diff options
Diffstat (limited to 'talermerchantdemos/blog/articles/ta/not-ipr.html')
-rw-r--r-- | talermerchantdemos/blog/articles/ta/not-ipr.html | 291 |
1 files changed, 291 insertions, 0 deletions
diff --git a/talermerchantdemos/blog/articles/ta/not-ipr.html b/talermerchantdemos/blog/articles/ta/not-ipr.html new file mode 100644 index 0000000..45dee53 --- /dev/null +++ b/talermerchantdemos/blog/articles/ta/not-ipr.html @@ -0,0 +1,291 @@ +<!--#set var="PO_FILE" + value='<a href="/philosophy/po/not-ipr.ta.po"> + https://www.gnu.org/philosophy/po/not-ipr.ta.po</a>' + --><!--#set var="ORIGINAL_FILE" value="/philosophy/not-ipr.html" + --><!--#set var="DIFF_FILE" value="" + --><!--#set var="OUTDATED_SINCE" value="2009-09-27" --> + +<!--#include virtual="/server/header.ta.html" --> +<!-- Parent-Version: 1.86 --> + +<!-- This file is automatically generated by GNUnited Nations! --> +<title>அறிவுசார் சொத்து எனும் அபத்தம்! - குனு திட்டம் - கட்டற்ற மென்பொருள் +அறக்கட்டளை</title> + +<!--#include virtual="/philosophy/po/not-ipr.translist" --> +<!--#include virtual="/server/banner.ta.html" --> +<!--#include virtual="/server/outdated.ta.html" --> +<h2>அறிவுசார் சொத்து எனும் அபத்தம்!</h2> + +<p>ஆசிரியர்: <a href="http://www.stallman.org/">ரிச்சர்ட் எம். ஸ்டால்மேன்</a></p> + +<p> +தனித்த மாறுபட்ட, முற்றிலும் வெவ்வேறு பொருட்களையும், சட்டங்களையும் +பிரதிபலிக்கின்ற பதிப்புரிமை, படைப்புரிமை, வர்த்தகமுத்திரை ஆகிய மூன்று +விஷயங்களையும் ஒரே குட்டையில் போட்டு “அறிவுசார் சொத்து” என்று குழப்புவது +வாடிக்கையாகிவிட்டது. இது ஏதோ விபத்தில் விளைந்த விபரீதம் அல்ல. இதனால் +இலாபமடையும் நிறுவனங்கள் வளர்த்துவிட்ட குழப்பம். இந்த குழப்பத்தினை தவிர்க்க +இப்பதத்தை முற்றிலும் புறக்கணிப்பதே தெளிவான வழி. +</p> + +<p> +“அறிவுசார் சொத்து” என்கிற இப்பதமானது 1967 ல் “உலக அறிவுசார் சொத்து நிறுவனம்” +நிறுவப்பட்ட பின்னர், பின்பற்றப்படத் துவங்கி சமீபத்தில் தான் மிகவும் +பிரபலமானது என்கிறார் ஸ்டான்போஃர்டு சட்டப் பள்ளியில் தற்பொழுது பேராசிரியராக +இருக்கும் மார்க் லேமேய். “உலக அறிவுசார் சொத்து நிறுவனம்” முன்னர் ஐநா சபையின் +அங்கமாய் இருந்தது. ஆனால் உண்மையில் பதிப்புரிமை, படைப்புரிமை மற்றும் வர்த்தக +முத்திரை உடையோர்களுடைய விருப்பங்களைத் தான் அது பிரதிபலித்தது. +</p> + +<p> +இப்பதத்திலுள்ள பாரபட்சத்தினை கண்டறிவது மிகச் சுலபம். இது பௌதீக பொருட்களின் +மீதுள்ள சொத்துரிமையைப் போல பதிப்புரிமை, படைப்புரிமை, வர்த்தகமுத்திரை +ஆகியவற்றைக் கருதச் சொல்கிறது. (அறிஞர்களுக்கு மட்டுமே தெரியக்கூடிய +பதிப்புரிமை, படைப்புரிமை, வர்த்தகமுத்திரைகளுக்கான சட்ட விளக்கங்களோடு இந்த +ஒப்பீடானது முரண்படுகிறது.) உண்மையில் இச்சட்டங்கள் பௌதீக சொத்துரிமைச் +சட்டங்களைப் போலில்லை என்றபோதும் இப்பதத்தினை அவ்வர்த்தத்திலேயே +பிரயயோகப்படுத்துகின்ற காரணத்தினால் சட்டமன்றத்தினர் இதனை அங்ஙனமே மாற்ற +முனைகின்றனர். பதிப்புரிமை, படைப்புரிமை மற்றும் வர்த்தகமுத்திரைகளைப் +கடைபிடிக்கின்ற நிறுவனங்கள் இம்மாற்றத்தினையே விரும்புகிறார்கள் என்பதால் +“அறிவுசார் சொத்து” என்பதின் பாரபட்சம் நன்கு புலப்படும். +</p> + +<p> +இந்த பாரபட்சம் ஒன்றே இப்பதத்தினை முற்றிலும் புறக்கணிக்க போதுமான +காரணமாகும். மேலும் இவையனைத்தையும் உள்ளடக்கிய புதிய பெயரொன்றையும் +பரிந்துரைக்குமாறு மக்களில் பலர் எம்மிடம் கேட்டுள்ளதோடு, அவர்களே முன்வந்து +(வேடிக்கையான) பல பரிந்துரைகளையும் செய்துள்ளனர். அவைகளுள் திணிக்கப்பட்ட +ஏதேச்சாதிகார உரிமைகள் மற்றும் அரசிடமிருந்து தோற்றுவிக்கப் பட்டு சட்டபூர்வமாக +செயற்படுத்தப்பட்ட ஏதேச்சாதிகாரங்கள் முதலியவையும் அடங்கும். பிரத்யேக +உரிமையுள்ள அதிகாரங்கள் என்று கூட சிலர் கூறியதுண்டு. ஆனால் தளைகளை உரிமைகளாக +மொழிவது என்பது இரட்டிப்பு வேலைதான். +</p> + +<p> +இம்மாற்றுப் பரிந்துரைகளுள் சில பொருத்தமாகக் கூடத் தோன்றலாம்.ஆனால் “அறிவுசார் +சொத்து” என்பதற்கு மாற்றுச் சொல்லினைத் தேடுவது தவறு. அதிகம் +பரவலாக்கப்பட்டிருக்கும் இப்பதத்தின் ஆழமான பிரச்சனையை மாற்றுப் பெயர்களால் +நிரப்ப இயலாது. “அறிவுசார் சொத்து” என்ற ஒன்று இல்லவே இல்லை. அது ஒரு கானல் +நீர். அதிகம் பிரபலப்படுத்தப் பட்டிருக்கும் காரணத்தினாலேயே மக்கள் மத்தியில் +தனித்துவம் வாய்ந்த துறையாக அது காட்சியளிக்கிறது. +</p> + +<p> +அடிப்படையில் மாறுபட்ட இச்சட்டங்களை ஒன்றாய் வழங்குவதற்கு கிடைத்த அருஞ்சொல்லே +“அறிவுசார் சொத்து” என்பதாகும். வழக்குரைஞர் அல்லாத ஏனையோர் இப்பதம் +இச்சட்டங்களுக்காக பயன்படுத்தப்படுவதை அறியும் போது இவையனைத்தும் ஒரே +கொள்கையாலும் ஒத்த செயல்திட்டத்தாலும் உந்தப்பட்டதாக பாவித்துக் கொள்கிறார்கள். +</p> + +<p> +இதைத் தாண்டி இதில் சொல்வதற்கொன்றுமில்லை. தனித்தனியே தோன்றியதாகவும், +பலவகைகளில் பரிணாமம் பெற்று மாறுபட்ட செயல்களை உள்ளடக்கியதாகவும் , வெவ்வேறான +பொதுக் கொள்கைகளை எழுப்பியவையாகவும் இச்சட்டங்கள் அமைகின்றன. +</p> + +<p> +பதிப்புரிமை சட்டமானது கலை மற்றும் கலைஞர்களை ஊக்குவிப்பதற்காக +வடிவமைக்கப்பட்டது. ஒரு பணி வெளிப்படுத்தப்படும் விவரங்களை +உள்ளடக்கியது. படைப்புரிமைச் சட்டமோ பயனுள்ள சிந்தனைகளை வெளிக்கொணர வேண்டி அதனை +வெளிப்படுத்துபவருக்கு சில காலத்திற்கு அச்சிந்தனை மீது முழு அதிகாரம் கொடுக்க +முனைகிறது. இந்த விலை சில துறைகளில் கொடுக்க வல்லது மற்ற சில துறைகளில் +அவசியமற்றது. +</p> + +<p> +மாறாக வர்த்தக முத்திரைச் சட்டமோ தனித்தன்மை வாய்ந்த எந்தவொரு +வெளிப்பாட்டினையும் ஊக்குவிப்பதற்காக ஏற்படுத்தப் படவில்லை. மாறாக +நுகர்வோருக்கு தாங்கள் எதை வாங்குகிறோம் என்பதை அறியத் துணை +புரிகிறது. “அறிவுசார் சொத்து” என்கிற மாயையின் காரணமாக சட்டமன்றத்தினர் +விளம்பரத்திற்கு ஊக்கதொகை வழங்கும் ஒரு திட்டமாக இதனை மாற்றி விட்டனர். +</p> + +<p> +இச்சட்டங்கள் மூன்றும் தனித்தனியே இயற்றப் பட்டதால், ஒவ்வொரு அம்சத்திலும் அவை +மாறுபட்டு விளங்குகின்றன. மேலும் இவற்றின் அடிப்படை முறைகளும் நோக்கங்களுமே +மாறுபட்டு நிற்கிறது. ஆக பதிப்புரிமை பற்றி தங்களுக்கு தெரிந்திருந்தால் +படைப்புரிமை வேறுபட்டது என்பதை சுயமாகவே ஊகித்திருப்பீர்கள். இவ்விஷயத்தில் +தாங்கள் தவறிழைப்பது மிகவும் கடினம். +</p> + +<p> +ஏதோ ஒரு உயர்ந்த அல்லது தாழ்ந்த வகையைச் சுட்டும் பொருட்டு “அறிவுசார் சொத்து” +என மக்கள் அடிக்கடி சொல்கிறார்கள். உதாரணத்திற்கு பணக்கார நாடுகள் ஏழை +நாடுகளிடமிருந்து பணம் பிடுங்க வேண்டி அநியாயமான சட்டங்களை +சுமத்துகிறார்கள். அவற்றுள் சில தான் அறிவு சார் சொத்துரிமைச் சட்டங்கள். சில +சட்டங்கள் அப்படி இருப்பதில்லைதான். எது எப்படியோ, இந்நடைமுறைகளை விமர்சிப்போர் +அப்பதம் தங்களுக்கு பரிச்சயமான காரணத்தினால் அதனை விடாப்பிடியாக பிடித்துக் +கொண்டுள்ளனர். அதைப் பிரயோகப் படுத்தும் காரணத்தினால் பிரச்சனையின் தன்மையை +தவறாக புரிந்துக் கொள்ளச் செய்கிறார்கள். இதற்கு மாறாக “சட்டபூர்வமாக +காலனியாதிக்கம்” போன்ற மெய்ப்பொருளையுணர்த்த வல்ல சரியானச் சொற்களை +பயன்படுத்தலாம். +</p> + +<p> +சாதாரண மக்கள் மட்டும் இதனால் குழப்பத்திற்கு ஆளாகவில்லை. சட்டப் பேராசியர்களே +“அறிவுசார் சொத்து” எனும் இப்பதத்தில் உள்ள மாயையால் கவரப்பட்டு சிந்தை +சிதறடிக்கப் பட்டு நிற்கிறார்கள். மேலும் தங்களுக்கு தெரிந்த விஷயங்களோடு +முரண்படுகிற பொதுவான அறிவிப்புகளை செய்கிறார்கள். உதாரணத்திற்கு +பேராசிரியரொருவர் பின்வருமாறு எழுதினார், +</p> + +<blockquote><p> +''அமேரிக்க ஐக்கிய மாகாணங்களின் அரசியலமைப்பினை வடிவமைத்தோர், தற்போது உலக +அறிவுசார் சொத்துரிமை கழகத்தில் பணிபுரிகின்ற தங்களின் வழித்தோன்றல்களைப் +போலல்லாது, அறிவுசார் சொத்து விஷயத்தில், போட்டி மனப்பான்மையை ஊக்குவிக்கக் +கூடியதான அணுகுமுறையைக் கொண்டிருந்தார்கள். உரிமைகள் அவசியமானதுதான் என்பதை +அவர்கள் உணர்ந்திருந்த போதிலும் காங்கிரஸின் கைகளை கட்டிப்போட்டு அதன் +அதிகாரங்களை பல வழிகளிலும் கட்டுப்படுத்தியிருந்தார்கள்.'' +</p></blockquote> + +<p> +அமேரிக்க ஐக்கிய மாகாணங்களின் அரசியலமைப்புச் சட்டம் பிரிவு ஒன்று, பகுதி +எட்டின் உட்பிரிவு எட்டினை மேற்குறிப்பிடப்பட்ட வாசகம் மேற்கோள் +காட்டுகிறது. இந்த உட்பிரிவிற்கும் வர்த்தக முத்திரைச் சட்டத்திற்கும் தொடர்பே +கிடையாது. “அறிவுசார் சொத்துரிமை” என்கிற பதம் இப்பேராசிரியரை மிகைப்படுத்தி +கூறவைத்தது. +</p> + +<p> +சொற்பமான சிந்தனைக்கும் “அறிவுசார் சொத்து” என்கிற இப்பதமானது மக்களை இட்டுச் +செல்கிறது. பொதுவாக இருக்கக் கூடிய அற்பமான அம்சங்களுக்காக வெவ்வேறாக விளங்கக் +கூடிய இச்சட்டங்களை ஒப்பு நோக்க வைக்கிறது. இச்சட்டங்கள் ஒவ்வொன்றும் பொது +மக்களின் மீது விதிக்கப்படுகின்ற கட்டுப்பாடுகள், அதனால் ஏற்படக்கூடிய கூடிய +விளைவுகள் போன்ற அடிப்படை விவரங்களை ஒதுக்கி வைத்துவிட்டு இவை ஏதோ செயற்கையான +வசதிகளை சிலருக்கு வழங்குவதாகக் கருதச் செய்கிறது. இந்த சொற்பமான சிந்தனை +இப்பிரச்சனைகளின்பால் பொருளாதார அணுகுமுறையினை ஊக்குவிக்கின்றது. +</p> + +<p> +பரிசோதிக்கப் படாத அனுமானங்களில் சவாரி செய்தவாறெ இங்கேதான் பொருளாதாரம் +எப்பொழுதும் போல தனது வேலையைக் காட்டத் துவங்குகிறது. சுதந்திரமும் வாழ்க்கை +முறையும் முக்கியமன்று மாறாக எவ்வளவு உற்பத்தி என்பதே பிரதானம் போன்ற +மதிப்பீடுகளால் எழுகின்ற அனுமானங்களுக்கு வழிவிடுகின்றது. இசைமீதான பதிப்புரிமை +இசைக் கலைஞர்களை ஆதரிக்கவும், மருந்துகள் மீதான படைப்புரிமை உயிர் காக்கும் +ஆராய்ச்சிகளுக்கு பயன்படுவதாகவும், ஏட்டளவில் கூறப்படுகின்ற தவறான ஊகங்களும் +ஏற்படுகிறது. +</p> + +<p> +இப்படி பலவகையான சட்டங்கள் எழுப்புகின்ற குறிப்பிட்ட பிரச்சனைகள் “அறிவுசார் +சொத்து” என்பதன் பரந்த நோக்கில் காணாது போய்விடுகின்றன. இப் பிரச்சனைகள் +அவற்றுக்குரிய சட்டங்களுக்கேயான குறிப்பிட்ட அம்சங்களால் எழுபவை. “அறிவு சார் +சொத்து” என்கிற பதம், மக்கள் இவற்றை புறக்கணிக்க +ஊக்குவிக்கின்றன. உதாரணத்திற்கு இசையை பகிர்ந்து கொள்வது தகுமா என்பது +பதிப்புரிமை சட்டத்தில் வருகின்ற பிரச்சனை. படைப்புரிமைச் சட்டத்திற்கு இதில் +எந்தவொரு இடமும் இல்லை. பணம் குறைந்த நாடுகள் உயிர் காக்கும் மருந்துகளை தயார் +செய்து குறைந்த விலைக்கு உயிர் காக்கும் பொருட்டு விற்பனை செய்யலாமா என்பது +படைப்புரிமைச் சட்டத்தில் வருகின்றது. பதிப்புரிமைச் சட்டத்திற்கு இதில் +செய்வதற்கு ஒன்றுமில்லை. +</p> + +<p> +இவ்விரண்டும் பொருளாதாரத்தோடு மாத்திரம் தொடர்புடையவை அல்ல. மேலும் இவற்றின் +பொருளாதாரத்திற்கு அப்பாற்பட்ட கூறுகளும் வெவ்வேறானவை. மிகைப்படுத்தப்பட்ட +குறுகிய பொருளாதாரக் கண்ணோட்டத்தில் இவற்றை பார்ப்பதென்பது வேறுபாடுகளைப் +புறக்கணிப்பதாகும். இவ்விரண்டினையும் “அறிவு சார் சொத்து” எனும் ஒரே குட்டையில் +போடுவதென்பது, இவற்றை தனித்தனியே தெளிவாகப் பார்க்கக் கூடிய திறனுக்கு +முட்டுக்கட்டையாய் அமையும். +</p> + +<p> +ஆக, அறிவுசார் சொத்து என்ற பொருளைப் பற்றியக் கருத்துக்களும் அதை மிகைப் படுத்த +மேற்கொள்ளப்படும் எந்த ஒரு முயற்சியும் முட்டாள் தனமானவை. இவையனைத்தையும் +ஒன்றெனக் கருத தாங்கள் முற்பட்டால் மிதமிஞ்சிய மிகைப்படுத்தப்பட்ட +சிந்தனைகளிலிருந்தே தங்களின் கருத்துக்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கும். இது +நிச்சயமாக நல்லதல்ல. +</p> + +<p> +படைப்புரிமை, பதிப்புரிமை மற்றும் வர்த்தக முத்திரை எழுப்பும் பிரச்சனைகளைப் +பற்றி தெளிவாக சிந்திக்க தாங்கள் விரும்பினால் இவையனைத்தையும் ஒன்றாகக் +கோர்க்கும் எண்ணத்தை மறந்துவிடுங்கள். இவற்றை வெவ்வேறானதாகக் +கருதுங்கள். அடுத்த வழி “அறிவுசார் சொத்து” என்கிற பதம் வழங்க முற்படுகின்ற +குறுகிய சொற்பமான அணுகுமுறைகளை புறக்கணியுங்கள். இவற்றை அதனதன் முழுமையானப் +பொருளில் வெவ்வேறானதாகக் கருதுங்கள். அங்ஙனம் செய்தால் இவற்றைப் பற்றி +தெளிவாகக் கருதும் வாய்ப்பினைப் பெறுவீர்கள். +</p> + +<p>உலக அறிவுசார் சொத்து நிறுவனத்தில் மாற்றத்தினை கொண்டுவருவதென்றால், மற்றவைக்கு +மத்தியில் அதன் <a href="http://fsfe.org/projects/wipo/wiwo.en.html">பெயரையே +மாற்றக்</a> கோருவோமாக. +</p> + +<div class="translators-notes"> + +<!--TRANSLATORS: Use space (SPC) as msgstr if you don't have notes.--> + </div> +</div> + +<!-- for id="content", starts in the include above --> +<!--#include virtual="/server/footer.ta.html" --> +<div id="footer"> +<div class="unprintable"> + +<p>FSF & GNU தொடர்பான வினவல்களை <a +href="mailto:gnu@gnu.org"><gnu@gnu.org></a> அனுப்பவும். FSF ஐ <a +href="/contact/">தொடர்பு கொள்ளும் வேறு வழிகளும்</a> உண்டு. துண்டிக்கப்பட்ட +இணைப்புகள், திருத்தங்கள், பரிந்துரைகள் உள்ளிட்டவற்றை <a +href="mailto:webmasters@gnu.org"><webmasters@gnu.org></a> என்ற +முகவரிக்கு அனுப்பவும்.</p> + +<p> +<!-- TRANSLATORS: Ignore the original text in this paragraph, + replace it with the translation of these two: + + We work hard and do our best to provide accurate, good quality + translations. However, we are not exempt from imperfection. + Please send your comments and general suggestions in this regard + to <a href="mailto:web-translators@gnu.org"> + + <web-translators@gnu.org></a>.</p> + + <p>For information on coordinating and submitting translations of + our web pages, see <a + href="/server/standards/README.translations.html">Translations + README</a>. --> +இந்த கட்டுரையின் மொழிபெயர்ப்பை ஒருங்கிணைப்பது, சமர்ப்பிப்பது தொடர்பான +விவரங்களுக்கு <a +href="/server/standards/README.translations.html">மொழிபெயர்ப்புகள் README +கோப்பைக்</a> காணவும்.</p> +</div> + +<!-- Regarding copyright, in general, standalone pages (as opposed to + files generated as part of manuals) on the GNU web server should + be under CC BY-ND 4.0. Please do NOT change or remove this + without talking with the webmasters or licensing team first. + Please make sure the copyright date is consistent with the + document. For web pages, it is ok to list just the latest year the + document was modified, or published. + If you wish to list earlier years, that is ok too. + Either "2001, 2002, 2003" or "2001-2003" are ok for specifying + years, as long as each year in the range is in fact a copyrightable + year, i.e., a year in which the document was published (including + being publicly visible on the web or in a revision control system). + There is more detail about copyright years in the GNU Maintainers + Information document, www.gnu.org/prep/maintain. --> +<p>Copyright © 2004, 2006 Richard M. Stallman (ரிச்சர்ட் எம். ஸ்டால்மேன்)</p> + +<p>இப்பக்கம் <a rel="license" +href="http://creativecommons.org/licenses/by-nd/4.0/">Creative Commons +Attribution-NoDerivatives 4.0 International License</a> உரிமத்தின் கீழ் +வெளியிடப்படுகிறது.</p> + +<!--#include virtual="/server/bottom-notes.ta.html" --> +<div class="translators-credits"> + +<!--TRANSLATORS: Use space (SPC) as msgstr if you don't want credits.--> +தமிழில்: ஆமாச்சு</div> + +<p class="unprintable"><!-- timestamp start --> +புதுப்பிக்கப் பட்ட விவரம்: + +$Date: 2019/06/23 15:24:26 $ + +<!-- timestamp end --> +</p> +</div> +</div> +<!-- for class="inner", starts in the banner include --> +</body> +</html> |