summaryrefslogtreecommitdiff
path: root/talermerchantdemos/blog/articles/ta/linux-and-gnu.html
diff options
context:
space:
mode:
Diffstat (limited to 'talermerchantdemos/blog/articles/ta/linux-and-gnu.html')
-rw-r--r--talermerchantdemos/blog/articles/ta/linux-and-gnu.html317
1 files changed, 317 insertions, 0 deletions
diff --git a/talermerchantdemos/blog/articles/ta/linux-and-gnu.html b/talermerchantdemos/blog/articles/ta/linux-and-gnu.html
new file mode 100644
index 0000000..aaad2eb
--- /dev/null
+++ b/talermerchantdemos/blog/articles/ta/linux-and-gnu.html
@@ -0,0 +1,317 @@
+<!--#set var="PO_FILE"
+ value='<a href="/gnu/po/linux-and-gnu.ta.po">
+ https://www.gnu.org/gnu/po/linux-and-gnu.ta.po</a>'
+ --><!--#set var="ORIGINAL_FILE" value="/gnu/linux-and-gnu.html"
+ --><!--#set var="DIFF_FILE" value=""
+ --><!--#set var="OUTDATED_SINCE" value="2008-01-18" -->
+
+<!--#include virtual="/server/header.ta.html" -->
+<!-- Parent-Version: 1.87 -->
+
+<!-- This file is automatically generated by GNUnited Nations! -->
+<title>லினக்ஸும் குனு திட்டமும் - குனு திட்டம் - கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளை</title>
+<meta http-equiv="Keywords" content="GNU, FSF, Free Software Foundation, Linux, Emacs, GCC, Unix, Free Software, Operating System, GNU Kernel, HURD, GNU HURD, Hurd" />
+<meta http-equiv="Description" content="Since 1983, developing the free Unix style operating system GNU, so that computer users can have the freedom to share and improve the software they use." />
+
+<!--#include virtual="/gnu/po/linux-and-gnu.translist" -->
+<!--#include virtual="/server/banner.ta.html" -->
+<!--#include virtual="/server/outdated.ta.html" -->
+<h2>லினக்ஸும் குனு திட்டமும்</h2>
+
+<p><strong>ஆசிரியர்: <a href="http://www.stallman.org/">ரிச்சர்ட்
+எம். ஸ்டால்மேன்</a></strong></p>
+
+<div class="announcement">
+ <blockquote><p>இப்பேதம் குறித்து மேலும் அறிய <a href="/gnu/gnu-linux-faq.html">குனு/லினக்ஸ்
+கேள்வி பதில்</a> பகுதியையும், <a href="/gnu/why-gnu-linux.html">ஏன்
+குனு/லினக்ஸ்?</a> பக்கத்தையும் <a
+href="/gnu/gnu-users-never-heard-of-gnu.html">குனுவினைப் பற்றி கேள்விப்
+பட்டிராத குனு பயனர்கள்</a> ஆகியப் பக்கங்களையும் வாசிக்கலாம்.</p>
+ </blockquote>
+</div>
+
+<p>
+கணினியினைப் பயன்படுத்தும் பெரும்பாலானோர் <a
+href="/philosophy/categories.html#TheGNUsystem">குனு அமைப்பின்</a> மாறுபட்ட
+வெளியீட்டினைப் பயன்படுத்துகின்றோம் என்பதை உணராமலேயே
+பயன்படுத்துகின்றனர். விசித்திரமானச் சம்பவங்களின் விளைவாக, இன்று பரவலாக
+பயன்படுத்தப் படும் குனுவின் வெளியீடு பெரும்பாலும் “லினக்ஸ்” என்றே அறியப்
+படுகின்றது. <a href="/gnu/gnu-history.html">குனு திட்டத்</a>துடன்
+இதற்குள்ளத் தொடர்பினை பெரும்பாலான பயனர்கள் அறியாமலே உள்ளனர்.</p>
+
+<p>
+லினக்ஸ் என்றொன்று இருக்கின்றது. இம்மக்கள் அதனைப் பயன்படுத்துகின்றனர். ஆனால்
+அது இயங்கு தளம் அன்று. லினக்ஸ் ஒரு கருவாகும். தாங்கள் இயக்கும் ஏனைய
+நிரல்கட்கு இயந்திரத்தின் வளங்களை ஒதுக்கும் ஒரு நிரல்.கருவும் இயங்கு தளத்தின்
+இன்றியமையாத பாகந்தான். ஆனால் தன்னந்தனியாக அது பயனற்றது. முழுமையானதொரு இயங்கு
+தளமென்னும் நோக்கத்தில் மாத்திரமே அது பணி செய்ய முடியும். சாதாரணமாக லினக்ஸ்
+குனு இயங்கு தளத்துடன் பயன்படுத்தப் படுகிறது. முழுமையான அமைப்பென்பது
+அடிப்படையில் குனு. லினக்ஸ் அதன் கருவாகச் செயல்படுகின்றது.</p>
+
+<p>
+லினக்ஸெனும் கருவுக்கும் முழுமையான அமைப்புக்கும் உள்ள வித்தியாசத்தினை
+பெரும்பாலான பயனர்கள் அறியாது இருக்கிறார்கள். முழு அமைப்பினையுமே அவர்கள்
+“லினக்ஸ்” என அழைக்கின்றனர். குழப்பமான இப் பெயர் பிரயோகம் புரிதலை
+பேணவில்லை. இப்பயனர்கள் அனைவரும் சிறு உதவியுடன் 1991 ல் லைனஸ் டோர்வால்ட்ஸ்
+முழு இயங்கு தளத்தினையும் உருவாக்கியதாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.</p>
+
+<p>
+லினக்ஸ் ஒரு கருவென்பது நிரலாளர்களுக்குப் பொதுவாகத் தெரியும்.முழு அமைப்பையும்
+அவர்களும் லினக்ஸ் என்றே பொதுவாகக் கேள்விப்படிருப்பதால் , முழு அமைப்பினையும்
+கருவினை அடிப்படையாகக் கொண்டு பெயரிடும் மரபை பெரும்பாலும்
+ஆமோதிக்கின்றனர். உதாரணத்திற்கு கருவினை லைனஸ் டோர்வால்ட்ஸ் இயற்றிய பிறகு,
+அதன் பயனர்கள் அதனுடன் பொருந்தக் கூடிய பிற மென்பொருள்களை தேடியதாகவும்,அங்ஙனம்
+யுனிக்ஸ் போறதொரு இயங்கு தளத்திற்குத் தேவையான அனைத்தும் ஏற்கனவே கிடைத்ததைக்
+(எந்தவொரு காரணமும் இல்லாமல்) கண்டெடுத்ததாகவும் பலர் நம்புகின்றனர்.</p>
+
+<p>
+அவர்களுக்கு கிடைத்தது ஏதோ விபத்தால் விளைந்தது அல்ல. அது முழுமைப் பெறாத குனு
+அமைப்பு. குனு திட்டம் 1984 லிருந்து இயங்கு தளமொன்றை உருவாக்க பணிபுரிந்து
+வந்தக் காரணத்தால் கிடைக்கப் பெற்ற <a href="/philosophy/free-sw.html">கட்டற்ற
+மென்பொருட்</a>கள் சேர்க்கப் பட்டு ஒரு முழு அமைப்பு உருவானது. <a
+href="/gnu/manifesto.html">குனு செயற்திட்டத்தில்</a> யுனிக்ஸ் போன்றதொரு குனு
+எனும் கட்டற்ற அமைப்பினை உருவாக்கும் இலட்சியத்தினை முன்மொழிந்திருந்தோம். குனு
+திட்டத்தின் <a href="/gnu/initial-announcement.html">முதல் அறிவிப்பும்</a>
+குனு அமைப்பின் பூர்வாங்கத் திட்டங்கள் குறித்து விரித்துரைக்கின்றது. லினக்ஸ்
+இயற்றப் பட்டபொழுது குனு கிட்டத்தட்ட நிறைவினை எட்டியிருந்தது.</p>
+
+<p>
+குறிப்பிட்ட பணியினைச் செய்யும் பொருட்டு குறிப்பிட்ட மென்பொருள் உருவாக்க
+வேண்டுமென்பதை பெரும்பாலான கட்டற்ற மென்பொருள் திட்டங்கள் இலக்காகக்
+கொள்ளும். உதாரணத்துக்கு லைனஸ் டோர்வால்ட்ஸ் யுனிக்ஸ் போன்றதொரு கருவினை இயற்ற
+முற்பட்டார். டொனால்ட் கினட்ச் உரைப் பகுப்பிற்கென ஒரு செயலியினை (டெக்ஸ்)
+இயற்ற முற்பட்டார். பாப் ஸ்கீய்பஃலர் சாளர அமைப்பொன்றினை இயற்ற முற்பட்டார்
+(எக்ஸ் சாளர அமைப்பு). இத்தகையத் திட்டங்களை அத்திட்டங்களிலிருந்து வரக் கூடிய
+குறிப்பிட்ட நிரல்களைக் கொண்டு மதிப்பிடுவது இயற்கையானது.</p>
+
+<p>
+குனு திட்டத்தின் பங்களிப்பினை இங்ஙனம் நாம் அளவிட்டால் எத்தகையதொரு முடிவிற்கு
+நம்மால் வர இயலும்? வட்டொன்றினை விநியோகிக்கும் ஒருவர் தங்கள் “லினக்ஸ்
+வழங்களில்” ஒட்டுமொத்த மூல நிரல்களில் கிட்டத்தட்ட 28% சதவிகிதத்தினைக் கொண்டு,
+தனிப்பெரும் பங்கினை <a href="/philosophy/categories.html#GNUsoftware">குனு
+மென்பொருள்</a> பெற்றிருந்ததாக கண்டறிந்தார். மேலும் அமைப்பின் இருப்பிற்கே
+அத்தியாவசியமான முக்கிய பாகங்களைக் இது உள்ளடக்கியிருந்தது.லினக்ஸ் ஏறத்தாழ 3
+சதவிகிதம் தான். ஆக அமைப்பின் நிரலை யார் இயற்றினார் என்பதை வைத்து தாங்கள் ஒரு
+பெயரினைத் தேர்வு செய்யப் போகின்றீர்கள் என்றால் மிகவும் பொருத்தமானத் தேர்வு
+“குனு” வாகத்தான் இருக்கும்.</p>
+
+<p>
+ஆனால் கேள்வியினை அணுகுவதற்கு இதனைச் சரியான முறையாக நாங்கள் கருதவில்லை. குனு
+குறிப்பிட்ட மென்பொருள் பொதிகளை உருவாக்க வேண்டி உருவானத் திட்டம்
+அல்ல. இப்பொழுதும் அப்படித்தான். <a href="/software/gcc/">சி ஒடுக்கி
+ஒன்றினை</a> உருவாக்கிட விழைந்த திட்டம் அல்ல. இருந்தபோதும் நாங்கள் அதனைச்
+செய்தோம். உரைத் தொகுப்பு பயன்பாடொன்றை உருவாக்கிட விழைந்த திட்டமுமல்ல. இருந்த
+பொழுதும் ஒன்றை நாங்கள் உருவாக்கினோம். குனு திட்டத்தின் இலக்கு குனு என்ற
+முழுமையான கட்டற்ற யுனிக்ஸ் போன்றதொரு இயங்கு தளத்தினை உருவாக்குவது.</p>
+
+<p>
+அமைப்பிலுள்ள கட்டற்ற மென்பொருட்களுக்கு பலர் பங்களித்துள்ளனர். அவர்கள்
+அனைவருக்கும் நன்மதிப்பில் பங்குண்டு. குனு திட்டம் ஒரு ஒருங்கிணைக்கப் பட்ட
+அமைப்பினை உருவாக்க முனைந்த காரணத்தால் அது அங்ஙனம் ஆனது. மேலும் அது பயனுள்ள
+நிரல்களின் தொகுப்பு மாத்திரம் அல்ல. முழுமையானதொரு கட்டற்ற இயங்குதளத்தினை
+உருவாக்கத் தேவையான நிரல்களை நாங்கள் பட்டியலிட்டோம். மேலும் அப்பட்டியலில்
+உள்ளவற்றை முறைப்படி இனங்கண்டு, இயற்றி அல்லது மக்களைக் இனங்கண்டு இயற்ற
+முற்பட்டோம். கவர்ச்சியற்ற<a href="#unexciting">(1)</a> ஆனால் இன்றியமையாத
+பாகங்களை இயற்றவும் செய்தோம். அவை இல்லாமல் ஒரு அமைப்பினைத் தங்களால் பெற
+இயலாது. எங்களால் இயற்றப் பட்ட அமைப்பின் சிலப் பாகங்கள், நிரலாக்கக் கருவிகள்,
+அவையாகவே நிரலாளர்கள் மத்தியில் பிரபலமாயின. ஆனால் கருவிகளாக இல்லாதப்<a
+href="#nottools">(2)</a> பலப் பாகங்ளை இயற்றினோம். நாங்கள் செஸ் விளையாட்டு
+ஒன்றினையும் உருவாக்கினோம். ஏனெனில் முழுமையான அமைப்பொன்றுக்கு நல்ல
+விளையாட்டுக்களும் தேவை.</p>
+
+<p>
+1990 ம் வருடத்தின் துவக்கத்தில் கருவினைத் தவிர ஏனைய அனைத்தையும் நாங்கள்
+ஒன்றிணைத்திருந்தோம் (அதோடு மாக் மீது இயங்கும் குனு <a
+href="/software/hurd/hurd.html">ஹர்ட்</a> கருவிலும் நாங்கள் பணிபுரிந்து
+கொண்டிருந்தோம்). இக்கருவை உருவாக்குவதென்பது நாங்கள் எதிர்பார்த்ததைக்
+காட்டிலும் மிகக் கடினமாக இருந்தது. <a
+href="/software/hurd/hurd-and-linux.html">குனு ஹர்ட் 2001 லிருந்து
+நம்பகத்தன்மையுடன் பணிபுரியத் துவங்கியது</a>. குனு ஹர்ட்டினைக் கொண்ட குனு
+அமைப்பினை வெளியிட நாங்கள் ஆயத்தமாகி வருகின்றோம்.</p>
+
+<p>
+லினக்ஸ் கிடைத்த காரணத்தினால், அதிருஷ்ட வசமாக, நாங்கள் ஹர்ட்டுக்காக
+காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லாது போனது. லினக்ஸினை லைனஸ் டோர்வால்ட்ஸ்
+இயற்றியப் பொழுது கடைசியாக இருந்த இடைவெளியியை நிரப்பினார். குனு அமைப்புடன்
+லினக்ஸினையும் ஒன்றிணைத்து முழுவதும் கட்டற்ற தன்மையுடைய அமைப்பினை மக்களால்
+இயற்ற முடிந்தது: லினக்ஸினை சார்ந்த குனுவின் அமைப்பு. சுருக்கமாக குனு/லினக்ஸ்
+அமைப்பு.. ஆரம்ப காலத்து லினக்ஸ் வெளியீட்டுக் குறிப்பு குனுவின் பகுதிகளைப்
+பயன்படுத்தும், லினக்ஸ் ஒரு கருவென்பதை ஏற்றது: <a
+href="http://ftp.funet.fi/pub/linux/historical/kernel/old-versions/RELNOTES-0.01">“லினக்ஸுடன்
+பயன்படுத்தப் படும் பெரும்பாலான கருவிகள் குனு மென்பொருளாகும். மேலும் அவை குனு
+காபிலெப்ஃடின் கீழ் வருபவை. இக் கருவிகள் வழங்கலில் இல்லை - மேலும்
+விவரங்களுக்கு எம்மையோ (அல்லது குனுவையோ) கேளுங்கள்.”</a></p>
+
+<p>
+இவற்றை ஒன்றாக கோர்ப்பது கேட்பதற்குச் சுலமாக இருக்கலாம், அது அதிக
+முக்கியத்துவம் இல்லாத பணியாக இருந்து விடவில்லை. லினக்ஸுடன் பணியாற்றும்
+பொருட்டு சில குனு பாகங்களில்<a href="#somecomponents">(3)</a> குறிப்பிடத்
+தக்க மாற்றங்கள் செய்ய வேண்டியிருந்தது.“ பெட்டியைத் திறந்ததும்” பணி புரியத்
+தக்க முழுமையானதொரு வழங்கலை ஒருங்கிணைப்பதும் மிகப் பெரிய பணியாக
+இருந்தது. எப்படி அமைப்பினை துவக்குவது மற்றும் நிறுவுவது போன்ற
+பிரச்சனைகளுக்கு தீர்வுத் தர வேண்டியிருந்தது.நாங்கள் அத்தகைய நிலையினை அடையாது
+இருந்தக் காரணத்தால் இதனை எங்களால் ஈடு செய்ய முடியவில்லை. பல்வேறு வழங்கல்களை
+உருவாக்கியோர் குறிப்பிடத்தக்க பங்களித்தனர்.</p>
+
+<p>
+குனு திட்டம் குனு அமைப்போடு கூடவே குனு/லினக்ஸ் அமைப்புகளையும்
+ஆதரிக்கின்றது. நிதியும் அளிக்கின்றது. லினக்ஸ் தொடர்புடைய குனு சி நிரலக
+விரிவாக்கங்களை மீண்டும் இயற்ற நாங்கள் நிதி அளித்தோம். இதன் காரணமாக அவை
+தற்பொழுது நல்ல முறையில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. மேலும் புதிய குனு/லினக்ஸ்
+வழங்கல்கள் மாற்றங்கள் ஏதுமற்ற நடைமுறையிலுள்ள நிரலகத்தினைப்
+பயன்படுத்துகின்றன. டெபியன் குனு/ லினக்ஸ் வழங்கலின் உருவாக்கத்தின் ஆரம்ப
+கட்டத்திற்கும் நாங்கள் நிதியளித்தோம்.</p>
+
+<p>
+எங்களின் அனைத்துப் பணிகளுக்காகவும் நாங்கள் இன்று லினக்ஸ் சார்ந்த குனு
+அமைப்பினை பயன்படுத்துகின்றோம். அதனைத் தாங்களும் பயன்படுத்துவீர்கள் என
+நினைக்கின்றோம். குனு/லினக்ஸின் மாறுபட்ட பல வடிவங்கள் இன்று கிடைக்கப்
+பெறுகின்றன (“வழங்கல்கள்”) என அவை அழைக்கப் படுகின்றன. அவற்றுள் பெரும்பாலானவை
+கட்டுடைய மென்பொருட்களைப் பயன்படுத்துகின்றன. அதனை உருவாக்குவோர் குனு
+கொள்கைகளைக் காட்டிலும் லினக்ஸுடன் தொடர்புடைய கொள்கையினைக்
+கடைபிடிக்கின்றனர். ஆனால் <a href="/distros/distros.html">முற்றிலும் கட்டற்ற
+குனு/ லினக்ஸ் வழங்கல்களும்</a> உள்ளன.</p>
+
+<p>தாங்கள் குனு/ லினக்ஸ் பயன்படுத்துகின்றீர்களோ இல்லையோ, தயவு செய்து
+சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில்“ லினக்ஸ் ” என்ற பெயரைப் பயன்படுத்தி பொது
+மக்களை குழப்பாதீர்கள். லினக்ஸ் ஒரு கரு. அமைப்பின் இன்றியமையாத முக்கியமான ஒரு
+பாகம். ஒட்டுமொத்த அமைப்பு கிட்டத்த்ட குனு அமைப்பு. லினக்ஸ் அதில் சேர்க்கப்
+பட்டுள்ளது. இதன் கூட்டமைப்பினைப் பற்றி தாங்கள் பேசுகிறபொழுது தயவு செய்து
+“குனு/ லினக்ஸ்” என்றழைக்கவும்.</p>
+
+<p>
+மேற்கோளிடும் பொருட்டு “குனு/ லினக்ஸுக்கு” தாங்கள் இணைப்பினை வழங்க
+விழைந்தால், இப்பக்கமும் <a href="/gnu/the-gnu-project.html">
+http://www.gnu.org/gnu/the-gnu-project.html</a> பக்கமும் உகந்தத்
+தேர்வுகள். கருவாகிய லினக்ஸினைத் தாங்கள் குறிப்பிட்டு அதற்கு மேற்கோளிட
+விரும்பினால் <a href="http://foldoc.org/linux">http://foldoc.org/linux</a>
+அதன் பொருட்டு பயன்படுத்த உகந்த இணைப்பாக இருக்கும்.</p>
+
+<h3>பிற்சேர்க்கைகள்</h3>
+
+<p>
+குனுவினைத் தவிர, வேறொருத் திட்டமும் சுயேச்சையாக கட்டற்ற யுனிக்ஸ் போன்றதொரு
+இயங்குதளத்தினைப் உருவாக்கியுள்ளது. இது பி.எஸ்.டி என வழங்கப் படுகின்றது. இது
+யு.சி பெர்க்லியில் உருவாக்கப் பட்டது. அது 1980 களில் கட்டுடையதாக இருந்தது,
+1990 களின் துவக்கத்தில் கட்டற்றதானது. இன்று இருக்கக் கூடிய கட்டற்ற இயங்கு
+தளமொன்று உறுதியாக ஒன்று குனு அமைப்பின் வழி வந்திருக்கும் , அல்லது பி.எஸ்.டி
+யினைப் போலிருக்கும்.</p>
+
+<p>
+பி.எஸ்.டியும் குனுவின் வழிவகைதானா என மக்கள் சிலச் சமயங்களில்
+கேட்பதுண்டு. தங்களின் நிரல்களை கட்டற்றதாக்க பி.எஸ்.டியை உருவாக்குவோர் குனு
+திட்டத்தின் உதாரணத்தினால் உந்தப் பட்டனர். மேலும் குனு இயக்கத்தினரின்
+முன்முனைந்த கோரிக்கைகள் அவர்களை ஏற்க வைக்க உதவி புரிந்தது. ஆனால் நிரல் சற்று
+மேல்படர்ந்திருந்தது. குனு அமைப்பும் அதன் வழிவந்தவையும் சில பி.எஸ்டி நிரல்களை
+பயன்படுத்துவது போலவே, பி.எஸ்.டி அமைப்பும் இன்று சில குனு நிரல்களைப்
+பயன்படுத்துகின்றன. ஒட்டு மொத்தமாகப் பார்க்கிற பொழுது தனந்தனியே பரிணாமம்
+கொண்ட இரு வேறு அமைப்புகள் அவை. பி.எஸ்.டி உருவாக்குவோர் கருவினை உருவாக்கி
+அதனை குனுவுடன் இணைக்க வில்லை. ஆகையால் குனு/பிஎஸ்டி எனும் பெயர்
+சூழ்நிலைக்குப் பொருந்தாது.<a href="#gnubsd">(4)</a></p>
+
+<h3>குறிப்புகள்:</h3>
+<ol>
+<li>
+கவர்ச்சியற்ற ஆனால் இன்றியமையாத பாகங்கள் குனு ஒன்றிணைப்பாளர், ஜி.ஏ.எஸ்
+மற்றும் இணைப்பர், ஜி.எல்.டி (இவையிரண்டு தற்சமயம் <a
+href="/software/binutils/">குனு பின்யுடில்ஸ்</a> பொதியின் அங்கங்களாகும்), <a
+href="/software/tar/">குனு டார்</a> முதலியவற்றை உள்ளடக்கியவை.</li>
+
+<li>
+உதாரணத்திற்கு, பார்ன் அகைன் ஷெல், போஸ்ட் ஸ்கிரிப்ட் வரியொடுக்கியான <a
+href="/software/ghostscript/ghostscript.html">கோஸ்ட்ஸ்கிரிப்ட்</a>, மற்றும்
+<a href="/software/libc/libc.html">குனு சி நிரலகம்</a> போன்றவை நிரலாக்கக்
+கருவிகளல்ல. குனு காஷ், குநோம் மற்றும் குனு செஸ்ஸும் இத்தகையதே.</li>
+
+<li>
+உதாரணத்திற்கு <a href="/software/libc/libc.html">குனு சி நிரலகம்</a>.</li>
+
+<li>
+ஆனால் இக்கட்டுரை இயற்றப் பட்டதிலிருந்து உருண்டோடிய வருடங்களில் குனு சி
+நிரலகம் ப்ஃரீபிஎஸ்டி கருவிற்கு உகந்ததாக்கப் பட்டது. இதனால் குனு அமைப்பினை
+அக்கருவுடன் இணைக்க முடிந்தது. குனு/லினக்ஸைப் போலவே, இவை குனுவின்
+வழிவந்தவையே. ஆகவே அவை அவற்றின் கருவினை அடிப்படையாகக் கொண்டு
+குனு/கேப்ஃரீபிஎஸ்டி அல்லது குனு/கேநெட்பிஎஸ்டி என வழங்கப் படுகின்றன. அதனதன்
+பணித் திரையில் சாதாரணப் பயனர்களால் குனு/லினக்ஸ் மற்றும் குனு/*பிஎஸ்டி
+களுக்கிடையே வித்தியாசம் காண்பது அரிதானது.</li>
+
+</ol>
+
+<div class="translators-notes">
+
+<!--TRANSLATORS: Use space (SPC) as msgstr if you don't have notes.-->
+ </div>
+</div>
+
+<!-- for id="content", starts in the include above -->
+<!--#include virtual="/server/footer.ta.html" -->
+<div id="footer">
+<div class="unprintable">
+
+<p>FSF &amp; GNU தொடர்பான வினவல்களை <a
+href="mailto:gnu@gnu.org">&lt;gnu@gnu.org&gt;</a> அனுப்பவும். FSF ஐ <a
+href="/contact/">தொடர்பு கொள்ளும் வேறு வழிகளும்</a> உண்டு. துண்டிக்கப்பட்ட
+இணைப்புகள், திருத்தங்கள், பரிந்துரைகள் உள்ளிட்டவற்றை <a
+href="mailto:webmasters@gnu.org">&lt;webmasters@gnu.org&gt;</a> என்ற
+முகவரிக்கு அனுப்பவும்.</p>
+
+<p>
+<!-- TRANSLATORS: Ignore the original text in this paragraph,
+ replace it with the translation of these two:
+
+ We work hard and do our best to provide accurate, good quality
+ translations. However, we are not exempt from imperfection.
+ Please send your comments and general suggestions in this regard
+ to <a href="mailto:web-translators@gnu.org">
+
+ &lt;web-translators@gnu.org&gt;</a>.</p>
+
+ <p>For information on coordinating and submitting translations of
+ our web pages, see <a
+ href="/server/standards/README.translations.html">Translations
+ README</a>. -->
+இந்த கட்டுரையின் மொழிபெயர்ப்பை ஒருங்கிணைப்பது, சமர்ப்பிப்பது தொடர்பான
+விவரங்களுக்கு <a
+href="/server/standards/README.translations.html">மொழிபெயர்ப்புகள் README
+கோப்பைக்</a> காணவும்.</p>
+</div>
+
+<!-- Regarding copyright, in general, standalone pages (as opposed to
+ files generated as part of manuals) on the GNU web server should
+ be under CC BY-ND 4.0. Please do NOT change or remove this
+ without talking with the webmasters or licensing team first.
+ Please make sure the copyright date is consistent with the
+ document. For web pages, it is ok to list just the latest year the
+ document was modified, or published.
+ If you wish to list earlier years, that is ok too.
+ Either "2001, 2002, 2003" or "2001-2003" are ok for specifying
+ years, as long as each year in the range is in fact a copyrightable
+ year, i.e., a year in which the document was published (including
+ being publicly visible on the web or in a revision control system).
+ There is more detail about copyright years in the GNU Maintainers
+ Information document, www.gnu.org/prep/maintain. -->
+<p>Copyright &copy; 1997, 1998, 1999, 2000, 2001, 2002, 2007 Richard
+M. Stallman (ரிச்சர்ட் எம். ஸ்டால்மேன்)</p>
+
+<p>இப்பக்கம் <a rel="license"
+href="http://creativecommons.org/licenses/by-nd/4.0/">Creative Commons
+Attribution-NoDerivatives 4.0 International License</a> உரிமத்தின் கீழ்
+வெளியிடப்படுகிறது.</p>
+
+<!--#include virtual="/server/bottom-notes.ta.html" -->
+<div class="translators-credits">
+
+<!--TRANSLATORS: Use space (SPC) as msgstr if you don't want credits.-->
+தமிழில்: ஆமாச்சு</div>
+
+<p class="unprintable"><!-- timestamp start -->
+புதுப்பிக்கப் பட்ட விவரம்:
+
+$Date: 2019/06/23 15:24:26 $
+
+<!-- timestamp end -->
+</p>
+</div>
+</div>
+</body>
+</html>