diff options
Diffstat (limited to 'talermerchantdemos/blog/articles/ta/shouldbefree.html')
-rw-r--r-- | talermerchantdemos/blog/articles/ta/shouldbefree.html | 950 |
1 files changed, 950 insertions, 0 deletions
diff --git a/talermerchantdemos/blog/articles/ta/shouldbefree.html b/talermerchantdemos/blog/articles/ta/shouldbefree.html new file mode 100644 index 0000000..2bedf20 --- /dev/null +++ b/talermerchantdemos/blog/articles/ta/shouldbefree.html @@ -0,0 +1,950 @@ +<!--#set var="PO_FILE" + value='<a href="/philosophy/po/shouldbefree.ta.po"> + https://www.gnu.org/philosophy/po/shouldbefree.ta.po</a>' + --><!--#set var="ORIGINAL_FILE" value="/philosophy/shouldbefree.html" + --><!--#set var="DIFF_FILE" value="" + --><!--#set var="OUTDATED_SINCE" value="2010-06-29" --> + +<!--#include virtual="/server/header.ta.html" --> +<!-- Parent-Version: 1.86 --> + +<!-- This file is automatically generated by GNUnited Nations! --> +<title>மென்பொருள் ஏன் கட்டற்று இருக்க வேண்டும் - குனு திட்டம் - கட்டற்ற மென்பொருள் +அறக்கட்டளை</title> + +<!--#include virtual="/philosophy/po/shouldbefree.translist" --> +<!--#include virtual="/server/banner.ta.html" --> +<!--#include virtual="/server/outdated.ta.html" --> +<h2>மென்பொருள் ஏன் கட்டற்று இருக்க வேண்டும்</h2> + +<p> +ஆசிரியர்: <a href="http://www.stallman.org/"><strong>ரிச்சர்ட் +எம். ஸ்டால்மேன்</strong></a></p> +<h3 id="introduction">அறிமுகம்</h3> +<p> +மென்பொருள் என்றொன்று இருப்பது அதன் பயன்பாடு குறித்த முடிவுகள் எவ்வாறு +மேற்கொள்ளப் பட வேண்டும் என்பது குறித்த தவிர்க்க இயலாத கேள்வியினை +எழுப்புகிறது. உதாரணத்திற்கு நிரலொன்றின் நகலினையுடைய நபரொருவர் அதன் +நகலொன்றைப் பெற விழையும் மற்றொருவரை சந்திக்கிறார் என வைத்துக் +கொள்வோம். அவர்களால் அந்நிரலை நகல் எடுக்க இயலும். இங்ஙனம் நடைப் பெறுவதை யார் +தீர்மானிப்பது? சம்பந்தப் பட்ட நபர்களா? அல்லது“உடைமையாளரென்று” அழைக்கப்படும் +இன்னொருவரா?</p> +<p> + உருவாக்குவோரது இலாபத்தினை இதன் விடைக்கான காரணியாக அனுமானித்துக் கொண்டு, +இவ்வினாக்களை மென்பொருட்களை உருவாக்குவோர் கருதுகிறார்கள். வர்த்தகத்துக்குள்ள +அரசியல் பலமானது இவ்விரு காரணிகளையும், அதற்கான விடையாக உருவாக்குவோர் +சொல்வதையும் ஏற்கும்படி அரசாங்கத்தை இட்டுச் சென்றுள்ளது. அதாவது நிரலொன்றுக்கு +உடைமையாளர் இருக்கிறாரென்று. நிதர்சனத்தில் அது நிரலின் உருவாக்கத்தில் +தொடர்புடைய நிறுவனமே.</p> +<p> + இதே கேள்வியினை வேறொரு காரணியைக் கொண்டு நான் கருத விரும்புகிறேன்: +சமுதாயத்தின் பொதுவான செழிப்பும் விடுதலையும்.</p> +<p> + தற்போதைய சட்டங்களுக்கு உட்பட்டு இதன் விடையைத் தீர்மானிக்க இயலாது. அறத்தைச் +சார்ந்து சட்டமிருக்க வேண்டுமே ஒழிய சட்டத்தை சார்ந்து அறம் +இருத்தலாகாது. இவ்வினாவினை தற்போதைய நடைமுறையாலும் தீர்மானிக்க +இயலாது. வேண்டுமாயின் சாத்தியமான தீர்வுகளை அது +பரிந்துரைக்கலாம். மென்பொருட்களுக்கு உடைமையாளர்களை அங்கீகரிப்பதால் யாரெல்லாம் +பயனடைகிறார்கள்? யாரெல்லாம் நட்டப்படுகிறார்கள்? ஏன்? எவ்வளவு? என்பவையே இதனைத் +தீர்மானிக்க ஒரே வழி. வேறுவிதமாகச் சொல்ல வேண்டுமாயின், தனியொருவரின் +விடுதலையையும் பொருட்களின் உற்பத்தியையும் கருத்தில் நிறுத்தி, இலாப-நட்ட +ஆராய்ச்சியொன்றை சமுதாயத்தின் பொருட்டு நாம் மேற்கொள்ள வேண்டும்.</p> +<p> + இக்கட்டுரையில் உடைமையாளர்களைக் கொண்டிருப்பதால் ஏற்படும் விளைவுகளை விவரித்து +முடிவுகள் பாதகமாக அமையும் என்பதை எடுத்துக்காட்டுகிறேன். நாம் இயற்றும் +மென்பொருட்களைப் பகிர, மறுவிநியோகம் செய்ய, கற்க, மேம்படுத்த பிறரை ஊக்குவிக்க +நிரலாளர்கள் கடமைப்பட்டிருக்கின்றனர் என்பதே எமது முடிவு. வேறு வார்த்தைகளில் +சொல்ல வேண்டுமானால்“<a href="/philosophy/free-sw.html">கட்டற்ற</a>” +மென்பொருட்களை இயற்றுவது.<a href="#f1">(1)</a></p> + +<h3 id="owner-justification">தங்கள் ஆளுமையை உடைமையாளர்கள் எவ்வாறு நியாயப் படுத்துகிறார்கள்</h3> +<p> + நிரல்கள் சொத்தாகக் கருதப்படும் இன்றைய முறையினால் பயனடைவோர் நிரல்களைத் +தங்களுடையதாகக் கோரிடும் பொருட்டு இரண்டு வாதங்களை முன்வைக்கிறார்கள். உணர்வுப் +பூர்வமான வாதமொன்று; பொருளாதாரம் சார்ந்த வாதம் மற்றொன்று.</p> +<p> + “என்னுடைய வியர்வை, மனம், ஆவியனைத்தையும் இந்நிரலுக்காக தந்துள்ளேன். இது +என்னிடமிருந்து வருகிறது. இது என்னுடையது!” என்பதாக இருக்கிறது உணர்வுபூர்வமான +வாதம்.</p> +<p> + இவ்வாதத்தினை சிறப்பாக மறுத்துரைக்க வேண்டிய அவசியமில்லை. இத்தகைய பந்த +உணர்வானது நிரலாளர்கள் தங்களுக்குப் பொருந்துகிற போது ஏற்படுத்திக் +கொள்ளக்கூடியது. தவிர்க்க இயலாதது ஒன்றுமல்ல. அதே வேளையில் இதே நிரலாளர்கள் ஒரு +சம்பளத்தின் பொருட்டு எவ்வாறு தங்களின் எல்லா உரிமைகளையும் ஒரு பெரிய +நிறுவனத்திடம் அடமானம் வைக்கிறார்கள் என்பதையும் கருத்தில் +கொள்ளவும். உணர்வுபூர்வமான அனைத்து பந்தங்களும் சட்டென்று மறைந்துவிடும். மாறாக +மத்திய காலங்களில் தன்னுடைய படைப்பொன்றில் பெயரைக் கூட இடாத தலைசிறந்தக் +கலைஞர்களையும் கருத்தில் கொள்ளவும். அவர்களுக்கு கலைஞரின் பெயர் +முக்கியமல்ல. பணியின் நிறைவும் அதனால் பூர்த்தியாகும் நோக்கமுமே +பொருட்படுத்தப்பட்டது. இவ்வணுகுமுறையானது பல நூறாண்டுகளுக்குத் தொடர்ந்தது.</p> +<p> + பொருளாதார அணுகுமுறையின் போக்கானது; “ நான் பணம் சம்பாதிக்க +விரும்புகின்றேன். (பொதுவாக‘வாழ்க்கையை நடத்த’ என அரைகுறையாக இது விவரிக்கப் +படுகிறது.) தாங்கள் நிரலெழுதுவதன் மூலம் என்னைப் பணக்காரனாக +அனுமதிக்கவில்லையெனில் நான் நிரலெழுத மாட்டேன். என்னைப் போன்றே பிறரும் +இருப்பதால் யாருமே நிரலெழுத மாட்டார்கள். கடைசியில் நிரலெதுவுமே இல்லாத +நிலையில் சிக்கிக் கொள்வீர்கள்! ” புத்திசாலிகளிடமிருந்து கிடைக்கும் நட்பான +அறிவுரையாக இவ்வச்சுறுத்தல் அரங்கேற்றப்படுகிறது.</p> +<p> + இவ்வச்சுறுத்தல் ஏன் பித்தலாட்டமானது என்பதை பின்னர் +விளக்குகின்றேன். வாதத்தின் மற்றொரு கூற்றில் தெளிவாகத் தெரியும் உள்ளார்ந்த +அனுமானத்தைப் பற்றி முதலில் பகர விரும்புகிறேன்.</p> +<p> + நிரலொன்றும் இல்லாத நிலையினையும் தனியுரிம நிரலொன்றின் சமூகப் பயன்பாட்டையும் +ஒப்பிட்டவாறே இதனாக்கம் துவங்குகிறது. தொடர்ந்து ஒட்டுமொத்தமாய் பார்க்கிறபோது +பயனளிப்பதாய் இருப்பதால் தனியுரிம மென்பொருளின் உருவாக்கம் ஊக்குவிக்கப்பட +வேண்டியதாக முடிவு கொள்கிறது. இரண்டு சாத்தியக் கூறுகளை மட்டும் ஒப்பிடுவதே +இதிலுள்ள மாயையாகும். தனியுரிம மென்பொருளிருக்கும் நிலையொன்று; மென்பொருளே +இல்லாத நிலை மற்றொன்று; வேறு மாற்றுக்களே இல்லாததாக அனுமானிக்கப் படுகிறது.</p> +<p> + மென்பொருளுக்கு பதிப்புரிமையளிக்கும் முறையால், மென்பொருள் உருவாக்கம் என்பதே +அம்மென்பொருளின் பயன்பாட்டினை நிர்வகிக்கக் கூடிய ஒரு உடைமையாளரின் இருப்போடு +தொடர்பு படுத்தப்படுகின்றது. இத்தொடர்பு இருக்கின்ற வரையில், நாம் தனியுரிம +மென்பொருள் அல்லது மென்பொருளில்லா நிலை ஆகிய இரண்டுள் ஒன்று எனும் நிலையையே +பெரும்பாலும் சந்திக்கின்றோம். இத்தொடர்பொன்றும் தவிர்க்கவியலாதது +அல்ல. உடைமையாளர்களை ஏற்கும் குறிப்பிட்ட சமூக/ சட்டக் கொள்கை முடிவினையே நாம் +கேள்விக்குட் படுத்துகின்றோம். வாய்ப்பினை தனியுரிம மென்பொருள் - மென்பொருளற்ற +நிலை எனச் செய்வது கேள்வியிடமே இறைஞ்சுவதாகும்.</p> + +<h3 id="against-having-owners">உடைமையாளர்களைக் கொண்டிருப்பதற்கு எதிரான வாதம்</h3> +<p> + “மென்பொருள் உருவாக்கத்தை உடைமையாளர்களைக் கொண்டிருப்பதோடு தொடர்பு படுத்தி +அதன் பயன்பாட்டினைக் கட்டுப்படுத்த வேண்டுமா?” என்பதே நம்முன்னுள்ள கேள்வி.</p> +<p> + இதனை முடிவு செய்வதற்கு, இவ்விரு செயல்களாலும் சமூகத்தில் ஏற்படக்கூடிய +தாக்கத்தினை தனித் தனியாக நாம் தேர்ந்தாராய வேண்டும். மென்பொருளை +உருவாக்குவதால் (அதனை விநியோகிப்பதற்கான நியதிகளைச் சாராது) ஏற்படும் +தாக்கத்தினையும் அதன் பயன்பாட்டினைக் கட்டுப் படுத்துவதால் ஏற்படும் +தாக்கத்தினையும் (மென்பொருள் உருவாக்கப் பட்டுவிட்டது என்பதை அனுமானித்துக் +கொண்டு) நாம் கருத வேண்டும். இவற்றுள் ஒன்று நன்மை பயப்பதாகவும் மற்றொன்று +தீமைப் பயப்பதாகவும் இருக்குமாயின், இவற்றுக்கிடையே ஏற்படுத்தப் படும் +தொடர்பினை விட்டுவிட்டு, நன்மைப் பயப்பதை மேற்கொள்வது நல்லது.</p> +<p> + வேறு வகையில் சொல்லவேண்டுமாயின், ஏற்கனவே உருவாக்கப் பட்ட நிரலொன்றின் +விநியோகத்தினைக் கட்டுப் படுத்துவது ஒட்டுமொத்த சமூகத்திற்கு தீமையாயின், +அறநெறி வாழ் மென்பொருள் உருவாக்குபவர் அங்ஙனம் செய்யமாட்டார்.</p> +<p> + பகிர்ந்து கொள்வதைக் கட்டுபடுத்துவதால் ஏற்படும் தாக்கத்தை அறிய, நாம் கட்டுப் +படுத்தப் பட்ட (தனியுரிம) நிரலொன்றால் சமூகத்திற்கு ஏற்படும் பயனை அதே +மென்பொருள் அனைவருக்கும் கிடைப்பதால் ஏற்படும் பயனுடன் ஒப்பிட வேண்டும். அதாவது +சாத்தியமுள்ள ஈருலகங்களை ஒப்பிடுவது.</p> +<p> + இவ்வாய்வானது இதனை மறுத்துரைப்பதாய் அமையும் வாதமான, “நிரலின் நகலொன்றைப் +பிறருடன் பகிர்ந்து கொள்வதால் ஏற்படும் நன்மையை அங்ஙனம் செய்வதால் +உடைமையாளருக்கு ஏற்படும் தீமை இல்லாது செய்துவிடுகிறது ” என்பதையும் +ஆராய்கிறது. இப் பிரதிவாதமானது நன்மையும் தீமையும் சம அளவில் இருப்பதாகக் +கருதுகிறது. இவ்வாய்வானது இப்பரிமாணங்களை ஒப்பிட்டு இதனால் ஏற்படும் நன்மை மிக +அதிகம் எனவும் எடுத்துக் காட்டுகிறது.</p> +<p> + இவ்வாதத்தை தெளிவாக விளக்க, பிரிதொரு துறையான சாலை நிர்மாணத்துடன் பொருத்திப் +பார்ப்போம்.</p> +<p> + அனைத்து சாலைகளையும் வசூல் சாவடிகளுடன் நிர்மாணிக்க நிதியளிப்பது +சாத்தியப்படலாம். தெரு முனைகள் அனைத்திலும் வசூல் சாவடிகள் அமைக்கப்பெற இது +வழிவகுக்கும். இத்தகைய முறையால் சாலைகளை மேம்படுத்த மிகப்பெரிய ஊக்கத் +தொகையையும் திரட்டித் தர இயலலாம். அதே சமயம் இது குறிப்பிட்ட ஒரு சாலையைப் +பயன்படுத்தும் எந்தவொரு பயனரையும் அச்சாலைக்காக நிதியளிக்க நிர்பந்திக்கவும் +செய்யும். ஆனால், வசூல் சாவடியென்பது சுமூகமானதொரு பயணத்திற்கு ஏற்படுத்தப் +படும் செயற்கையான தடையாகும். மகிழுந்துகள், சாலைகள் ஆகியவற்றின் இயல்பின் +விளைவாக அமையாததால் செயற்கையாகிறது.</p> +<p> + வசூல் சாவடிகளைக் கொண்ட சாலைகளையும், தடையற்ற சாலைகளையும் அதன் பயன்பாடுகளைக் +கொண்டு ஒப்பிடுகையில், வசூல் சாவடிகள் இல்லாத சாலைகள் நிர்மாணிக்க, இயக்க செலவு +குறைந்ததாகவும், பாதுகாப்பானதாகவும், திறம்பட பயன்படுத்த வல்லதாகவும் +இருக்கின்றன.<a href="#f2">(2)</a> ஏழை நாடொன்றில், வசூல் சாவடிகள், சாலைகளை பல +குடிமக்களுக்கு இல்லாது செய்துவிடும். ஆகையால் வசூல் சாவடிகள் இல்லாத சாலைகள் +குறைந்த செலவில் சமூகத்திற்கு அதிக பயனைத் தரவல்லது. சமூகத்திற்கு உகந்ததும் +கூட. ஆகையால் சமூகம் சாலைகளுக்கான நிதியை வசூல் சாவடிகளின் மூலம் திரட்டாமல் +வேறு வழிகளில் கொணர வேண்டும். ஒரு முறை நிர்மாணிக்கப் பட்டுவிட்டால் சாலைகளின் +பயன்பாடு தடையற்றதாக இருக்க வேண்டும்.</p> +<p> + இச்சாவடிகளை முன்மொழிவோர் நிதித் திரட்ட மாத்திரம் இதனை வழியாகச் சொல்கிற போது, +கிடைக்கக்கூடிய வாய்ப்புதனைத் திரிக்கின்றனர். வசூல் சாவடிகள் நிதி திரட்ட +வல்லது தான். அவை வேறு சிலவற்றையும் கூடவே செய்கின்றன. விளைவு சாலைகளையே +தரமிழக்கச் செய்கின்றன. தடையற்ற சாலைகளைப் போல வசூல் சாவடிகளைக் கொண்ட சாலைகள் +நன்மைப் பயப்பதாய் இருப்பதில்லை. தொழில்நுட்ப ரீதியாக மேன்மையுடைய சாலைகளை +நமக்குத் தருவதென்பதை, தடையற்ற சாலைகளை வசூல் சாவடிகளைக் கொண்ட சாலைகளாக +மாற்றுவது என அர்த்தம் கொண்டால், அது முன்னேற்றமாகாது.</p> +<p> + தடையற்ற சாலைகளை உருவாக்குதற்கும் நிதி செலவாகும்தான். அதைப் பொது மக்கள் +ஏதாவதொரு வழியில் செலுத்தித் தான் ஆக வேண்டும். ஆனால் இது வசூல் சாவடிகளை +இன்றியமையாததாக கருதுவதாகாது. இவ்விரு சந்தர்ப்பங்களிலுமே நிதியளிக்க +வேண்டியவர்களாக உள்ள நாம் தடையற்ற சாலைகளுக்கு நிதியளிப்பதால் நாம் செலவிடும் +பணத்திற்கு அதிக மதிப்பினைப் பெறுகின்றோம்.</p> +<p> + சாலையில்லா நிலையைக் காட்டிலும் வசூல் சாவடிகள் நிறைந்த சாலை தாழ்ந்தது என நான் +இங்கே சொல்லவில்லை. வசூலிக்கப்படும் தொகை மிக அதிகமாக இருந்து யாருமே +பயன்படுத்தாது போனால் அது உண்மையாகலாம். ஆனால் இது வசூலிப்பவருக்கான கொள்கையாக +இருக்க வாய்ப்புகள் குறைவு. ஆயினும், வசூல் சாவடிகள் குறிப்பிடத் தக்க +சேதாரமும் அசவுகரியமும் ஏற்படுத்தும் வரையில், அதிக தடைகளையேற்படுத்தாத +முறைகளில் நிதி திரட்டுவது நல்லது.</p> +<p> + இவ்வாதத்தினை மென்பொருள் உருவாக்கத்திற்கு பொருத்தி, பயனுள்ள மென்பொருளுக்கு,“ +வசூல் சாவடிகளை ” ஏற்படுத்துவதென்பது சமூகத்திற்கு பெருந் தீமையை ஏற்படுத்தும் +என்பதனை இப்போது எடுத்துகாட்டுகின்றேன். இது நிரல்கள் உருவாக்கத்தை அதிக +விலையுள்ளதாக்கி, அதிக விலையுடனே விநியோகம் செய்யத் தக்கதாக்கி, திருப்தியற்று +திறம்பட பயன்படுத்த இயலாது செய்துவிடும். நிரல் உருவாக்கம் ஏனைய பிற வழிகளில் +ஊக்குவிக்கப் பட வேண்டும் என இது தொடரும். மேற்கொண்டு மென்பொருள் +உருவாக்கத்தினை ஊக்குவிக்கவல்ல ஏனைய வழிகளையும், (உண்மையிலேயே தேவையான +அளவிற்கு) நிதியளிக்கும் முறையினையும் விளக்குகின்றேன்.</p> + +<h4 id="harm-done">மென்பொருளைக் கட்டுப் படுத்துவதால் ஏற்படும் தீமைகள்</h4> +<p> + ஒரு நிரல் உருவாக்கப் பட்டதெனவும் அதற்குண்டான நிதியும் அளிக்கப் +பட்டுவிட்டதாகவும் நினைத்துக் கொள்ளுங்கள். அதனை இப்போது தனியுரிமமாக +ஆக்கவேண்டுமா அல்லது கட்டற்று பகிர்ந்து கொள்ள வழி செய்து பயன்படுத்த வேண்டிமா +என்பதனைச் சமூகம் தேர்வு செய்ய வேண்டும். நிரலொன்றின் இருப்பையும் அதன் +புழக்கத்தையும் விரும்பத்தக்கதாகக் கருதவும்.<a href="#f3">(3)</a></p> +<p> + விநியோகத்தினையும் மாற்றங்களையும் கட்டுப் படுத்துவதால் அதன் பயன்பாட்டினை +எளிமையாக்க முடியாது. அவற்றால் இடையூறுகளை வேண்டுமாயின் ஏற்படுத்த +முடியும். விளைவு எதிர்மறையாகவே இருக்கும். எவ்வளவு? எத்தன்மையது?</p> +<p> + மூன்று விதமான பொருட் தீமைகள் இத்தகைய கட்டுபாட்டால் ஏற்படலாம்.</p> + +<ul> +<li>சொற்பமானோரே நிரலைப் பயன்படுத்துவர்.</li> + +<li>நிரலைத் தமதாக்கவோ அதன் வழு நீக்கவோ பயனர்களால் இயலாது.</li> + +<li>நிரலைக் கொண்டு பிற உருவாக்குநர்களால் கற்கவோ அல்லது தமது புதிய பணிகளை அதனை +அடிப்படையாகக் கொண்டுத் துவக்கவோ இயலாது.</li> +</ul> + +<p> + ஒவ்வொரு பொருட் தீமையும் தத்தம் நிலைகளில் உடனிகழக் கூடிய உளவியல் ரீதியான +பாதிப்பொன்றினையும் கொண்டுள்ளது. மக்கள் மேற்கொள்ளும் முடிவுகளைத் தொடர்ந்து +அவர்களிடையே ஏற்படக்கூடிய உணர்வுகள், அணுகுமுறைகள் மற்றும் சார்புடைமைகளின் +தாக்கங்களை இது குறிக்கின்றது. மக்கள் சிந்திக்கும் முறையில் ஏற்படும் இத்தகைய +தாக்கம் சக குடிமக்களுடனான அவர்களுடைய உறவுகளைப் பாதிப்பதோடு பொருளாதார +விளைவுகளையும் ஏற்படுத்த வல்லதாகின்றது.</p> +<p> + நிரலொன்று தரத்தக்க நன்மதிப்பை இம்மூன்று நிலைகளிலான பொருட் தீமைகள் குன்றச் +செய்கின்றன. ஆனால இந் நன்மதிப்பை இல்லாது செய்து விட இயலாது. நிரலின் +மதிப்புகள் அனைத்தையும் அவை இல்லாது செய்து விடுமாயின், நிரலெழுதவற்கு தேவைப் +பட்ட ஆற்றல்கள் அனைத்திற்கும் நிகரான தீமைகளை நிரலெழுதுவது சமூகத்திற்குத் +தருவதாகிறது. வாதத்தின் பொருட்டு விற்பனைக்கு இலாபகரமான நிரலொன்று கட்டாயமாக +நிகரான நேரடியான பொருளாதார நன்மைகளைத் தரவேண்டும்.</p> +<p> + ஆனால் உடனிகழக் கூடிய உளவியல் ரீதியான தீமைகளைக் கருத்தில் கொள்வோமாயின், +தனியுரிம மென்பொருள் விளைவிக்க வல்ல தீமைக்கு எல்லையே இல்லை.</p> + +<h4 id="obstructing-use">நிரல்களின் பயன்பாட்டினை தடுத்தல்</h4> +<p> + முதல் அளவிலானத் தீமை நிரலின் சாதாரணப் பயன்பாட்டினைத் தடுக்கிறது. நிரலொன்றின் +நகலின் இறுதி நிலையாக்கச் செலவு ஏறத்தாழ சுழியம் தான். (அத்துடன் இப்பணியை +தாங்களே மேற்கொள்வதின் மூலம் இத்தொகையை தாங்களே செலுத்திவிட முடியும்.) ஆக +கட்டற்ற சந்தையொன்றில் , இதற்கு விலையெதுவும் இல்லை. உரிமக் கட்டணம் என்பது +நிரலினைப் பயன்படுத்துவதில் குறிப்பிடத்தக்க ஊக்கக்குறைவாகும். பரவலான பயனுள்ள +நிரலொன்று தனியுரிமம் பெற்றிருந்தால் சொற்பமானோரே அதனைப் பயன்படுத்துவர்.</p> +<p> + சமூகத்திற்கு நிரலொன்றின் பங்கு அதற்கு உடைமையாளரை நியமிப்பதால் +குன்றிப்போகின்றது என எளிமையாக காட்டிவிடலாம். விலைக் கொடுக்க வேண்டுமெனும் +கட்டாயத்தை சந்திக்கும், நிரலைப் பயன்படுத்தும் ஆற்றலுடைய எவரும், அதனைத் தர +முன்வரலாம் அல்லது தாராதவாறே பயன்படுத்தவும் செய்யலாம். பயனரொருவர் விலைத் +தருவதற்கு முன்வந்தால், இரு தரப்பினிடையேயான நிகரானதொரு வளப் +பரிமாற்றமாகின்றது. ஆனால் அங்ஙனம் செய்யாது நிரலை பயன்படுத்த ஒருவர் முனையும் +ஒவ்வொரு சமயமும், இது யாருக்குமே பலனளிக்காது அவரைப் பாதிக்கின்றது. சுழிமுன் +எண்களை சுழியத்துடன் கூட்டினால் கிடைப்பதும் சுழிமுன் எண்கள்தான்.</p> +<p> + ஆனால் இது நிரலொன்றினை உருவாக்கத் தேவைப்படும் பணியின் அளவைக் +குறைத்திடாது. விளைவு, பிரதி மணி நேர பணியொன்று தரும் பயனர் திருப்தியைக் +கொண்டு பார்க்கும்போது, ஒட்டுமொத்த பணிமுறையின் நேர்த்தி குறைகிறது.</p> +<p> + நிரலொன்றின் நகலுக்கும் மகிழுந்து, நாற்காலி, சான்ட்விச் போன்றவற்றின் +நகல்களுக்குமிடையே உள்ள முக்கியமான வேறுபாட்டினை இது +பிரதிபலிக்கின்றது. அறிவியல் புதினங்களுக்கு வெளியே பௌதீகப் பொருட்களை +நகலெடுப்பதற்கென இயந்திரங்கள் எதுவும் இல்லை. ஆனால் நிரல்களை நகலெடுப்பது +சுலபம். சிறிய உழைப்பினைக் கொண்டு யார் வேண்டுமானாலும் தேவைப்படுமளவிற்கு +எவ்வளவு நகல் வேண்டுமானாலும் எடுக்கலாம். திடத் தன்மை காக்கப் படுவதால், இது +பௌதீகப் பொருட்களைப் பொறுத்த மட்டில் உண்மையாகாது. ஒவ்வொரு புதிய பிரதியும் +மூலப் பொருட்களைக் கொண்டு முதற் பிரதி உருவாக்கப் பட்ட அதே முறையில் +உருவாக்காப்பட வேண்டும்.</p> +<p> + பௌதீகப் பொருட்களைப் பொருத்த மட்டில் குறைவான பொருட்களே வாங்கப்பட்டன என்றால் +குறைவான மூலப் பொருட்களும் அவற்றை ஆக்க குறைவான வேலையும் என அர்த்தம் +கொள்ளலாம். எனவே அவற்றைப் பயன்படுத்துவதில் காட்டப்படும் ஊக்கக்குறைவில் +அர்த்தமுள்ளது. சாதாரணமாக முதற் தொகையொன்று இருப்பதும், உருவாக்கத் தொகையொன்று +இருப்பதும், இவை உற்பத்தியின் நெடுகே நிரவி நிற்பதும் உண்மைதான். உற்பத்தியின் +இறுதிநிலையாக்கச் செலவு குறிப்பிடத்தக்கதாக இருக்கும் வரையில், உருவாக்கத் +தொகையின் பகுதியொன்றை சேர்ப்பது தரத்தில் வேறுபாட்டினை ஏற்படுத்தாது. சாதாரண +பயனர்களின் சுதந்தரத்தில் தடை ஏற்படுத்தும் தேவை அதற்கில்லை.</p> +<p> + ஆயினும், சுமத்தாது போனால் இலவசமாகக் கிடைக்கக் கூடிய பொருளொன்றின் மீது விலையை +சுமத்துவது தர ரீதியான மாற்றமாகும். மென்பொருள் விநியோகத்திற்கு மையப் +படுத்தப்பட்டு சுமத்தப்படும் கட்டணம் வலுவானதொரு ஊக்கக் குறைவாகின்றது.</p> +<p> + அத்துடன், தற்போது கடைப் பிடிக்கப் படும் மையப்படுத்தப்பட்ட உருவாக்கம் +மென்பொருட்களின் நகல்களைக் கொண்டு சேர்க்கக் கூடிய வழிமுறையாகக் கொள்ளக் கூட +திறனற்றதாகும். வன் தட்டுக்கள் நாடாக்கள் போன்றவற்றை அவசியத்திற்கு அதிகமான +ஆடம்பர பொதிகளுக்குள் உள்ளடக்கி, பெரிய அளவில் உலகம் முழுவதும் அனுப்பி, +விற்பனை நிமித்தம் சேர்த்து வைக்கும் முறையாகும் இது. இதற்குண்டான தொகையும் +வாணிபத்திற்காக செலவிடப் படும் தொகையாக அளிக்கப்படுகின்றது. உண்மையில் இது +உடைமையாளர்களைக் கொண்டிருப்பதால் ஏற்படும் விரயத்தின் ஒரு பகுதியே ஆகும்.</p> + +<h4 id="damaging-social-cohesion">சமூக ஒத்திசைவை சிதைத்தல்</h4> +<p> + குறிப்பிட்ட நிரலொன்றினை இயக்குவது பயனுடையதெனத் தாங்களும் தங்கள் +சுற்றத்தவரும் கருதுவதாக இருக்கட்டும். சுற்றத்தாரைப் பற்றிய தார்மீக +அக்கறையினால், இந்நிலையை முறையாகக் கையாள்வது தங்களிருவரையுமே அதனைப் +பயன்படுத்தச் செய்யும் எனத் தாங்கள் உணர வேண்டும். தங்களிருவரில் ஒருவரை +அந்நிரலைப் பயன்படுத்தச் செய்து மற்றொருவரைத் தடுப்பது +பிரிவினையாகும். தாங்களும் சரி தங்களது சுற்றத்தவரும் சரி இதனை ஏற்கத்த தக்கதாக +கொள்ள இயலாது.</p> +<p> + வழக்கமான மென்பொருள் உரிமமொன்றினை ஏற்பதென்பது தங்களின் சுற்றத்தவரை +ஏய்ப்பதாகும். “இந்நிரல் என் சுற்றத்தவருக்கு கிடைக்காதிருக்க +உறுதியளிக்கிறேன். இதனால் இதன் நகலொன்று எனக்கு கிடைக்கும்.” இதனை நியாயப் +படுத்தும் பொருட்டு, அங்ஙனம் செய்யும் மக்கள், சுற்றத்தவருக்கு உதவுவதின் +முக்கியத்துவத்தை புறந்தள்ளிவிட்டு, உளவியல் ரீதியான அழுத்தங்களுக்கு +ஆட்படுத்தப்படுகின்றார்கள். இதனால் பொது இயல்பு +பாதிப்புக்குள்ளாகிறது. நிரலொன்றின் பயன்பாட்டினைத் ஊக்கமிழக்கச் செய்யும் +பொருட் தீமையுடன் தொடர்புடைய உளவியல் ரீதியானக் கேடாகும் இது.</p> +<p> + பல பயனர்கள் சுயநினைவற்று பகிர மறுப்பதெனும் தவறினை அங்கீகரிப்பதால், உரிமங்கள் +மற்றும் சட்டங்களைப் புறந்தள்ள முடிவெடுத்து, நிரல்களை எவ்வழியிலாவது பகிர்ந்து +கொண்டும் விடுகின்றனர். ஆனால் அங்ஙனம் செய்வதற்காக அடிக்கடி குற்றவுணர்வும் +கொள்கின்றனர். நல்லதொரு சுற்றத்தவராக இருக்க வேண்டுமாயின் சட்டத்தினை உடைக்க +வேண்டும் என அவர்கள் அறிந்திருக்கிறார்கள், ஆயினும் சட்டங்களே +அதிகாரமுடையவையாகக் கருதுவதால், நல்லதொரு சுற்றத்தவராக இருப்பதென்பதை +(உண்மையில் அவர்கள் அத்தகையவர்களே) கீழ்படியாத, அவமானந்தரும் செயலாக +முடிவுசெய்து விடுகின்றனர். இதுவும் ஒரு வகையான உளவியல் பாதிப்பே. ஆனால் +இத்தகைய உரிமங்களுக்கும் சட்டங்களுக்கும் தார்மீக உந்துதல் இல்லை என முடிவு +செய்வதன் மூலம் இவற்றிலிருந்து ஒருவர் விடுபடலாம்.</p> +<p> + தங்களது பணியினைப் பயன்படுத்த பல பயனர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என +அறிந்து நிரலாளர்களும் உளவியல் ரீதியான பாதிப்புகளுக்கு உள்ளாகிறார்கள். இது +ஒருவித எதிர்மறை (அ) மறுப்பு மனோபாவத்திற்கு வித்திடுகிறது. தொழில் நுட்ப +ரீதியாக பிரமாதமாகத் தாம் கண்டெடுத்த பணியினை ஊக்க மிகுதியுடன் ஒரு நிரலாளர் +விவரிக்கலாம். “அதனைப் பயன்படுத்த நான் அனுமதிக்கப் படுவேனா?” எனக் கேட்கப் +படும் போது, அவரது முகம் தொங்கிப் போய், இயலாது என்பதை விடையாக அவர் ஏற்றுக் +கொள்வார். ஊக்கமிழப்பது போல் உணர்வதை தவிர்க்கும் பொருட்டு, அவர் இவ்வுண்மையை +பெரும்பாலான நேரங்களில் தவிர்த்தோ அல்லது அதன் முக்கியத்துவத்தை குறைக்க வல்ல +எதிர்மறையான ஒரு நிலையினையோ தழுவுவார்.</p> +<p> + ரீகனின் காலந்தொட்டு யுனைடட் ஸ்டேட்ஸின் தட்டுப்பாடு தொழில்நுட்ப ஆக்கத் +திறனல்ல. மாறாக பொது நலத்தின் பொருட்டு இணைந்து பணிசெய்ய உறுதியில்லாமையே +ஆகும். பிந்தையதை விளையாகத் தந்து முந்தையதை ஊக்குவிப்பதில் எந்தவொரு +அர்த்தமும் இல்லை.</p> + +<h4 id="custom-adaptation">நிரல்களை ஏற்றாற்போல் ஆக்குவதை தடுத்தல்</h4> +<p> + ஏற்றாற் போல் நிரல்களை ஆக்கிக் கொள்ள இயலாத நிலை, இதனால் ஏற்படும் இரண்டாவது +நிலையிலானப் பொருட் தீமையாகும். முந்தைய தொழில்நுட்பத்தினைக் காட்டிலும் மாற்ற +எளியதாய் இருப்பதே மென்பொருளின் மிகப் பெரிய நன்மையாகும். ஆனால் வணிக ரீதியாக +கிடைக்க வல்ல பெரும்பாலான மென்பொருட்கள், தாங்கள் அதனை வாங்கியப் பிறகும் கூட +மாற்றுதற்கு கிடைப்பதில்லை. ஒரு கருப்புப் பெட்டியாக வாங்கவோ விடுக்கவோ மட்டுமே +அது கிடைக்கப்பெறுகிறது. அவ்வளவுதான்.</p> +<p> + தாங்கள் இயக்கக் கூடிய நிரலொன்று விளங்கிக் கொள்ள கடினமான எண்களைத் +தொடர்ச்சியாகக் கொண்டிருக்கும். எவருமே, ஏன் சிறந்த நிரலாளர் ஒருவரால் கூட, +அவ்வெண்களை மாற்றி வேறு விதமாகப் பணியாற்ற வைப்பது சுலபமல்ல.</p> +<p> + நிரலாளர்கள் நிரலொன்றின் “மூலத்தினைக்” கொண்டு பணியாற்றுவது வழக்கம். இவை +போர்டிரான் (Fortran) அல்லது சி (C) போன்ற நிரலாக்க மொழிகளைக் கொண்டு +இயற்றப்படுகின்றன. பயன்படுத்தப்படும் தரவுகளையும் நிரலின் பகுதிகளையும் வழங்க +பெயர்களை அது பயன்படுத்தும். குறியீடுகளைக் கொண்டு செயல்களைப் +பிரநிதிக்கும். உதாரணத்திற்கு கூட்டலுக்கு ‘+’ குறியும் கழித்தலுக்கு ‘-’ +குறியும் உள்ளன. நிரலாளர்கள் நிரல்களைப் படித்து மாற்ற உறுதுணையாக இங்ஙனம் +வடிவமைக்கப் பட்டுள்ளது. ஒரு சம தளத்தின் இரு புள்ளிகளுக்கிடையே உள்ள +இடைவெளியினைக் கண்டறிய உதவும் நிரல் உதாரணமொன்று வருமாறு:</p> + +<pre> + float + distance (p0, p1) + struct point p0, p1; + { + float xdist = p1.x - p0.x; + float ydist = p1.y - p0.y; + return sqrt (xdist * xdist + ydist * ydist); + } +</pre> +<p> + நான் வழக்கமாகப் பயன்படுத்தும் கணினியில் இயக்க வல்ல வடிவத்தில் அதே நிரல் +வருமாறு: +</p> + +<pre> + 1314258944 -232267772 -231844864 1634862 + 1411907592 -231844736 2159150 1420296208 + -234880989 -234879837 -234879966 -232295424 + 1644167167 -3214848 1090581031 1962942495 + 572518958 -803143692 1314803317 +</pre> + +<p> + மூல நிரல் நிரலொன்றைப் பயன்படுத்தும் எந்தவொரு பயனருக்கும் பயனுடையதாகும் +(இயலும் எனும் அளவிலாவது). ஆனால் பெரும்பாலான பயனர்கள் மூல நிரல்களின் +நகல்களைப் பெறுவதற்கு அனுமதிக்கப் படுவதில்லை. தனியுரிம நிரலொன்றின் மூல நிரல் +வழக்கமாக எவரும் கற்க இயலாத வண்ணம் அதன் உடைமையாளரால் இரகசியமாக காக்கப் +படுகிறது. கணினிகளால் மட்டுமே இயக்க வல்ல புரிந்து கொள்ள இயலாத எண்களைக் கொண்ட +கோப்புகளைத் தான் பயனர்கள் பெறுகிறார்கள். இதன் அர்த்தம் நிரலின் உடைமையாளர் +மாத்திரமே அந்நிரலை மாற்ற இயலும்.</p> +<p> + எனது தோழியொருத்தி ஒருமுறை வர்த்தக் ரீதியாக கிடைக்கக் கூடியதொன்றைப் போன்ற +நிரலினை இயற்றிடும் பொருட்டு ஆறு மாதங்கள் வங்கியொன்றில் நிரலாளராகப் +பணிபுரிந்ததாகத் தெரிவித்தார். வர்த்தக ரீதியாக கிடைக்கக் கூடிய அந்நிரலின் +மூலம் கிடைத்திருந்தால் சுலபமாக தங்களது தேவைக்கேற்றாற் போல் +மாற்றியமைத்திருக்க முடியும் எனவும் அவர் நம்பினார். அவ்வங்கி இதற்கென +நிதியளிக்கவும் தயாராக இருந்தது. ஆனால் அனுமதிக்கப்படவில்லை—மூல நிரல் +இரகசியமானது. ஆகையால் அதனை ஈடு செய்யும் விதமாக ஆறு மாதகாலம் அவர் பணியாற்ற +வேண்டியிருந்தது. இப்பணி நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தியில் கணக்கில் கொள்ளப் +படுமாயினும் உண்மையில் விரயம் செய்யப் பட்டதேயாகும்.</p> +<p> + செராக்ஸ் நிறுவனம் 1977-ம் வருட வாக்கில் வரைகலை அச்சியந்திரம் ஒன்றினை +எம்.ஐ.டி யின் ஆர்டிபிஃஸியல் இன்டலிஜன்ஸ் (ஏ.ஐ) ஆய்வகத்திற்கு அன்பளிப்பாக +வழங்கியது. அது கட்டற்ற மென்பொருளால் இயக்கப் பட்ட அதில் பல சொகுசான வசதிகளை +நாங்கள் சேர்த்துக் கொண்டோம். அச்சுப் பணியொன்று நிறைவடையும் போது பயனருக்கு +அறிவிப்பு செய்வது இதற்கு ஒரு உதாரணம். தாள்கள் இல்லாது போகின்ற காரணத்தாலோ, +தாள்கள் சிக்கிக் கொள்வதாலோ பிரச்சனை ஏற்படின் வரிசையில் இருக்கும் பணிகளை ஏவிய +அனைத்துப் பயனர்களுக்கும் அறிவிப்பு தரப்படும். இவ்வசதிகள் சீரான இயக்கத்திற்கு +வழி வகுத்தன.</p> +<p> + பின்னர் புதிய அதிகவேக அச்சியந்திரம் ஒன்றினை செராக்ஸ் நிறுவனம் ஏ.ஐ +ஆய்வகத்திற்கு வழங்கியது. முதன்முதலில் வெளி வந்த லேசர் அச்சியந்திரங்களில் +ஒன்றாகும் அது. அது தனியொரு விசேட கணினியில் இயங்கிக் கொண்டிருந்த தனியுரிம +மென்பொருளால் ஆகியிருந்தமையால் நாங்கள் விரும்பிய எந்தவொரு வசதியினையும் அதில் +சேர்க்க இயலவில்லை. அச்சுப் பணியொன்று விசேட கணினிக்கு அனுப்படும் போது +அறிவிப்புத் தர எங்களால் ஏற்பாடு செய்ய இயலும். ஆனால் பணி அச்சிடப்படும் +போதுசெய்ய இயலாது (இடைபட்ட தாமதம் கருத்தில் கொள்ளத் தக்கது). ஒரு பணி அச்சிடப் +பட்டதா என அறிய எந்தவொரு வழியும் இல்லை. தங்களால் யூகிக்க மட்டுமே +இயலும். மேலும் தாள்கள் சிக்குகின்ற போது யாருக்கும் தெரிவிக்கப்படாதமையால், +அச்சியந்திரப் பழுது களையப் படாதவாறே மணிக்கணக்கில் கிடக்க நேர்ந்தது.</p> +<p> + நிரல்களை இயற்றியோரைப் போலவே இப்பழுதுகளை களைய வல்ல ஆற்றல் ஏ.ஐ ஆய்வகத்தின் +நிரலாளர்களுக்கு இருந்தது. ஆனால் செராக்ஸுக்கு இவற்றைக் களைவதில் +ஆர்வமில்லை. நாங்கள் அதனைக் களைவதையும் தடுக்கத் தேர்ந்தார்கள். ஆக பழுதுகளை +ஏற்க நாங்கள் பணிக்கப் பட்டோம். அவை ஒருபோதும் களையப் படவில்லை.</p> +<p> + சிறந்த நிரலாளர்கள் பலர் இவ்வெரிச்சலை அனுபவித்திருக்கிறார்கள். வங்கியால் +துவக்கத்திலிருந்து நிரலை இயற்றி சிக்கலைத் தீர்த்துக் கொள்ள இயலும். ஆனால் +எத்தகைய ஆற்றலிருப்பினும் ஒரு சாதாரண பயனருக்கு விட்டுக் கொடுப்பதைத் தவிர வேறு +வழியில்லை.</p> +<p> + விட்டுக் கொடுப்பது சுயச் சார்பு சிந்தனைக்கு உளவியல் ரீதியான பாதிப்பினை +ஏற்படுத்துகிறது. தங்களின் தேவைக் கேற்றாற் போல் மாற்றி அமைத்துக் கொள்ள இயலாத +வீட்டில் வாழ்வதென்பது நம்பிக்கை இழக்கச் செய்வதாகும். ஊக்கமிழக்கவும் விலகவும் +செய்து ஒருவரது வாழ்வின் பிற அம்சங்களிலும் பாதிப்பினை ஏற்படுத்த +வல்லது. இங்ஙனம் உணரும் மக்கள் மகிழ்ச்சியற்றவராய் நல்ல பணிகளை +மேற்கொள்வதில்லை.</p> +<p> + மென்பொருளைப் போன்றே சமையற் குறிப்புகளும் ஆகிவிட்டால் எப்படி இருக்கும் என்று +நினைத்துப் பாருங்கள். “இச் சமையற் குறிப்பிலிருந்து உப்பினை எப்படி நீக்குவது? +” எனத் தாங்கள் கோரலாம். “ எவ்வளவு துணிச்சலிருந்தால் எமது மூளையால் விளைந்த +ருசியை, படைப்பை, அதை சிதைக்கும் வண்ணம் மாற்ற முயற்சிப்பாய்? எமது சமையற் +குறிப்பை மாற்றி சரி செய்ய உனக்கு அருகதை இல்லை.” எனத் தலைமைப் பர்சாரகர் +தெரிவிப்பார்.</p> +<p> + “எனது மருத்துவரோ நான் உப்பு சேர்த்துக் கொள்ளக் கூடாது என்கிறார். நான் என்ன +செய்வது? நீங்களா அந்த உப்பை எனக்காக எடுத்துத் தருவீர்கள்?”</p> +<p> + “அதைச் செய்ய சித்தமாயுள்ளேன். அதற்கான விலை வெறும் 50,000 டாலர் மாத்திரமே.” +மாற்றங்களின் மீது உடைமையாளருக்கு எதேச்சாதிகாரம் இருப்பதால் கட்டணம் மிகப் +பெரியதாகிறது. “ ஆனால் தற்போது எனக்கு நேரமில்லை. கப்பற் துறைக்கான புதிய +பிஸ்கட்டின் சமையற் குறிப்பினை வடிவமைப்பதற்கான குழுவில் மும்மரமாக +உள்ளேன். தங்களின் பால் திரும்பி வர இரண்டு வருடம் ஆகலாம்!”</p> + +<h4 id="software-development">மென்பொருள் உருவாக்கத்திற்குத் தடை </h4> +<p> + மூன்றாவது நிலையிலான பொருட் தீமையானது மென்பொருள் உருவாக்கத்தினை +பாதிக்கின்றது. பரிணாம வளர்ச்சிக் கொண்ட முறையாக மென்பொருள் உருவாக்கம் இருந்து +வந்தது. நிரலாளர் ஒருவர் கிடைக்கக் கூடிய நிரலொன்றை எடுத்து புதிய வசதிகளுக்காக +அதன் பகுதிகள் சிலவற்றை மாற்றி எழுதுவார். மற்றொருவர் பிரிதொரு வசதிக்காக அதன் +வேறு பகுதிகளை மாற்றி எழுதுவார். சில உதாரணங்களில் இவை இருபது ஆண்டுகள் வரை +கூடத் தொடரும். இதற்கிடையில் இதன் பகுதிகள் “பிரித்தெடுக்கப்பட்டு” மற்ற +நிரல்களின் துவக்கத்திற்குப் பயன்படுத்தப்படும்.</p> +<p> + உடைமையாளர்களின் இருப்பு இத்தகைய பரிணாமத்தினைத் தடைச் செய்கிறது. நிரலொன்றினை +உருவாக்கும் போது மீண்டும் துவக்கத்திலிருந்து தொடங்கு வதை +அவசியமாக்குகிறது. கிடைக்கக் கூடிய நிரல்களைக் கற்று பயனுள்ள நுட்பங்களையோ +பெரிய நிரல்கள் வடிவமைக்கப்படும் விதங்களையோ அறிந்திடா வண்ணம் புதிய +பயிற்சியாளர்களைத் தடுக்கிறது.</p> +<p> + கல்விக்கும் உடைமையாளர்கள் தடை ஏற்படுத்துகிறார்கள். பெரிய நிரலொன்றின் மூல +நிரல்களைக் கண்டிராத புத்திசாலி மாணவர்களை நான் சந்தித்ததுண்டு. அவர்கள் சிறிய +நிரல்களை எழுதுவதில் திறமையுள்ளவர்களாக இருக்கலாம். ஆனால் பெரிய நிரல்களை +இயற்றத் தேவையான பலவிதமான ஆற்றல்களை, பிறர் எவ்வாறு செய்திருக்கிறார்கள் எனக் +காணாது கற்கத் துவங்க இயலாது.</p> +<p> + அறிவார்ந்த எந்தவொரு துறையிலும் ஒருவர் பிறரது தோள்களில் ஏறியவாறே உயர்ந்த +நிலைகளை அடைய இயலும். ஆனால் அது மென்துறையில் அனுமதிக்கப் படுவதில்லை. — தங்கள் +நிறுவனத்தை சார்ந்த பிற மக்களின் தோள்களில் மாத்திரமே தங்களால் ஏற முடியும்.</p> +<p> + இத்துடன் தொடர்புடைய உளவியல் தீமையானது அறிவியல் ரீதியான கூட்டுறவுக்கான +உள்ளுணர்வினைப் பாதிக்கின்றது. தங்களுடைய நாடுகள் போரிட்டுக் கொண்டிருந்தாலும் +கூட இவ்வுணர்வானது மிக உறுதியாக இருந்தமையால் விஞ்ஞானிகள் ஒத்துழைத்து +வந்தனர். இவ்வுள்ளுணர்வினால் ஜப்பானிய கடலாளர்கள் பசிபிக்கின் தீவொன்றில் +இருந்த தங்கள் ஆய்வகமொன்றினை கிடப்பில் போட்டு ஆக்ரமிக்கும் யு.எஸ் +கப்பல்களுக்காக தங்களது பணிகளைக் கவனமாகக் காத்து, அவற்றை அவர்களை நல்லபடியாக +கவனித்துக் கொள்ளும் படி குறிப்பு கொடுத்து வரவும் முடிந்தது.</p> +<p> + சர்வதேச பகையால் வளர்ந்தவற்றை இலாபத்துக்கான பகை +மூழ்கடித்துவிட்டது. தற்பொழுதெல்லாம் பலத் துறைகளில் விஞ்ஞானிகள் தங்களின் +ஆய்வறிக்கைகளில் பிறரும் சோதனைகளை மேற்கொள்ளத் தக்கச் செய்யுமளவிற்குப் போதுமான +விவரங்களை பதிப்பிப்பது இல்லை. இவர்கள் எவ்வளவு செய்துள்ளனர் என வாசிப்பவர் +ஆச்சரியப்படப் போதுமானவிவரங்களை மட்டுமே அவர்கள் பதிப்பிக்கிறார்கள். அறிக்கை +செய்யப்படும் நிரல்களின் மூலம் வழக்கமாக இரகசியமாக இருக்கும் கணினித் துறையில் +இது உறுதியான உண்மை.</p> + +<h4 id="does-not-matter-how">பகிர்வது எவ்வாறு தடுக்கப் படுகிறது என்பது பொருட்டல்ல</h4> +<p> + நிரல்களை படியெடுக்க, மாற்ற, மீளுருவாக்க மக்களைத் தடுப்பதால் ஏற்படும் +விளைவுகளை நான் அலசி வந்தேன். இத்தடை எவ்வாறு விதிக்கப் படுகிறது என்பதை நான் +குறிப்பிடவில்லை. ஏனெனில் அது முடிவை பாதிப்பதில்லை. நகல் பாதுகாப்பு, +பதிப்புரிமை, உரிமங்கள், உருதிரிப்பு அல்லது வாசிக்க மட்டும் கூடிய நினைவுத் +தகடுகள், அல்லது வன்பொருட் தொடர் எண்கள் என எதனைக் கொண்டு செய்தாலும், +பயன்பாட்டைத் தடுப்பதில் இவை வெற்றி பெறுமாயின் அது நிச்சயம் கேடு செய்கிறது.</p> +<p> + பயனர்கள் இம்முறைகளுள் ஒன்றைக் காட்டிலும் மற்றொன்று அதிகம் ஆட்சேபிக்கத் +தக்கது எனக் கருதுவதுண்டு. தங்கள் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ளும் முறைகளே +அதிகம் வெறுக்கத்தக்கதென நான் பரிந்துரைக்கின்றேன்.</p> + +<h4 id="should-be-free">மென்பொருள் கட்டற்று இருக்க வேண்டும்</h4> +<p> + நிரலுக்கு உடைமையாளர் இருப்பது அதாவது நிரலொன்றை நகலெடுப்பதையோ மாற்றுவதையோ +தடுப்பது எவ்வாறு கேடு விளைவிப்பதாக இருக்கும் என்பதை நான் எடுத்துக் +காட்டியுள்ளேன். அதன் தீய விளைவுகள் பரவிக் கிடப்பதோடு முக்கியமானதும் +கூட. சமூகமானது நிரல்களுக்கு உடைமையாளார்களைக் கொண்டிருக்கக் கூடாது என இது +வழிமொழிகிறது.</p> +<p> + வேறு விதமாக இதனைப் புரிந்துக் கொள்ள வேண்டுமானால், சமூகத்தின் தேவை கட்டற்ற +மென்பொருள். அதற்கான மட்டமான மாற்றே தனியுரிம மென்பொருள். நமக்குத் தேவையானதை +பெறுவதற்கு இம்மாற்றை ஊக்குவிப்பது பகுத்தறிவுள்ள செயலாகாது.</p> +<p> + “ஒரு விடயம் நல்லது என்பதற்காக அதற்காக வேலை செய்யுங்கள்; மாறாக அதில் வெற்றிப் +பெறுதற்கான வாய்ப்பிருக்கும் என்பதனால் அன்று.” என வேக்லேவ் ஹேவல் நமக்கு +அறிவுறுத்தியிருக்கின்றார். தன்னுடைய குறுகிய கூறுகளில் வர்த்தம் பேணும் +தனியுரிம மென்பொருள் வெற்றிக்கானதொரு வாய்ப்பாக இருக்கலாம், ஆனால் சமூகத்திற்கு +நல்லதாக ஆகாது.</p> + +<h3 id="why-develop">மக்கள் மென்பொருளை ஏன் உருவாக்குவார்கள்</h3> +<p> + மக்கள் மென்பொருளை உருவாக்கிட ஊக்கம் தரும் வழிமுறையாக பதிப்புரிமையை +அகற்றிவிடுவோமாயின், துவக்கத்தில் குறைவான மென்பொருளே உருவாக்கப்படும். ஆனால் +அந்த மென்பொருள் அதிகப் பயனுள்ளதாக இருக்கும். பயனருக்கு அளிக்கப்பட்ட +ஒட்டுமொத்த திருப்தி குறைவாக இருக்குமா என்பதில் தெளிவில்லை. அப்படியே +இருந்தாலோ அல்லது நாம் அதனை எவ்வழியிலாவது மேம்படுத்த விரும்பினாலோ, சோதனைச் +சாவடிகள் இல்லாது நிதித் திரட்ட வழி இருப்பது போல், உருவாக்கத்தினை ஊக்குவிக்க +வேறு பல வழிகள் உள்ளன. அதனை சாத்தியமாக்கும் வழிகளைப் பற்றி சொல்வதற்கு முன், +செயற்கையான ஊக்கத்தின் உண்மையானத் தேவை எவ்வளவு என்பதனை கேள்விக்குள்ளாக்க +விரும்புகின்றேன்.</p> + +<h4 id="fun">நிரலாக்கம் ஒரு சுகம்</h4> +<p> + பணத்திற்காகவே சிலர் நுழையக்கூடிய சில வகையான தொழில்கள் உண்டு. உதாரணத்திற்கு +சாலை நிர்மாணம். கலை மற்றும் ஏனையக் கல்வித் துறைகள் இருக்கின்றன. அவற்றைக் +கொண்டு செல்வம் செழிப்பதற்கான வாய்ப்புகள் குறைவு. தங்களுக்கு இருக்கும் அதீத +ஆர்வத்தினாலோ அல்லது சமூகம் பற்றிய ஆழப்பதிந்த மதிப்பீட்டினாலோ மக்கள் +இத்துறைகளில் நுழைவார்கள். கணித தர்க்கம், கருநாடக சங்கீதம், தொல்லியல் துறை, +gபணிபுரியும் மக்களை அரசியல் ரீதியாக ஒருங்கிணைப்பது இதற்கான +உதாரணங்களாகும். கிடைக்கக் கூடிய நிதியொதுக்கப்பட்ட சில பதவிகளுக்காக, கசப்பான +முறையில் என்பதை விட வருத்தத்திற்குரியவர்களாக மக்கள் +போட்டியிடுகிறார்கள். இப்பதவிகள் எதுவுமே மிகச்சிறந்த நிதியொதுக்கீட்டினை +பெறுவது கிடையாது. இத்துறைகளில் பணி புரிய வாய்ப்புக் கிடைத்திட வேண்டி +அவர்களால் இயலுகிற பட்சத்தில் நிதி அளிக்கக் கூட அவர்கள் முன்வருவதுண்டு.</p> +<p> + செல்வம் கொழிக்கும் சாத்தியங்களை கொடுக்கத் துவங்குகிற பட்சத்தில் ஓரிரவுப் +பொழுதில் இத்தகையத் துறை தன்னைத் தானே மாற்றிக் கொள்ள வல்லது. ஒரு தொழிலாளி +செல்வந்தராகும் பொழுது, பிறரும் அதே வாய்ப்பினைக் கோருவார்கள். திடீரென்று +எல்லாரும் எதனைச் சுகமாகக் கருதிச் செய்து வந்தனரோ அதற்காக மிகப் பெரிய அளவிலான +தொகையினைக் கேட்கத் துவங்கலாம். இன்னும் இரண்டு வருடங்கள் கழிகிற போது, +அத்துறையுடன் தொடர்புடைய அனைவரும் பெரிய நிதி ஆதாயம் பெறாது அத்துறையில் பணி +நடைபெறும் எனும் எண்ணத்தையே சிதைத்து விடுவார்கள். இத்தகைய பலன்கள் கிடைப்பதை +உறுதி செய்து கொள்ளும் பொருட்டு இவர்கள் சமூகத் திட்டம் தீட்டுவோருக்கு, +சிறப்பு சலுகைகள், அதிகாரங்கள் மற்றும் எதேச்சாதிகாரங்கள் அங்ஙனம் செய்வதற்கு +அவசியம் என பரிந்துரைப்பர்.</p> +<p> + கடந்த பத்து ஆண்டுகளில் இந்த மாற்றம் கணினி நிரலாக்கத் துறையில் +ஏற்பட்டது. பதினைந்து ஆண்டுகளுக்கு முன் “கணினிக்கு நேர்ந்து விடுவது” +குறித்தக் கட்டுரைகள் இருந்தன. பயனர்கள் “இணையத்தில் இருந்ததொடு” வாரத்திற்கு +நூறு டாலர்கள் போன்ற பழக்கங்கள் இருந்தன. மண வாழ்க்கையைக் கூட முறித்துக் +கொள்ளும் அளவிற்கு மக்கள் நிரலெழுதுவதை அதிகம் காதலித்ததாக பொதுவாக புரிந்து +கொள்ளப்பட்டிருந்தது. இன்று அதிக சம்பள விகிதம் இல்லையென்றால் யாருமே நிரலெழுத +மாட்டார்கள் என்பதே பொதுவாகப் புரிந்துக் கொள்ளப் பட்டிருக்கின்றது. பதினைந்து +ஆண்டுகளுக்கு முன்னதாகத் தங்களுக்கு தெரிந்திருந்ததை மக்கள் மறந்து +விட்டார்கள்.</p> +<p> + கொடுக்கப்பட்ட ஒரு கால கட்டத்தில் அதிக சம்பளத்திற்கு தான் குறிப்பிட்டத் +துறையொன்றில் பெரும்பாலான மக்கள் பணிபுரிவார்கள் என்பது உண்மையாக இருந்தாலும் +அதுவே உண்மையாகத் தொடர வேண்டியதில்லை. சமுதாயம் உத்வேகம் அளித்தால் மாற்றம் +மீண்டும் மீள வரும். அதிகமான வளத்துக்கான சாத்தியக் கூறுகளை நாம் எடுத்து +விட்டால், சில காலம் கழித்து, தங்களின் மனோபாவத்தினை மக்களும் மீண்டும் +மாற்றிக் கொண்ட பின்னர், பணிநிறைவில் கிடைக்கும் சுகத்திற்காக அதே துறையில் +பணிபுரிய அவர்களும் மீண்டும் ஆர்வம் கொள்வர்.</p> +<p> + “நிரலாளர்களுக்கு நாம் எவ்வாறு சம்பளம் கொடுப்பது?” எனும் கேள்வி, அவர்களுக்கு +ஏதோ பெரும் போகத்தினை நாம் அளிக்கப் போவதில்லை என்பதனை உணர்வதனால் +எளிதாகிவிடும். இயல்பான வாழ்வு வாழ என்பது எழுப்புதற்கு எளிதாகும்.</p> + +<h4 id="funding">கட்டற்ற மென்பொருளுக்கு நிதியளிப்பது</h4> +<p> + மென்பொருள் நிலையங்கள் தான் நிரலாளர்களுக்கு நிதி அளிக்க வேண்டுமென்ற +கட்டாயமில்லை. இப்பணியை செய்ய வல்ல இன்ன பிற அமைப்புகள் ஏற்கனவே இருக்கின்றன.</p> +<p> + தங்களால் கட்டுபடுத்த இயலாத ஒன்றாக இருக்கும்போதிலும் வன்பொருள் +உற்பத்தியாளர்கள் மென்பொருள் உற்பத்தியினை ஆதரிப்பதை இன்றியமையாததாக +கருதுகிறார்கள். 1970 களில் அவர்களின் பெரும்பாலான மென்பொருட்கள் கட்டற்று +இருந்தன. ஏனெனில் அவர்கள் அதைக் கட்டுப்படுத்த வேண்டுமென நினைக்கவில்லை. இன்று, +கூட்டமைப்புகளில் சேர்வதில் அவர்கள் காட்டும் ஆர்வம், அவர்கள் மென்பொருளின் +மீது உரிமைக் கோருவதில் உண்மையில் முக்கியத்துவம் இல்லை என்பதை +உணர்ந்திருப்பதைக் காட்டுகின்றது.</p> +<p> + பல்கலைக் கழகங்கள் பல நிரலெழுதும் போட்டிகளை நடத்துகின்றன. இன்று அவர்கள் கூட +தங்களின் முடிவுகளை விற்கிறார்கள். ஆனால் 1970 களில் இவர்கள் இப்படிச் செய்தது +கிடையாது. விற்க அனுமதிக்காது போனாலும் பல்கலைக் கழகங்கள் கட்டற்ற மென்பொருளினை +உருவாக்குவார்கள் என்பதில் ஏதேனும் ஐயம் உள்ளதா? தற்பொழுது தனியுரிம +மென்பொருட்கள் உருவாக்கப் பயன்படும் அரசு ஒப்பந்தங்களையும் நிதி +ஒதுக்கீடுகளையும் கொண்டே இத்திட்டங்கள் ஆதரிக்கப் படலாம்.</p> +<p> + ஒரு பொருளை உருவாக்கும் பொருட்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நிதியுதவிப் +பெறுவதும் , அதனை பூர்த்தியாகும் அளவிற்கு உருவாக்குவதும் , நிறைவடைந்ததாக +அறிவிப்பதும், பின்னர் நிறுவனங்களை துவங்கி உண்மையாகவே அதனை நிறைவு செய்து +பயனுடையதாக ஆக்குவதும் இன்று மிகச் சாதாரணம். நிறைவடையாத வெளியீட்டினை இலவசமாக +அவர்கள் அறிவிப்பதுண்டு. மாறாக அவர்கள் முற்றிலும் மோசமானவர்களாக இருந்தால் +பல்கலைக் கழகத்திலிருந்து தனித்துவமான உரிமத்தினை பெறுவார்கள். இது ஏதோ +இரகசியமன்று. சம்பந்தப் பட்ட அனைவரும் அப்பட்டமாக ஏற்றுக் +கொள்கின்றனர். இச்செயல்களைச் செய்யத் தூண்டப்படாதிருந்தால், அவர்கள் தொடர்ந்து +தங்களின் ஆய்வினை மேற்கொண்டிருப்பார்கள்.</p> +<p> + கட்டற்ற மென்பொருளெழுதும் நிரலாளர்கள் அம்மென்பொருள் சார் சேவைகளை வழங்குவதின் +மூலம் தங்களின் வாழ்க்கையினை மேற்கொள்கிறார்கள். நான் <a +href="/software/gcc/">குனு சி ஒடுக்கி</a>யினை புதியதொரு வன்பொருளொன்றுக்கு +உகந்ததாக்கவும் <a href="/software/emacs/">குனு ஈமாக்ஸ்</a>ஸின் +பயனர்-இடைமுகப்புகள் உருவாக்கவும் பணியமர்த்தப் பட்டேன். (இம்மேம்பாடுகள் +பூத்தியானதும் பொதுமக்களுக்கு அளித்துவிடுவேன்.) மேலும் பாடம் நடத்துவதன் +பொருட்டும் எமக்கு ஊதியமளிக்கப்பட்டது.</p> +<p> + இம்முறையில் பணி செய்வது நான் மாத்திரமல்ல. வேறு விதமான பணியினை மேற்கொண்டுள்ள, +வெற்றிகரமாக வளர்ந்து வரும் ஒரு நிறுவனமும் உள்ளது. ஏனையப் பிற நிறுவனங்களும் +குனுவின் கட்டற்ற மென்பொருளுக்கு வர்த்தக ரீதியான ஆதரவு +வழங்குகிறார்கள். சுதந்தரமான மென்பொருள் ஆதரவு தொழில் துறையின் துவக்கம் +இது. கட்டற்ற மென்பொருள் பிரபலமாகும் போது இது மிகப் பெரியதாகும். தனியுரிம +மென்பொருளால் வசதியுள்ள மிகச் சிலருக்கே தர வல்ல வாய்ப்பினை இது பயனர்களுக்குத் +தருகின்றது.</p> +<p> + <a href="/fsf/fsf.html">கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளை</a> போன்ற புதிய +நிறுவனங்களும் நிதியளிக்கலாம். அறக்கட்டளைக்கான நிதி பெரும்பாலும் பயனர்கள் +மடல் மூல வாங்கும் டேப்களுக்காக வருகின்றன. டேப்புகளில் உள்ள மென்பொருட்கள் +கட்டற்றவை. அதாவது அவற்றை நகலெடுக்கவோ மாற்றவோ எந்தவொரு பயனருக்கும் சுதந்தரம் +உண்டு.(கட்டற்ற மென்பொருளென்பது விலையினை அடிப்படையாகக் கொள்ளாது சுதந்தரத்தை +அடிப்படையாகக் கொண்டது என்பதை நினைவில் கொள்க.) ஏற்கனவே நகலொன்றை +வைத்திருந்தாலும் நாங்கள் நிதி அளிக்க உகந்தவர்களாகக் கருதி மீண்டும் +டேப்புகளுக்கு விண்ணப்பம் செய்வதுண்டு. கணினி உற்பத்தியாளர்களிடமிருந்தும் +இவ்வறக்கட்டளை தானம் பெறுகின்றது.</p> +<p> + கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளை ஒரு தொண்டு நிறுவனம், அதன் வருவாய் இயன்றவரையில் +நிரலாளர்களைப் பணியமர்த்த செலவிடப் படுகின்றது. அது ஒரு வர்த்தக நிறுவனமாக +நிறுவப்பட்டிருந்தால், அதே கட்டற்ற மென்பொருளை பொது மக்களுக்கு விற்பதின் +மூலம், அதன் நிறுவனருக்கு இந்நேரம் மிகச் சொகுசான வாழ்வினை அளித்திருக்கும்.</p> +<p> + இவ் அறக்கட்டளைத் தொண்டு நிறுவனமாக இருக்கின்றக் காரணத்தினால், வேறு இடங்களில் +கிடைக்கக் கூடிய ஊதியத்தினைக் காட்டிலும் பாதிக்கு நிரலாளர்கள் +பணிபுரிகிறார்கள். ஏனெனில் நாங்கள் அதிகாரத் தன்மையற்று இருப்பதாலும், +அவர்களின் பணியின் பலன் பயன்பாட்டிலிருந்து தடுக்கப்படாது என்கிற நிம்மதியாலும் +இங்ஙனம் செய்ய அவர்கள் முன்வருகிறார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக அவர்கள் +இன்பம் என இதனைக் கருதுவதால் செய்கிறார்கள். இதைத் தவிர தன்னார்வலர்கள் பலரும் +எங்களுக்கு நிரலெழுதித் தந்திருக்கின்றார்கள். (தொழிநுட்ப எழுத்தாளர்கள் கூட +முன்வரத் துவங்கியுள்ளார்கள்)</p> +<p> + நிரலெழுதுவது கலை, இசையைப் போன்றே அதிசயிக்கத் தக்க துறையென்பது இதன் மூலம் +உறுதியாகின்றது. யாரும் நிரலெழுத விரும்ப மாட்டார்கள் எனக் கவலைக் கொள்ளத் +தேவையில்லை.</p> + +<h4 id="owe">உருவாக்குவோருக்கு பயனர்களின் பிரதியுபகாரம் என்ன?</h4> +<p> + மென்பொருளினைப் பயன்படுத்துவோர் அதனை ஆதரிக்க தார்மீக உணர்வுக் கொள்ள +நல்லதொருக் காரணம் இருக்கின்றது. பயனர்களின் செயல்களுக்காக கட்டற்ற +மென்பொருளினை உருவாக்குவோர் பங்களிக்கின்றனர். தொலை நோக்குப் பார்வையிலும் +நியாயமாகவும் சேவைகளைத் தொடர பயனர்கள் உருவாகுவோருக்கு நிதியளிப்பது உகந்தது.</p> +<p> + ஆனால், தனியுரிம மென்பொருள் உருவாக்குவோருக்கு இது பொருந்தாது. தடை +ஏற்படுத்துவதென்பது சன்மானத்திற்கு அல்ல மாறாக தண்டனைக்கு ஏற்றது.</p> +<p> + நாம் ஒரு தர்ம சங்கடமான நிலையில் நிற்கிறோம். பயனுள்ள மென்பொருளை உருவாக்குவோர் +அதன் பயனர்களின் அதரவுக்கு பாத்திரமாகின்றார். இந்த தார்மீக திலுதவியை ஒரு +கட்டாயத் தேவையாக ஆக்குவதென்பது பதிலுதவியின் அடிப்படையினையே ஆட்டம் காணச் +செய்கின்றது. உருவாக்கும் ஒருவர் சன்மானத்திற்கு உகந்தவராகின்றார் அல்லது +அதனைக் கட்டாயமாகக் கேட்கிறார், ஆனால் இரண்டும் ஒரு சேர அன்று.</p> +<p> + இத்தகைய தர்ம சங்கடமான நிலையைச் சந்திக்கும் அறத்தின் வழி நிற்கும் +உருவாக்குநரொருவர், சன்மானத்திற்கு உகந்தவராக செயல் புரிய வேண்டும். அதே +நேரத்தில் பயனர்களையும் தானாக முன்வந்து நிதியளிக்க ஊக்கப் +படுத்தவேண்டும். பொது வானொலி மற்றும் பொது தொலைக் காட்சிகளை ஆதரிக்கக் கற்றது +போலவே, கட்டாயமேதும் இல்லாமலேயே பயனர்களும் உருவாக்குவோரை ஆதரிக்கக் +கற்பார்கள்.</p> + +<h3 id="productivity">மென்பொருள் உற்பத்தித் திறனென்றால் என்ன? </h3> +<p> + மென்பொருள் கட்டற்று இருக்குமாயின், நிரலாளர்கள் இருப்பார்கள், ஆனால் சிறிய +அளவிலேயே இருப்பார்கள். இது சமூகத்திற்கது தீமையானதா?</p> +<p> + அப்படியொன்றும் அவசியம் இல்லை. இன்று முன்னேறிய நாடுகள் 1900 களைக் காட்டிலும் +குறைந்த விவசாயிகளைக் கொண்டுள்ளனர். ஆனால் நாம் இவற்றை சமூகத்திற்கு தீமையாகக் +கருதுவதில்லை. ஏனெனில் இந்தச் சிறிய அளவிலானோர், பலர் செய்ததைக் காட்டிலும், +நுகர்வோருக்குத் தேவைக்கும் அதிகமான உணவினை உற்பத்திச் செய்கின்றனர். மென் +உற்பத்தித் திறன் அனைத்து நிலைகளிலும் அதிகரிக்கும் போது, தேவையினைப் பூர்த்தி +செய்ய கட்டற்ற மென்பொருளுக்கு குறைந்த அளவிலான நிரலாளர்களே தேவை:</p> + +<ul> +<li> உருவாக்கப்படும் அனைத்து நிரல்களின் பரந்து விரிந்த பயன்பாடு.</li> +<li> மீண்டும் ஆரம்பத்திலிருந்து துவங்காது, கிடைக்கக் கூடிய நிரல்களை +தேவைக்கேற்றாற் போல் மாற்றிக் கொள்ளக் கூடிய திறன்.</li> +<li> நிரலாளர்களுக்கான சிறந்த கல்விமுறை.</li> +<li> போலி உருவாக்க முயற்சிகள் களையப் படுதல்.</li> +</ul> + +<p> + குறைந்த நிரலாளர்களுக்கே வேலைகிடைக்கும் எனக் கூறி, கூட்டுறவினை எதிர்ப்போர் , +உண்மையில் மேம்படுத்தப்பட்ட உற்பத்தித் திறனையே எதிர்க்கின்றனர். ஆயினும் +இம்மக்கள் மென்துறையின் உற்பத்தித் திறன் மேம்படுத்தப் படவேண்டும் என்ற +பரவலானக் கருத்தினையும் ஆமோத்திக்கின்றனர். ஆனால் எப்படி?</p> +<p> + “மென்பொருள் உற்பத்தித் திறன்” என்பது இரண்டு மாறுபட்ட விடயங்களாக +இருக்கலாம். அனைத்து மென்பொருள் உற்பத்தியின் ஒட்டுமொத்த உற்பத்தித் திறனின் +மேம்பாடு. அல்லது தனித் திட்டங்களின் உற்பத்தித் திறனின் மேம்பாடு. ஒட்டுமொத்த +உற்பத்தித் திறனையே சமூகம் மேம்படுத்த விரும்பும். இதனைச் செய்வதற்கான நேரடி +வழி இவற்றை மட்டுப் படுத்தி , கூட்டுறவிற்கு பங்கம் விளைவிற்கும் செயற்கைத் +தடைகளை அகற்றுவதே. ஆனால்“மென் உற்பத்தித் திறனை” ஆராயும் ஆய்வாளர்கள், குறுகிய +அளவிலான இரண்டாவது முறையிலேயே கவனம் செலுத்துகிறார்கள். ஆனால் மேம்பாடு என்பதோ +கடினமான தொழில்நுட்பத் தேவைகளை உள்ளடக்கி நிற்கிறது.</p> + +<h3 id="competition">போட்டி தவிர்க்க இயலாததா?</h3> +<p> + சமூகத்தில் தங்களின் எதிரிகளை முந்துவதன் பொருட்டு, மக்கள் போட்டி போட +முற்படுவது தவிர்க்க இயலாததா? ஒருவிதத்தில் ஆமாம் தான். ஆனால் போட்டி தீமையானது +அல்ல. தீமையானதோ போர்.</p> +<p> + போட்டியிடப் பல வழிகள் உள்ளன. அடுத்தவர் செய்திருப்பதைக் காட்டிலும் அதிகம் +சாதிக்க முயற்சிப்பது முதலியவற்றைப் போட்டி உள்ளடக்கி +இருக்கலாம். உதாரணத்திற்கு முன்பெல்லாம், நிரலெழுதும் பராக்கிரமசாலிகளுக்கு +இடையே போட்டிகள் இருக்கும். கணினியினை அதிசயிக்கத் தக்க பணியினை செய்யவைக்க +யாரால் இயலும் அல்லது கொடுக்கப் பணியினை சுருக்கமாகவோ, வேகமாகவோ செய்யக் கூடிய +நிரலை யாரால் இயற்ற முடியும் போன்ற போட்டிகள் இருப்பதுண்டு. நல்லதொரு ஒழுக்கச் +சீலம் கடைபிடிக்கப் படும் வரை இத்தகைய போட்டிகள் அனைவரைக்கும் நன்மைப் +பயக்கும்.</p> +<p> + அதிக ஆற்றலை வெளிப்படுத்த, மக்களை ஊக்குவிக்கும் பொருட்டு இத்தகைய ஆக்கப் +பூர்வமான போட்டிகள் போதுமானவை. உலகின் அனைத்து நாடுகளையும் சுற்றிவிட வேண்டும் +என பலர் போட்டிப் போடுகின்றனர். சிலர் இதற்காக கொட்டிக் கொடுக்கிறார்கள். ஆனால் +இதற்கென கப்பற் தலைவனுக்கு பணம் கொடுத்து அவர்களுடன் போட்டியிடுவோரை யாருமற்ற +தீவில் இறக்கி விடச் சொல்லுவதில்லை. சிறந்தவர் வெற்றிப் பெறட்டும் என்பதில் +நிறைவு கொள்கிறார்கள்.</p> +<p> + தங்களை முன்னேற்றிக் கொள்ளாமல் அடுத்தவரை வீழ்த்த முற்படும் பொழுது போட்டி +போராகின்றது. சிறந்தவர்கள் வெற்றிப் பெறட்டும் என்பது போய், சிறந்தவனோ இல்லையோ +தான் வெற்றிப் பெற வேண்டும் என்பதற்கு வழி கோளுகின்றது. தனியுரிம மென்போருள் +தீமையானது. அது ஒருவகைப் போட்டியென்பதால் அல்ல. மாறாக நம் சமூகத்தின் +குடிமக்களிடையேயான ஒருவகைப் போர் என்பதால்.</p> +<p> + வர்த்தகப் போட்டி என்பது போராக அமைய வேண்டும் என்பதில்லை. உதாரணத்திற்கு இரண்டு +மளிகைக் கடைகள் போட்டியிடும் போது அவர்களின் முழு ஈடுபாடும் தங்களின் செயல்களை +எவ்வாறு மேம்படுத்த வேண்டுமென்பதே. எப்படி அடுத்தவரை நசுக்க வேண்டும் என்பது +அல்ல. வர்த்தக அறத்திற்கு சிறப்பானதொரு ஏற்பினை இது பிரதிபலிப்பதாக +ஆகாது. வலுப் பிரயோகமற்ற போர் போன்றதொரு சூழலுக்கு இவ்வகையான வியாபாரத்தில் +சிறிய வாய்ப்பு இருக்கின்றது. அனைத்து விதமான வர்த்தகமும் இத்தகைய குணநலன்களைக் +கொண்டிருப்பதில்லை. அனைவரது முன்னேற்றத்துக்கும் பயன்படக் கூடிய தகவலை தடுத்து +வைத்துக் கொள்வதென்பது ஒரு வகைப் போர்தான்.</p> +<p> + போட்டிக்காக போர் செய்யத் தூண்டப்படுவதை கட்டுபடுத்தும் ஆற்றலை, வர்த்தகக் +கொள்கைகளால் மக்களிடையே உருவாக்க இயலாது. சில வகையான போர்கள், அவநம்பிக்கைச் +சட்டங்கள், விளம்பரத்தில் உண்மைக்கானச் சட்டங்கள் முதலியவற்றால் தடைச் செய்யப் +பட்டுள்ளன. பொதுப்படையாக கொள்கையளவில் பொதுவாகவே போரினைப் புறந்தள்ளாது, +அதிகாரிகள் வேறுவிதமான போர்களை உருவாக்குகிறார்கள். இவைக் குறிப்பிட்டுத் தடைச் +செய்யப் பட்டவையல்ல. சமூக வளங்கள் வகுப்புவாதப் பொருளாதார உள்நாட்டுச் +சண்டைகளுக்காக வீணடிக்கப் படுகின்றன.</p> + +<h3 id="communism">“தாங்கள் ஏன் ரஷ்யாவுக்குப் போகக் கூடாது?”</h3> +<p> + அமேரிக்காவில் பிறர் குறுக்கீட்டினை அறவே அனுமதிக்காத, அதீத சுயநலத்தைத் தவிர +வேறெதுவுமற்ற வழக்குரைஞர்களை விடுத்து ஏனைய எவரும் இக்குற்றச்சாட்டுகளை +அடிக்கடிக் கேட்டிருகின்றனர். தொழில் வளர்ச்சியடைந்த பிற தேசங்களில் இருப்பது +போல் தேசிய மயமாக்கப் பட்ட சுகாதார வசதியினை ஆதரிப்போருக்கு எதிராக +இக்குற்றச்சாட்டுக்கள் சுமத்தப் படுவதுண்டு. முன்னேறிய நாடுகளில் இருப்பதுபோல் +கலைக்கு பொதுத்தன்மைக் கோருவோருக்கு எதிராகவும் இவை சுமத்தப் படுவதுண்டு. பொது +நலத்திற்கு உகந்த எந்தவொரு சிந்தனையும் அமேரிக்காவில் கம்யூனிசமாக அடையாளங் +காணப்படுகின்றன. ஆனால் இச்சிந்தனைகள் எவ்வளவு ஒத்துப் போகின்றன?</p> +<p> + சோவியத் யூனியனில் கடைப் பிடிக்கப்பட்ட கம்யூனிஸம் மையப் படுத்தப் பட்ட அதிகார +முறையாகும். அனைத்து செயல்களும் பொது நன்மையென்றப் பெயரில், ஆனால் உண்மையில் +கம்யூனிசக் கட்சியின் உறுப்பினர்களுக்காகக் கடுமையாக +முறைப்படுத்தப்படும். அங்கே நகலெடுக்கும் கருவி சட்டவிரோதமாக நகலெடுப்பதைத் +தடுக்கும் பொருட்டு கவனமாகக் காக்கப்படும்.</p> +<p> + மென்பொருளுக்கான அமேரிக்க பதிப்புரிமை முறையானது, நிரல் விநியோகத்தின் மீது +மையப் படுத்தப் பட்ட அதிகார முறையை ஏற்படுத்துகிறது. சட்டத்துக்குப் புறம்பாக +நகலெடுப்பதை தடுத்திட வேண்டி, தானாக நகலெடுக்க இயலாத முறைகளைக் கொண்டு +நகலெடுக்கும் இயந்திரங்களை தடுக்கின்றது.</p> +<p> + மாறாக, மக்கள் தங்களின் செய்கைகளைத் தாங்களே தீர்மானிக்கும் சுதந்தரமான +முறையினை ஏற்படுத்த பணியாற்றுகின்றேன். குறிப்பாக, தங்களின் சுற்றத்தாருக்கு +உதவிடும் சுதந்தரம் மற்றும் தாங்கள் அன்றாடம் பயன்படுத்தப் படும் கருவிகளைத் +தாங்களே மாற்றவும் மேம்படுத்தவும் கூடிய சுதந்தரம் போன்றவை. மையப் படுத்தப் +படாத பரஸ்பர ஒத்துழைப்பினைக் கொண்ட ஒரு முறை.</p> +<p> + ஆக, நாம் ரஷ்ய கம்யூனிசத்துக்கு ஒப்பாக இக்கண்ணோட்டதை அணுகினால், மென்பொருள் +உடைமையாளர்களென்போர் கம்யூனிஸ்டுகளாவர்.</p> + +<h3 id="premises">வரம்புகள் பற்றிய வினா</h3> +<p> + இவ்வுரையில் நான் மென்பொருளொன்றின் பயனரொருவர் அதனை உருவாக்கியவரைக் +காட்டிலும், அல்லது உருவாக்கியவரை பணி அமர்த்தியவரைக் காட்டிலும் எவ்வகையிலும் +குறைந்தவரல்ல என அனுமானம் கொள்கின்றேன். வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால் +எவ்வகையிலான செயல் மேற்கொள்ளத்தக்கது என நாம் தீர்மானிக்கின்ற பொழுது அவைகளின் +நலன்களும் தேவைகளும் சமமாக மதிக்கத் தக்கவை.</p> +<p> + இவ்வரம்பு அகிமனைத்திலும் ஏற்கப் படுவதில்லை. பலர் இயற்றியவரின் பணியமர்த்துநர் +மற்ற எவரைக் காட்டிலும் அடிப்படையில் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவர் எனக் +கொள்கின்றனர். பொதுமக்களை இது எவ்வளவு பாதிக்கக் கூடும் என்பதைக் கருத்தில் +கொள்ளாது இவர்கள், மென்பொருளுக்கு உடைமையாளர்கள் இருப்பது, அதனை இயற்றிவரின் +பணியமர்த்துனருக்கு அவர்க்குரிய சலுகையினை வழங்குவதாகும் எனச் சொல்கின்றனர்.</p> +<p> + இவ்வரம்புகளை நிரூபிப்பதிலோ மறுப்பதிலோ எந்த பயனும் இல்லை. பகிர்ந்து +கொள்ளப்பட்ட வரம்புகளுக்கே நிரூபணம் அவசியம். நான் சொல்ல விழைந்தனவற்றுள் +பெரும்பாலானாவை, எமது வரம்புகளைப் பகிர்ந்துக் கொள்வோர் அல்லது இவற்றின் +விளைவுகளில் சிறிதேனும் ஆர்வமுடையோருக்குத் தான். உடைமையாளர் தான் மற்ற +எல்லோரைக் காட்டிலும் முக்கியமானவர் என நம்புவோருக்கு இவ்வுரை +சம்பந்தமில்லாதது.</p> +<p> + ஆனால் அதிக அளவிலான அமேரிக்கர்கள் ஏன் மற்ற எல்லாரைக் காட்டிலும் சிலரை +உயர்த்தும் வரையறைகளை ஏற்கிறார்கள்? அமேரிக்க சட்ட மரபுகளுக்கு இவ்வரையறை +உட்பட்டது என நம்புவது காரணத்தின் ஒரு பகுதி. சிலர் இவ் வரையறையினைச் +சந்தேகிப்பதென்பது சமூகத்தின் அடிப்படையினையே எதிர்ப்பதாகக் கருதுகிறர்கள்.</p> +<p> + இவ்வரையறை நமது சட்ட மரபுகளின் பகுதியாகாது என்பதை இவர்கள் அறிவது முக்கியமான +ஒன்றாகும். அது ஒரு போதும் அப்படி இருந்தது இல்லை.</p> +<p> + பதிப்புரிமையின் நோக்கம் “அறிவியல் மற்றும் பயனுள்ள கலைகளில் முன்னேற்றத்தை +ஊக்குவிப்பது” என அரசியல் சாசனம் சொல்கிறது. இதனை‘பாஃக்ஸ் பிஃல்ம் மற்றும் +டாயல்’க்கிடையேயான வழக்கில் உச்ச நீதிமன்றம் “பதிப்புரிமை தனியதிகாரத்தினை +வழங்குவதென்பது இயற்றுபவரின் முதலாளிகளிடமிருந்து பொது மக்கள் பெற்றுக் +கொள்ளக்கூடிய பொதுவான நன்மைகளில் உள்ளது” என விளக்கியுள்ளது.</p> +<p> + அரசியல் சாசனத்தையோ உச்சநீதிமன்றத்தையோ ஏற்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. (ஒரு +காலத்தில் அவையிரண்டுமே அடிமைத் தனத்தை ஒரு பொருட்டாகக் கருதவில்லை.) ஆக +அவற்றின் நிலைகள் உடைமையாளர் உயர்ந்தவர் எனும் வரையறையை +மறுத்துரைப்பவையாகாது. ஆனால் மரபின் வழி அங்கீகாரம் பெறாத அடிப்படைவாத வலது +சாரி அனுமானமெனும் விழிப்புணர்வு இதன் கூற்றை வலுவிழக்கச் செய்யும் என நான் +நம்புகின்றேன்.</p> + +<h3 id="conclusion">நிறைவுரை</h3> +<p> + தங்களின் சுற்றத்தாருக்கு உதவுதை நமது சமூகம் ஊக்குவிக்கின்றது என எண்ண நாம் +விழைகின்றோம். ஆனால் கட்டுபடுத்தும் பொருட்டு ஒருவருக்கு ஒவ்வொரு முறையும் +பரிசளிப்பதாலோ அவர்கள் இங்ஙனம் பொருளீட்டியமைக்காக போற்றுவதாலோ, இதற்கான +எதிர்மறையான சமிக்ஞையினையே அனுப்புகின்றோம்.</p> +<p> + தனிப்பட்ட இலாபத்துக்காக சமூகத்தின் நலனைப் புறக்கணிப்பதற்கான பொதுவான +ஒத்திசைவே மென்பொருள் பாதுகாப்பின் ஒரு வடிவம். இப்புறக்கணிப்புக்கானச் +சுவட்டினை ரொனால்ட் ரீகன் முதல் டிக் செனி வரை, எக்ஸானிலிருந்து என்ரான் வரை, +திவாலாகும் வங்களிலிருந்து பள்ளிகள் வரை நாம் காணலாம். இருக்க இடமற்ற ஜனத் +தொகையினையும் சிறையிலுள்ள ஜனத் தொகையினையும் கொண்டு இதனை நாம் +அளவிடலாம். சமூகத்திற்குத் குந்தகமான உணர்வு தனக்குத் தானே தீனி இட்டுக் +கொள்கிறது. ஏனைய மக்கள் நமக்கு உதவ மாட்டார்கள் என நாம் பார்க்கிற பொழுது +நாமும் அடுத்தவருக்கு உதவுவதை பாதகமாகக் காண்போம். சமூகம் ஒரு கானகமாகச் +சிதைந்து போகின்றது.</p> +<p> + கானகத்தில் நாம் வாழ விரும்பவில்லையென்றால், நமது அணுகுமுறைகளை நாம் மாற்றிக் +கொள்ள வேண்டும். தேவையான பொழுது கூட்டுறவாடும் ஒருவரே நல்ல குடிமகன் என்ற +கருத்தை நாம் அனுப்பத் துவங்க வேண்டும். அடுத்தவரிடமிருந்து வெற்றிகரமாக +எடுத்துக் கொள்பவரை அன்று. கட்டற்ற மென்பொருள் இயக்கம் இதற்காக பங்களிக்கும் என +நான் நம்புகின்றேன். குறைந்த பட்சம் ஒரு துறையிலாவது. தன்னார்வ கூட்டுறவினால் +ஊக்குவிக்கப்பட்டு இயங்கும் அதிக ஆற்றலுடைய முறையினால் நாம் கானகத்தினை +மாற்றிக் காட்டுவோம்.</p> + +<h3 id="footnotes">அடிக்குறிப்புகள்</h3> + +<ol> +<li id="f1">“பிரீ சாப்ட்வேரிலுள்ள ” “பிரீ” சுதந்தரத்தினைக் குறிக்கின்றது. விலையினை அல்ல +பிரீ சாப்ட்வேருக்காக கொடுக்கப் படும் விலை சுழியமாகவோ , சிறியதாகவோ அல்லது +(அரிதாக) அதிகமானதாகவோ இருக்கலாம்.</li> + +<li id="f2">மாசு மற்றும் பயண நெரிசல் போன்ற பிரச்சனைகள் இம்முடிவினை மாற்றிவிடாது. பொதுவாக +வாகனமோட்டுவதை ஊக்குவிக்காது இருக்கும் பொருட்டு, அதனை விலையதிகமானது ஆக்க +விரும்புவோமாயின், அதனைச் செய்ய வசூல் சாவடிகள் உகந்தவை அல்ல. இதுவும் +நெரிசலுக்கும் மாசுக்கும் பங்களிக்கின்றது. காசோலின் மீதான வரி இதனினும் அதிக +நன்மை பயக்கும். அதேபோல் பாதுகாப்பை அதிகரிக்க அதிக வேகத்தினை மட்டுப் படுத்த +விரும்புவதும் சம்பந்தமில்லாதது. சாலைக்கு கட்டற்ற அனுமதியளிப்பது, கொடுக்கப் +பட்ட எந்தவொரு வேக அளவிற்கும், நிறுத்தங்களையும் தாமதங்களையும் தவிர்த்து +சராசரி வேகத்தினை மேம்படுத்தும்.</li> + +<li id="f3">ஒருவர் ஒரு குறிப்பிட்ட நிரலொன்றைத் தீமைத் தர வல்லதாகக் கருதி, அது கிடைக்கவே +கூடாது எனக் கருதலாம். உதாரணத்திற்கு லோடஸ் மார்க்கெட் ப்ளேஸ் டேடாபேஸ், பொது +மக்களின் அங்கீகாரம் கிடைக்காததால் வாபஸ் பெறப்பட்டது. நான் சொல்லும் +பெரும்பாலானவை இவ்வுதாரணத்திற்கு பொருந்தாது. உடைமையாளரைக் கொண்டிருத்தல் +வேண்டும் எனும் வாதத்திற்கு, உடைமையாளரைக் கொண்டிருப்பதென்பது நிரலை அதிகமாகக் +கிடைக்கச் செய்யாது என்பதற்கு இது சிறிய அளவிலான அர்த்தம் கொடுக்கிறது. ஒருவர் +விரும்புவது போல் மென்பொருளொன்றின் பயன்பாடு தீமைவிளைவிப்பதாகக் கருதப்படுவதால் +உடைமையாளர் முற்றிலும் இதனை இல்லாது செய்து விடமாட்டார்.</li> +</ol> + +<hr /> +<blockquote id="fsfs"><p class="big">இக்கட்டுரை <a +href="http://shop.fsf.org/product/free-software-free-society/"><cite>கட்டற்ற +மென்பொருள், கட்டற்ற சமூகம்: ரிச்சர்ட் ஸ்டால்மேனின் தேர்வு செய்யப் பட்ட +கட்டுரைகள்</cite></a> நூலில் இடம்பெற்றுள்ளது.</p></blockquote> + +<div class="translators-notes"> + +<!--TRANSLATORS: Use space (SPC) as msgstr if you don't have notes.--> + </div> +</div> + +<!-- for id="content", starts in the include above --> +<!--#include virtual="/server/footer.ta.html" --> +<div id="footer"> +<div class="unprintable"> + +<p>FSF & GNU தொடர்பான வினவல்களை <a +href="mailto:gnu@gnu.org"><gnu@gnu.org></a> அனுப்பவும். FSF ஐ <a +href="/contact/">தொடர்பு கொள்ளும் வேறு வழிகளும்</a> உண்டு. துண்டிக்கப்பட்ட +இணைப்புகள், திருத்தங்கள், பரிந்துரைகள் உள்ளிட்டவற்றை <a +href="mailto:webmasters@gnu.org"><webmasters@gnu.org></a> என்ற +முகவரிக்கு அனுப்பவும்.</p> + +<p> +<!-- TRANSLATORS: Ignore the original text in this paragraph, + replace it with the translation of these two: + + We work hard and do our best to provide accurate, good quality + translations. However, we are not exempt from imperfection. + Please send your comments and general suggestions in this regard + to <a href="mailto:web-translators@gnu.org"> + + <web-translators@gnu.org></a>.</p> + + <p>For information on coordinating and submitting translations of + our web pages, see <a + href="/server/standards/README.translations.html">Translations + README</a>. --> +இந்த கட்டுரையின் மொழிபெயர்ப்பை ஒருங்கிணைப்பது, சமர்ப்பிப்பது தொடர்பான +விவரங்களுக்கு <a +href="/server/standards/README.translations.html">மொழிபெயர்ப்புகள் README +கோப்பைக்</a> காணவும்.</p> +</div> + +<p>Copyright © 1991, 1992, 1998, 2000, 2001, 2006, 2007 Free Software +Foundation, Inc. (கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளை, நிறுவப்பட்டது.)</p> + +<p>இப்பக்கம் <a rel="license" +href="http://creativecommons.org/licenses/by-nd/4.0/">Creative Commons +Attribution-NoDerivatives 4.0 International License</a> உரிமத்தின் கீழ் +வெளியிடப்படுகிறது.</p> + +<!--#include virtual="/server/bottom-notes.ta.html" --> +<div class="translators-credits"> + +<!--TRANSLATORS: Use space (SPC) as msgstr if you don't want credits.--> +தமிழில்: ஆமாச்சு</div> + +<p class="unprintable"><!-- timestamp start --> +புதுப்பிக்கப் பட்ட விவரம்: + +$Date: 2019/06/23 15:24:27 $ + +<!-- timestamp end --> +</p> +</div> +</div> +<!-- for class="inner", starts in the banner include --> +</body> +</html> |