தக்கதாகவும் +இருத்தல் அவசியம். தற்காலத்தில் வர்த்தக ரீதியான கட்டற்ற மென்பொருள் உருவாக்கம் +என்பதொன்றும் விதிவிலக்கானதல்ல. இத்தகைய வர்த்தக ரீதியான மென்பொருட்கள் மிகவும் +முக்கியமானதும் கூட.தாங்கள் கட்டற்ற மென்பொருட்களை விலைக்கோ அல்லது இலவசமாகவோ +பெற்றிருக்கலாம். எம்முறையில் அதனைத் தாங்கள் பெற்றீர்கள் என்பதைச் சாராது +அதனைப் படியெடுக்கவும், மாற்றவும் மட்டுமல்லாது விலைக்கு விற்கவும் தங்களுக்குச் +சுதந்தரம் உண்டு. +

+ +

+மாற்றப் பட்ட வகைகளை வெளியிடுவது, தனிப்பட்ட முறையில் மாற்றப் பட்ட வகைகளை +ஆக்கி பயன்படுத்துவது உள்ளிட்ட சுதந்தரங்களைத் தடுக்காத வரையில், மாற்றப்பட்ட +மென்பொருளின் மூலமொன்றினை பொதியாக்குவது குறித்த நெறிமுறைகள் ஏற்கத் +தக்கதே. இதே வழிகளுக்கிணங்க, “தாங்கள் ஒரு மென்பொருளை ஒருவகைப் பட்டதாக +ஆக்கினால் அதனை வெளியிடும் போது குறிப்பிட்ட நெறிகளை சார்ந்து நிற்க வேண்டும்” +போன்ற நெறிமுறைகளும் ஏற்கத் தக்கதே. (இந்நெறி மாற்றப் பட்ட மென்பொருளை வெளியிட +வேண்டுமா என்பதைத் தேர்வு செய்யும் உரிமையைத் தங்களுக்கு வழங்குகிறது என்பதைக் +கருத்தில் கொள்ள வேண்டும்.) +

+ +

+சிலத் தருணங்களில் அரசாங்கத்தின் ஏற்றுமதிக் +கொள்கைகள் மற்றும் வர்த்தக உரிமங்கள் முதலியன தாங்கள் மென்பொருட்களை உலக +அளவில் விநியோகிக்கும் சுதந்தரத்தினைக் கட்டுப் படுத்தலாம். மென்பொருள் +உருவாக்குபவர்களுக்கு இக்கட்டுப்பாடுகளை மீற ஆற்றல் இல்லாது +இருக்கலாம். இத்தகையச் சட்டங்களை மென்பொருளினைப் பயன்படுத்த போடப்படும் +நிபந்தனைகளாக ஏற்க இவர்கள் மறுக்க வேண்டும். இதன் மூலம் இவ்வரசாங்கங்களின் +அதிகாரத்திற்கு உட்படாத பகுதிகளில் வாழும் மக்களுக்கும் நடைபெறும் +செயல்களுக்கும் இவை முட்டுக் கட்டையாக இராது. +

+ +

+கட்டற்ற மென்பொருளுக்கான பெரும்பாலான உரிமங்கள் பதிப்புரிமையினை அடிப்படியாகக் +கொண்டு விளங்குகிறது. மேலும் எவ்வகைப்பட்டத் தேவைகள் பதிப்புரிமை மூலம் +சுமத்தப் படலாம் என்பதில் வரையறைகள் உண்டு. மேற்கூறப்பட்ட படி பதிப்புரிமைச் +சார்ந்த உரிமம் ஒன்று கட்டற்றத் தன்மையினை மதித்தொழுகுகின்ற பட்சத்தில், +எதிர்பாராத வேறு வகையான பிரச்சனைகள் வருவது அரிது. இங்ஙனம் சில சமயங்களில் +நிகழ்ந்ததுண்டு. ஆனால் சிலக் கட்டற்ற மென்பொருள் உரிமங்கள் ஒப்பந்தங்களை +அடிப்படையாகக் கொண்டவை. இத்தகைய ஒப்பந்தங்கள் மேற்கொண்டு பலவகைப் பட்ட +கட்டுப்பாடுகளை விதிக்கலாம். அதாவது இத்தகைய உரிமம் ஏற்கப் படத்தகாத +கட்டுடையவைகளாக இருக்க அதிக வாய்ப்புகள் உண்டு. +

+ +

+ இங்ஙனம் எப்பொழுது நிகழும் என்பதை சுட்டுவது கடினமே! ஒரு உடன்படிக்கையினை +அடிப்படையாகக் கொண்ட உரிமமானது பயனரின் சுதந்தரத்தினைப் பதிப்புரிமைச் +சட்டங்களுக்கும் அப்பாற்பட்டுக் கட்டுப் படுத்தினால் அதை கட்டற்றதாக கருத இயலாத +சூழல் உருவாகும். +

+ +

+கட்டற்ற மென்பொருட்களைப் பற்றி பேசுகிற போது “இலவசம்” போன்ற பதங்களைப் பிரயோகப் +படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் அவை இவ்விஷயமனைத்தும் சுதந்தரத்தினை +விடுத்து பைசா சம்பந்தப் பட்டது என்று கருத வைக்கிறது. “தனித்துவத்தினை” +பிரதிபலிக்கும் கருத்துக்களை தாங்கள் ஏற்றொழுக மாட்டீர்கள் என நம்புகிறோம். குழப்பத்தினை விளைவிக்கக் கூடிய +சொற்களையும் வாக்கியங்களையும் விவாதங்களில் தவிர்ப்பது நல்லது. கட்டற்ற +மென்பொருளுக்கான மொழிபெயர்ப்புகளின் பட்டியலும் +எங்களிடத்தே உள்ளன. +

+ +

+கட்டற்ற மென்பொருளுக்கான விளக்கத்தில் கொடுக்கப் பட்டுள்ள நியதிகள் கவனத்துடன் +பொருள் கொள்ளப் படவேண்டியவை. ஒரு மென்பொருளுக்கான உரிமம் கட்டற்ற +மென்பொருளுக்கான உரிமத்தினை ஒத்து உள்ளதா என்பதை அதன் நோக்கங்கள் மட்டும் +வாசகங்களைக் கொண்டு தீர்மானிக்கின்றோம். இந்நியதிகளில் உள்ள பிரச்சனைகளை +முன்நோக்காதபோது கூட, மனசாட்சிக்கு விரோதமான கட்டுப்பாடுகளை ஒரு உரிமம் +பெற்றிருக்குமாயின் நாம் அதனை நிராகரிக்கின்றோம். ஒரு உரிமத்தின் தேவைகள் சிலத் +தருணங்களில் பலத்த சிந்தனைக்கு வழி வகுப்பதுண்டு. இச்சமயங்களில் இத்தேவைகள் +ஏற்புடையவைதானா என்பது குறித்து முடிவு எடுப்பதற்கு முன் நாம் வழக்கறிஞர்களைக் +கலந்தாலோசிக்கின்றோம். ஒரு புதிய பிரச்சனைக் குறித்து கருத்தொற்றுமை +ஏற்படுகிறபோது இந்நியதிகளை புதுப்பிக்கின்றோம். இது சில உரிமங்களைத் தகுதி பெற/ +இழக்கச் செய்வதில் உறுதுணையாக இருக்கின்றது. +

+ +

+ஒரு குறிப்பிட்ட உரிமம் கட்டற்ற மென்பொருளுக்கான உரிமத்தினை தழுவி நிற்கிறதா +எனச் சரி பார்க்க உரிமங்களின் +பட்டியலை காணவும். தாங்கள் தேடும் உரிமம் இப்பட்டியலில் +காணக்கிடைக்கவில்லையெனில் <licensing@gnu.org> முகவரிக்கு +மின்னஞ்சல் செய்யவும். +

+ +

+தாங்கள் புதியதொரு உரிமத்தினை இயற்றுவது குறித்து தீவிரமாக சிந்தித்து வந்தால், +மேற்கூறிய முகவரியில் க.மெ.அ வினைத் தொடர்புக் கொள்ளவும். பலப்பல கட்டற்ற +மென்பொருள் உரிமங்கள் ஈசலெனப் பெருகுவது பயனர்களுக்கு அவற்றைப் புரிந்து +கொள்வதில் அதிக சிரமத்தினை ஏற்படுத்துவதாகும். தங்கள் தேவைகளைப் பூர்த்தி +செய்யக் கூடிய கட்டற்ற மென்பொருள் உரிமம் ஒன்றினை எங்களால் பரிந்துரைக்க +இயலும். +

+ +

+இவை எல்லாவற்றையும் மீறித் தங்களுக்கு புதியதொரு உரிமம்தான் வேண்டும் என்றால் +எங்களின் உதவியுடன், பல்வேறு நடைமுறைச் சிக்கல்களைத் தவிர்த்து தங்களின் உரிமம் +கட்டற்ற மென்பொருள் உரிமமாகத் திகழ்வதை உறுதிபடுத்திக் கொள்ளலாம். +

+ +

மென்பொருளுக்கும் அப்பால்

+ +

+எக்காரணங்களுகாக மென்பொருட்கள் கட்டற்று இருக்க வேண்டுமோ அதே காரணங்களுக்காக மென்பொருட்களின் ஆவணங்களும் கட்டற்று +விளங்க வேண்டும். ஏனெனில் ஆவணங்கள் மென்பொருளின் அங்கமாகத் திகழ்பவை. +

+ +

+நடைமுறைக்கு ஏற்ற கல்வி முதலிய வேலைப் பாடுகளைப் பிரதிபலிக்கின்ற ஏனைய +செயல்களுக்கும் இவ்வாதங்கள் பொருந்தும். விகிபீடியா இதற்கு ஒரு சிறந்த உதாரணம். +

+ +

+எந்தவொரு வேலையுமே கட்டற்று இருக்கலாம். கட்டற்ற மென்பொருளின் விளக்கத்தினைக் +கட்டற்ற பண்பாட்டின் அனைத்து விதமான +செயல்களுக்கும் விரிவு படுத்தி பொருத்திக் கொள்ளலாம். +

+ +

திறந்த மூலம்?

+ +

+மற்றுமொரு குழு கட்டற்ற மென்பொருளோடு நெருங்கியதான “திறந்த மூலம்” +(இவையிரண்டும் ஒன்றல்ல) என்ற பதத்தினைப் பிரயோகப் படுத்தத் +துவங்கியுள்ளார்கள். நாம் “கட்டற்ற மென்பொருள்” என்ற பதத்தினையே +ஊக்குவிக்கின்றோம். ஏனெனில் அது சுதந்தரத்தினைப் பிரதிபலிக்கிறது. விலையினை +அல்ல. சிந்தனைச் சுதந்தரத்தினை சுட்டி நிற்கிறது. திறந்த என்ற பதம் ஒரு போதும் +சுதந்தரத்தினைச் சுட்டாது. +

+
+ +
+ + +
+ + + + + + + + + -- cgit v1.2.3