summaryrefslogtreecommitdiff
path: root/talermerchantdemos/blog/articles/ta/free-doc.html
diff options
context:
space:
mode:
Diffstat (limited to 'talermerchantdemos/blog/articles/ta/free-doc.html')
-rw-r--r--talermerchantdemos/blog/articles/ta/free-doc.html229
1 files changed, 229 insertions, 0 deletions
diff --git a/talermerchantdemos/blog/articles/ta/free-doc.html b/talermerchantdemos/blog/articles/ta/free-doc.html
new file mode 100644
index 0000000..30ed135
--- /dev/null
+++ b/talermerchantdemos/blog/articles/ta/free-doc.html
@@ -0,0 +1,229 @@
+<!--#set var="PO_FILE"
+ value='<a href="/philosophy/po/free-doc.ta.po">
+ https://www.gnu.org/philosophy/po/free-doc.ta.po</a>'
+ --><!--#set var="ORIGINAL_FILE" value="/philosophy/free-doc.html"
+ --><!--#set var="DIFF_FILE" value=""
+ --><!--#set var="OUTDATED_SINCE" value="2010-06-26" -->
+
+<!--#include virtual="/server/header.ta.html" -->
+<!-- Parent-Version: 1.79 -->
+
+<!-- This file is automatically generated by GNUnited Nations! -->
+<title>கட்டற்ற மென்பொருளும் கட்டற்ற ஆவணங்களும் - குனு திட்டம் - கட்டற்ற மென்பொருள்
+அறக்கட்டளை</title>
+
+<!--#include virtual="/philosophy/po/free-doc.translist" -->
+<!--#include virtual="/server/banner.ta.html" -->
+<!--#include virtual="/server/outdated.ta.html" -->
+<h2>கட்டற்ற மென்பொருளும் கட்டற்ற ஆவணங்களும்</h2>
+
+<ul>
+<li><a href="/copyleft/fdl.html">குனுவின் கட்டற்ற ஆவண உரிமம்</a></li>
+</ul>
+
+<p>
+கட்டற்ற இயங்கு தளங்களில் இருக்கக் கூடிய மிகப் பெரிய குறைபாடு தரமான ஆவணங்கள்
+இல்லாது இருப்பதே. அதிக முக்கியத்துவம் வாய்ந்த நமது நிரல்கள் முழுமையான
+ஆவணங்களோடு வருவதில்லை. எந்தவொரு மென்பொருள் பொதிக்கும் ஆவணமாக்கம் இன்றியமையாத
+ஒன்றாகும். முக்கியமான கட்டற்ற மென்பொருள் பொதியொன்று கட்டற்ற ஆவணத்தோடு வராதது
+பெரிய குறைபாடாகும். இத்தகைய குறைபாடுகள் நம்மிடையே இன்று அதிகம் இருக்கின்றன.</p>
+
+<p>
+பல வருடங்களுக்கு முன்னால் பேர்ல் நிரலாக்க மொழி கற்க
+எத்தனித்திருந்தேன். கற்பதற்குக் கட்டற்ற ஆவணம் ஒன்று கிடைத்தது. ஆனால் அதைக்
+கொண்டு விளங்கிக் கொள்வது கடினமாகத் தோன்றியது. பேர்ல் பயன்படுத்துவோரிடம்
+இதற்கு மாற்று ஏதேனும் உள்ளதா என வினவினேன். நிறைய இருக்கின்றன. ஆனால் அவை
+கட்டுப்படுத்துபவை என எனக்கு பதில் கிடைத்தது.</p>
+
+<p>
+ஏனிந்த நிலைமை? இவ்வாவணங்களின் ஆசிரியர்கள் இவற்றை பதிப்பித்த ஓ'ரீலி
+அசோசியேட்ஸுக்காக எழுதியமையால் கட்டுடையவையாக இருந்தன.நகலெடுக்கவோ,
+மாற்றியமைக்கவோ, மூலக் கோப்புகளை அணுகவோ இயலாத நிலை. இத்தன்மைகளால் இவை கட்டற்ற
+சமூகத்தினால் அண்ட இயலாதவை ஆயின.</p>
+
+<p>
+இங்ஙனம் நடந்தது இதுவே முதல் முறை என்று கருத வேண்டாம். தனியுரிம ஆவணத்
+தயாரிப்பு நிறுவனங்கள், எண்ணற்ற ஆசிரியர்களை ஆசைக் காட்டி அவர்களின் ஆவணங்களை
+கட்டுடையவையாகச் செய்திருக்கிறார்கள். குனு திட்டத்திற்கு தோள் கொடுக்க வேண்டி,
+குனு பயனரொருவர் தாம் இயற்றிவரும் ஆவணம் குறித்து ஆவலுடன் தெரிவப்பதும்,
+பின்னர் அதன் நிமித்தம் அவர் பதிப்பகத்தார் ஒருவருடன் ஒப்பந்தம் செய்து கொள்வது
+பற்றி கதைப்பதையும் பல முறை கேட்டிருக்கின்றோம். இவை எமது ஆசைகளில் மண்ணள்ளிப்
+போட்டதோடு பயன்படுத்த இலாயக்கற்றதாவும் செய்கிறது.</p>
+
+<p>
+பெரும்பாலும் நிரலாளர்களிடத்தே நல்லதொரு உரை எழுவதற்கான திறமை அதிகம் இல்லாது
+போவது நாம் ஆவணங்களை இழப்பதற்கு வழிவகுத்து விடக் கூடாது.</p>
+
+<p>
+கட்டற்ற ஆவணமென்பது கட்டற்ற மென்பொருளினைப் போலவே சுதந்தரத்தினை அடிப்படையாகக்
+கொண்டது. விலையினை அல்ல. இங்கே பிரச்சனை என நாம் இயம்புவது ஓ'ரீலி அஸோசியேட்ஸ்
+ஆவணங்களுக்காக காசு கேட்டதை அல்ல. அது முற்றிலும் ஏற்புடையதே.(கட்டற்ற
+மென்பொருள் அறக்கட்டளையும் <a
+href="http://shop.fsf.org/category/books/">பதிப்பிக்கப் பட்ட</a> கட்டற்ற <a
+href="/doc/doc.html">குனு ஆவணங்களை</a>விற்பனைச் செய்கிறது.) ஆனால் குனுவின்
+ஆவணங்கள் மூல வடிவில் கிடைக்கப் பெறுகின்ற அதே வேளையில் இவ்வாவணங்கள்
+காகிதத்தில் மட்டுமே கிடைக்கின்றன. குனு ஆவணங்கள் நகலெடுத்து மாற்றியமைக்க
+அனுமதி வழங்குகிறது; பேர்ல் ஆவணங்கள் மறுக்கின்றன. இந்தத் தளைகளே
+பிரச்சனைக்குக் காரணம்.</p>
+
+<p>
+கட்டற்ற மென்பொருளுக்குத் தேவையான அம்சங்களில் பெரும்பான்மையானவை கட்டற்ற
+ஆவணங்களுக்கும் பொருந்தும்.அனைத்து பயனர்களுக்கும் வழங்கப் பட வேண்டிய சில
+சுதந்தரங்களைப் பற்றியது இது. மறு விநியோகம் (வர்த்தக ரீதியிலும் கூட)
+காகிதத்திலானாலும் சரி, இணைய வடிவிலானாலும் சரி அனுமதிக்கப்
+படவேண்டும். மாற்றுவதற்கான உரிமமும் இவ்விடத்தே முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.</p>
+
+<p>
+பொதுவாக, பலதரப்பட்ட கட்டுரைகளையும் புத்தகங்களையும் மாற்ற மக்கள் அனுமதி பெற
+வேண்டுமென்பதை இன்றியமையாத ஒன்றாக நாம் நம்பவில்லை. உரைகளுக்கான வாதங்களும்
+மென்பொருள்களுக்கானதும் ஒன்றல்ல. உதாரணத்திற்கு நமது செயல்களையும்
+எண்ணங்களையும் பிரதிபலிக்கின்ற இது போன்ற உரைகளை மாற்ற நானோ அல்லது தாங்களோ
+தார்மீக அனுமதித் தர வேண்டும் என நான் கருதவில்லை.</p>
+
+<p>
+கட்டற்ற மென்பொருளுக்கான ஆவணமாக்கத்தில் மாற்றுவதற்கான சுதந்தரம் இன்றியமையாதது
+எனச் சொல்வதற்கு முக்கியமானதொரு காரணம் உண்டு. மென்பொருளை மாற்றுவதற்கான
+உரிமையினை மக்கள் பயன்படுத்துகின்ற போது சற்றே பகுத்தறியுங்கால்
+அம்மென்பொருளுக்கான ஆவணங்களையும் அவர்கள் மாற்றுவார்கள். இதன் மூலம்
+மாற்றப்பட்ட மென்பொருளுக்குகந்த ஆவணத்தினை அவர்களால் தர இயலும். ஒரு ஆவணம்
+நிரலாளர்களை நிரல்களை மாற்றும் போது புத்தம் புதிதாக ஆவணங்களை எழுதப்
+பணிக்குமாயின் அது நமது சமூகத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்யவில்லை.</p>
+
+<p>
+எடுத்த எடுப்பிலேயே மாற்றம் செய்வதை தடை செய்வதை ஏற்க முடியாத அதேத்
+தருணத்தில், மாற்றம் செய்யும் முறைகளில் சில கட்டுப்பாடுகளை விதிப்பது ஏற்கக்
+கூடிய ஒன்றுதான். உதாரணத்திற்கு பிரதான ஆசிரியரின் பதிப்புரிமை வாசகங்களைப்
+போக்காது இருத்தல் வேண்டும், விநியோகிப்பதற்கான நெறிகளோடு ஒழுகுதல் வேண்டும்
+அல்லது ஆசிரியர்களின் விவரங்கள் அடங்கியப் பட்டியல் கொண்டிருத்தல் வேண்டும்
+முதலிய யாவும் ஏற்புடையவையே! மாற்றப்பட்ட ஆவணங்கள் மாற்றப்பட்டது என்ற
+குறிப்பினைப் பெற்றிருத்தல் வேண்டும் என்பதும் ஏற்புடையதே. தொழில்நுட்பத்தினைச்
+சாராத பட்சத்தில் ஒரு முழு பகுதியினை அகற்றாமலோ அல்லது மாற்றாமலோ வழங்குவதும்
+ஏற்புடையதே.</p>
+
+<p>
+நடைமுறையில் இத்தகைய கட்டுப்பாடுகள் ஒரு பிரச்சனை இல்லை. ஏனெனில் பகுத்தறியும்
+நிரலாளர் ஒருவரை மாற்றப்பட்ட நிரலுக்கு உகந்தவாறு ஆவணத்தினையும் ஆக்குவதை இவை
+தடுப்பதில்லை. வேறு விதமாகச் சொல்ல வேண்டுமானால் இவை கட்டற்ற மென்பொருள் சமூகம்
+ஆவணத்தினை முழுமையாகப் பயன்படுத்துவதை தடை செய்வதில்லை.</p>
+
+<p>
+ஆவணத்தின் அனைத்து விதமான தொழில்நுட்ப விவரங்களையும் மாற்ற இயலுதல்
+வேண்டும். அதன் பலனை அனைத்து விதமான ஊடகங்களின் வாயிலாகவும் விநியோகிக்கவும்
+இயல வேண்டும். இல்லையெனில் இக்கட்டுப்பாடுகள் சமூகத்திற்கு தடை விதிப்பவை. நாம்
+மாற்று ஏற்பாட்டைச் செய்யவேண்டியது தான்.</p>
+
+<p>
+துரதிருஷ்டவசமாக தனியுரிம ஆவணமொன்று கிடைக்கையில் மாற்று ஆவணத்தினை எழுதுவதற்கு
+ஒருவர் கிடைப்பதென்பது கடினமாக உள்ளது. தடையாதெனில் பெரும்பான்மையான பயனர்கள்
+தனியுரிம ஆவணத்தினைத் தரமானதாகவும் போதுமானதாகவும் நினைக்கிறார்கள். அவர்களால்
+கட்டற்ற ஆவணத்தின் அவசியத்தை உணர முடியவில்லை. அவர்கள் கட்டற்ற இயங்கு
+தளத்தினிடையே நிரப்பப் படவேண்டிய இடைவெளியின் அவசியம் உணராது இருக்கிறார்கள்.</p>
+
+<p>
+தனியுரிம ஆவணங்கள் தரமானது எனப் பயனர்கள் ஏன் கருதுகிறார்கள்? சிலர்
+இப்பிரச்சனைக்கு செவிமடுப்பதே இல்லை. இவ்வுரை இதனை மாற்றுவதற்குத் தமது
+பங்காற்றும் என நாம் நம்புகிறோம்.</p>
+
+<p>
+ஏனைய பயனர்கள் தனியுரிம மென்பொருட்களை ஏற்பதற்கு என்ன காரணமோ அதே
+காரணங்களுக்காக தனியுரிம ஆவணங்களையும் ஏற்புடையாதாகக் கருதுகிறார்கள். நடைமுறை
+இலாபங்களை மட்டுமே அவர்கள் கருத்தில் கொள்கிறார்கள். சுதந்தரத்தினை
+அல்ல. இத்தகைய கருத்துக்களைக் கொள்ள இவர்களுக்கு உரிமை இருக்கிற அதே வேளையில்,
+இக்கருத்துக்கள் சுதந்தரத்தினை உள்ளடக்காத சிந்தனைகளிலிருந்து வருகிற
+காரணத்தால் நமக்கு வழிகாட்டியாக ஒருபோதும் இருப்பது இல்லை.</p>
+
+<p>
+இவ்விஷயத்தைப் பற்றிய செய்தியினைப் பரப்புங்கள். நாம் தனியுரிம பதிப்புக்களின்
+காரணமாக ஆவணங்களை இழந்து வருகின்றோம். நாம் தனியுரிம ஆவணங்களின் போதாமையினைப்
+பரப்பினால், குனுவிற்கு ஆவணமெழுதுவதின் மூலம் உதவி செய்ய விரும்பும் ஒருவர்,
+அது கட்டற்றதாக இருக்க வேண்டும் என்பதனை உணர்வார்.</p>
+
+<p>
+வர்த்தக நோக்கத்தோடு செயல்படும் பதிப்பகத்தாரைக் கூட காபிலெப்ஃட் செய்யப் பட்ட
+கட்டற்ற ஆவணங்களை விற்பனைச் செய்வதற்கு நாம் ஊக்குவிக்கலாம். ஆவணமொன்றினை
+தாங்கள் வாங்கும் முன்னர் அவை காபிலெப்ஃட் செய்யப்பட்டதா அல்லது காபிலெஃட்
+செய்யப்படாததா என்பதனைச் சரி பார்த்து வாங்குவது இதற்குத் தாங்கள் உதவுவதற்கான
+வழிகளில் ஒன்று.</p>
+<p>
+[குறிப்பு: <a href="/doc/other-free-books.html">பிற பதிப்பகத்தாரிடமிருந்து
+கிடைக்கக் கூடிய கட்டற்ற புத்தகங்களின் பட்டியல்</a> கிடைக்கப் பெறுகின்றன.]</p>
+
+<div class="translators-notes">
+
+<!--TRANSLATORS: Use space (SPC) as msgstr if you don't have notes.-->
+ </div>
+</div>
+
+<!-- for id="content", starts in the include above -->
+<!--#include virtual="/server/footer.ta.html" -->
+<div id="footer">
+<div class="unprintable">
+
+<p>FSF &amp; GNU தொடர்பான வினவல்களை <a
+href="mailto:gnu@gnu.org">&lt;gnu@gnu.org&gt;</a> அனுப்பவும். FSF ஐ <a
+href="/contact/">தொடர்பு கொள்ளும் வேறு வழிகளும்</a> உண்டு. துண்டிக்கப்பட்ட
+இணைப்புகள், திருத்தங்கள், பரிந்துரைகள் உள்ளிட்டவற்றை <a
+href="mailto:webmasters@gnu.org">&lt;webmasters@gnu.org&gt;</a> என்ற
+முகவரிக்கு அனுப்பவும்.</p>
+
+<p>
+<!-- TRANSLATORS: Ignore the original text in this paragraph,
+ replace it with the translation of these two:
+
+ We work hard and do our best to provide accurate, good quality
+ translations. However, we are not exempt from imperfection.
+ Please send your comments and general suggestions in this regard
+ to <a href="mailto:web-translators@gnu.org">
+
+ &lt;web-translators@gnu.org&gt;</a>.</p>
+
+ <p>For information on coordinating and submitting translations of
+ our web pages, see <a
+ href="/server/standards/README.translations.html">Translations
+ README</a>. -->
+இந்த கட்டுரையின் மொழிபெயர்ப்பை ஒருங்கிணைப்பது, சமர்ப்பிப்பது தொடர்பான
+விவரங்களுக்கு <a
+href="/server/standards/README.translations.html">மொழிபெயர்ப்புகள் README
+கோப்பைக்</a> காணவும்.</p>
+</div>
+
+<!-- Regarding copyright, in general, standalone pages (as opposed to
+ files generated as part of manuals) on the GNU web server should
+ be under CC BY-ND 4.0. Please do NOT change or remove this
+ without talking with the webmasters or licensing team first.
+ Please make sure the copyright date is consistent with the
+ document. For web pages, it is ok to list just the latest year the
+ document was modified, or published.
+ If you wish to list earlier years, that is ok too.
+ Either "2001, 2002, 2003" or "2001-2003" are ok for specifying
+ years, as long as each year in the range is in fact a copyrightable
+ year, i.e., a year in which the document was published (including
+ being publicly visible on the web or in a revision control system).
+ There is more detail about copyright years in the GNU Maintainers
+ Information document, www.gnu.org/prep/maintain. -->
+<p>Copyright &copy; 1996, 1997, 1998, 1999, 2000, 2001, 2002, 2003, 2004, 2005,
+2006, 2007, 2009 Free Software Foundation, Inc. (கட்டற்ற மென்பொருள்
+அறக்கட்டளை, நிறுவப்பட்டது.)</p>
+
+<p>இப்பக்கம் <a rel="license"
+href="http://creativecommons.org/licenses/by-nd/4.0/">Creative Commons
+Attribution-NoDerivatives 4.0 International License</a> உரிமத்தின் கீழ்
+வெளியிடப்படுகிறது.</p>
+
+<!--#include virtual="/server/bottom-notes.ta.html" -->
+<div class="translators-credits">
+
+<!--TRANSLATORS: Use space (SPC) as msgstr if you don't want credits.-->
+தமிழில்: ஆமாச்சு</div>
+
+<p class="unprintable"><!-- timestamp start -->
+புதுப்பிக்கப் பட்ட விவரம்:
+
+$Date: 2019/06/23 15:24:26 $
+
+<!-- timestamp end -->
+</p>
+</div>
+</div>
+</body>
+</html>