diff options
Diffstat (limited to 'talermerchantdemos/blog/articles/ta/fighting-software-patents.html')
-rw-r--r-- | talermerchantdemos/blog/articles/ta/fighting-software-patents.html | 161 |
1 files changed, 161 insertions, 0 deletions
diff --git a/talermerchantdemos/blog/articles/ta/fighting-software-patents.html b/talermerchantdemos/blog/articles/ta/fighting-software-patents.html new file mode 100644 index 0000000..b1347e8 --- /dev/null +++ b/talermerchantdemos/blog/articles/ta/fighting-software-patents.html @@ -0,0 +1,161 @@ +<!--#set var="ENGLISH_PAGE" value="/philosophy/fighting-software-patents.en.html" --> + +<!--#include virtual="/server/header.ta.html" --> +<!-- Parent-Version: 1.77 --> + +<!-- This file is automatically generated by GNUnited Nations! --> +<title>மென்பொருள் படைப்புரிமத்தை எதிர்த்து - கூட்டாகவும் தனியாகவும் - குனு திட்டம் +- கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளை</title> + +<!--#include virtual="/philosophy/po/fighting-software-patents.translist" --> +<!--#include virtual="/server/banner.ta.html" --> +<h2>மென்பொருள் படைப்புரிமத்தை எதிர்த்து - கூட்டாகவும் தனியாகவும்குனு திட்டம்</h2> + +<p>ரிச்சர்ட் எம். ஸ்டால்மேன்</p> + +<p> +நிலக் கண்ணி வெடிகளுக்கு ஒப்பான மென்பொருள் திட்டங்கள் தான் மென்பொருள் +படைப்புரிமம். வடிவமைப்பின் ஒவ்வொரு படியும் ஒரு படைப்புரிமத்தில் காலடி +எடுத்து வைக்கக் கூடிய வாய்ப்புகளை சுமந்து நிற்கின்றன.இது தங்களின் +திட்டத்தையே பாழடித்துவிடும்.</p> +<p> +பெரிய சிக்கலான நிரலை இயற்றுவதென்றால் பலச் சிந்தனைகளை, பெரும்பாலும் நூற்றுக் +கணக்கான அல்லது ஆயிரக் கணக்கான சிந்தனைகளை, ஒன்றிணைப்பதாகும். மென்பொருள் +படைப்புரிமத்தினை அனுமதிக்கும் ஒரு நாட்டில் , தாங்கள் வரைந்த நிரலின் ஒரு +பகுதிக்கான தங்களின் சிந்தனையின் ஒரு துளிக்கு ஏற்கனவே பல்வேறு நிறுவனங்கள் +படைப்புரிமம் பெற்றிருக்கும். சொல்லப் போனால் நூற்றுக் கணக்கான படைப்புரிமங்கள் +தங்கள் நிரலின் பகுதியை உள்ளடக்கியிருக்கும். 2004 ம் ஆண்டின் ஒரு ஆய்வுப் படி +முக்கியமான நிரலொன்றின் பல்வேறு பாகங்கள் கிட்டத் தட்ட 300 யு.எஸ் +படைப்புரிமங்களில் இடம் பெற்றிருந்தன. ஒன்றே ஒன்றுதான் செய்யப் பட்டிருக்கிறது +என்பதை அறிய எவ்வளவு பெரிய ஆய்வு.</p> +<p> +தாங்கள் மென்பொருளினை உருவாக்குபவரானால், குறிப்பிட்ட எந்தவொரு நேரத்திலும் +தாங்கள் ஒரு படைப்புரிமத்தால் அச்சுறுத்தப் படுவீர்கள் என்பதே நிதர்சனமான +உண்மை. இது நிகழும் போது, இந்த படைப்புரிமத்தை மறுத்துரைப்பதற்கான சட்டரீதியான +சாத்தியக் கூறுகளை தங்களால் கண்டெடுக்க முடிந்தால், பலிகடா ஆகாமல் தங்களால் +தங்களைக் காத்துக் கொள்ள இயலும். தாங்கள் அத்தகைய முயற்சியினை +மேற்கொள்ளலாம். ஒரு வேளை வெற்றிப் பெற்றால், கண்ணி வெடிகளால் நிரப்பப் பட்ட +வயலொன்றில் ஒன்றே ஒன்றைத் தாண்டியதாகவே ஆகும். இந்தப் படைப்புரிமம் உண்மையாகவே +பொது நலத்திற்கு குந்தகம் விளைவிப்பதாக இருக்குமாயின், <a +href="http://www.pubpat.org">பொதுமக்களுக்கான படைப்புரிம அறக்கட்டளை +(pubpat.org)</a> இவ்வழக்கினை எடுத்து நடத்தலாம். இது தான் அதன் +சிறப்பம்சம். படைப்புரிமம் ஒன்றினை மறுத்துரைக்கும் சாட்சியமாக, ஒத்த +சிந்தனையொன்று ஏற்கனவே பதிப்பிக்கப் பட்டிருக்கின்றதா எனத் தாங்கள் கணினியினை +பயன்படுத்தும் சமூகத்தினைக் கேட்டால் , எங்களிடன் இருக்கக் கூடிய பயனுள்ளத் +தகவல்களையெல்லாம் திரட்டி நாங்கள் தரவேண்டும்.</p> +<p> +கொசு அடிக்க உதவும் கருவியால் எவ்வாறு மலேரியாவினை ஒழிக்க முடியாதோ அதேபோல், +ஒவ்வொரு படைப்புரிமத்திற்கு எதிராக போராடுவதென்பதும் மென்பொருள் +படைப்புரிமத்தின் பாதகங்களை அகற்ற அறவே உதவாது. பதிவொளி விளையாட்டில் வரும் +இராட்சதர் ஒவ்வொருவரையும் கொல்வதென்பது எப்படி எதிர்பார்க்க இயலாதோ அதேபோல், +தங்களை நோக்கி வரும் ஒவ்வொரு படைப்புரிமத்தினையும் தாங்கள் வீழ்த்துவீர்கள் +எனவும் எதிர்பாக்க முடியாது. விரைவிலோ அல்லது சிறிது காலம் கழித்தோ ஒரு +படைப்புரிமம் தங்களின் நிரலை நாசம் செய்யப் போகின்றது. யு.எஸ் படைப்புரிம +அலுவலகம் வருடமொன்றுக்கு கிட்டத்தட்ட இலட்சம் மென்பொருள் படைப்புரிமங்களை +வழங்குகின்றது. நமது தலைச் சிறந்த முயற்சிகளால் கூட இக்கண்ணிவெடிகளை அவை +விதைக்கப் படும் வேகத்துக்கு ஈடுகொடுத்து களைய இயலாது.</p> +<p> +இவற்றுள் சில வெடிச் சுரங்கங்கள் அகற்றவே இயலாதவை. எந்தவொரு மென்பொருள் +படைப்புரிமமும் தீமையானது. மேலும் ஒவ்வொரு மென்பொருள் படைப்புரிமமும் தாங்கள் +தங்களின் கணினியினை பயன்படுத்துவதை அநியாயமாகக் கட்டுப் படுத்துகின்றன. ஆனால் +படைப்புரிம அமைப்பின் விதிகளின் படி எந்தவொரு மென்பொருள் படைப்புரிமமும் +சட்டப்படி செல்லத் தக்கவையே. படைப்புரிம விதிகள் சரியாக அமல்படுத்தப் படாத, +“தவறுகளால்” விளைந்த படைப்புரிமங்களையே நம்மால் வெல்ல முடியும். மென்பொருள் +படைப்புரிமத்தை அனுமதிப்பது எனும் கொள்கைதான் தொடர்புடைய ஒரே தவறு என்கிற போது +நம்மால் செய்ய முடிந்தது எதுவும் இல்லை.</p> +<p> +கோட்டையினை பாதுகாக்க, தோன்ற தோன்ற இராட்சதர்களைக் கொல்வதைக் காட்டிலும் அதிகம் +செய்யவேண்டும். அதனை உற்பத்திச் செய்யும் பாசறையினையே துடைத்தெரிய +வேண்டும். இருக்கக் கூடிய மென்பொருள் படைப்புரிமங்களையெல்லாம் ஒவ்வொன்றாக +அழிப்பது நிரலாக்கத்தை பாதுகாக்காது. படைப்புரிமமானது இனியும் மென்பொருள் +உருவாக்குவோரையும் பயனர்களையும் அச்சுறுத்தாது இருக்க, நாம் படைப்புரிம +முறையையே மாற்ற வேண்டும்.</p> +<p> +இவ்விரு வாதங்களுக்கும் இடையே முரண்பாடெதுவும் இல்லை. நாம் குறுகிய கால +விடுதலைக்கும் நீண்ட கால நிரந்தர தீர்வுக்கும் உடனடியாக பணியாற்றத் +துவங்கலாம். கவனம் கொடுக்கத் துவங்கினோமேயானால், தனிப்பட்ட மென்பொருள் +படைப்புரிமத்துக்கு எதிராக பணிபுரியும் அதே நேரத்தில், பிரச்சனையை முழுமையாகக் +களைவதற்குத் தேவையான ஆதரவினைத் திரட்டும் இரட்டிப்பு வேலையையும் செய்ய +இயலும். முக்கியமான விடயம் யாதெனில் “தீயதான ” மென்பொருள் படைப்புரிமங்களைச் +செல்லுபடியாகாத அல்லது தவறாகப் புரிந்துக் கொள்ளப் பட்ட படைப்புரிமங்களோடு +ஒப்பிடுவது. மென்பொருள் படைப்புரிமமொன்றினை வலுவிழக்கச் செய்யும் ஒவ்வொரு +முறையும், முயற்சி செய்வதற்கான நமது திட்டங்கள் பற்றிப் பேசுகிற ஒவ்வொரு +முறையும்,“ஒரு படைப்புரிமத்தின் குறைவு, நிரலாளர்களின் அச்சுறுத்தல்களில் ஒன்று +குறைவு. நமது இலக்கோ படைப்புரிமமே இல்லாத நிலை” என நாம் உறுதியாகச் சொல்ல +வேண்டும்.</p> +<p> +மென்பொருள் படைப்புரிமத்துக்கெதிரான போரில் ஐரோப்பியக் கூட்டமைப்பு முக்கியமான +கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கின்றது. ஒரு வருடத்துக்கு முன்னால் ஐரோப்பிய +பாராளுமன்றம் மென்பொருள் படைப்புரிமத்துக்கு எதிராக உறுதியாக வாக்களித்தது. மே +மாத வாக்கில் பாராளுமன்றத்தின் மாற்றங்களை அமைச்சர் குழு இல்லாது செய்ய +வாக்களித்து துவக்கத்தில் இருந்ததைக் காட்டிலும் இன்னும் மோசமடையச் செய்து +விட்டது. ஆயினும், இதனை ஆதரித்த ஒரு நாடு, தற்பொழுது தனது வாக்கினை மாற்றிக் +கொண்டு விட்டது. நாம் எப்பாடு பட்டாவது இன்னும் ஒரு ஐரோப்பிய நாட்டினை, தமது +வாக்கினைத் திரும்பப் பெறச் செய்யுமாறு திருப்தி படுத்த வேண்டும். மேலும் +ஐரோப்பிய பாராளுமன்றத்துக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள புதிய +உறுப்பினர்களை திருப்தி படுத்தி முந்தைய வாக்கிற்கு ஆதரவளிக்கும் படிச் செய்ய +வேண்டும். எவ்வாறு உதவுவது என்பது குறித்தும் ஏனைய இயக்கத்தினருடன் தொடர்புக் +கொள்ளவும் <a href="http://www.ffii.org/"> www.ffii.org</a> னை அணுகவும்.</p> +<div class="translators-notes"> + +<!--TRANSLATORS: Use space (SPC) as msgstr if you don't have notes.--> + </div> +</div> + +<!-- for id="content", starts in the include above --> +<!--#include virtual="/server/footer.ta.html" --> +<div id="footer"> +<div class="unprintable"> + +<p>FSF & GNU தொடர்பான வினவல்களை <a +href="mailto:gnu@gnu.org"><gnu@gnu.org></a> அனுப்பவும். FSF ஐ <a +href="/contact/">தொடர்பு கொள்ளும் வேறு வழிகளும்</a> உண்டு. துண்டிக்கப்பட்ட +இணைப்புகள், திருத்தங்கள், பரிந்துரைகள் உள்ளிட்டவற்றை <a +href="mailto:webmasters@gnu.org"><webmasters@gnu.org></a> என்ற +முகவரிக்கு அனுப்பவும்.</p> + +<p> +<!-- TRANSLATORS: Ignore the original text in this paragraph, + replace it with the translation of these two: + + We work hard and do our best to provide accurate, good quality + translations. However, we are not exempt from imperfection. + Please send your comments and general suggestions in this regard + to <a href="mailto:web-translators@gnu.org"> + + <web-translators@gnu.org></a>.</p> + + <p>For information on coordinating and submitting translations of + our web pages, see <a + href="/server/standards/README.translations.html">Translations + README</a>. --> +இந்த கட்டுரையின் மொழிபெயர்ப்பை ஒருங்கிணைப்பது, சமர்ப்பிப்பது தொடர்பான +விவரங்களுக்கு <a +href="/server/standards/README.translations.html">மொழிபெயர்ப்புகள் README +கோப்பைக்</a> காணவும்.</p> +</div> + +<p>Copyright © 2004 Richard Stallman (ரிச்சர்ட் ஸ்டால்மேன்)</p> + +<p>இப்பக்கம் <a rel="license" +href="http://creativecommons.org/licenses/by-nd/3.0/us/">Creative Commons +Attribution-NoDerivs 3.0 United States License</a> உரிமத்தின் கீழ் +வெளியிடப்படுகிறது.</p> + +<!--#include virtual="/server/bottom-notes.ta.html" --> +<div class="translators-credits"> + +<!--TRANSLATORS: Use space (SPC) as msgstr if you don't want credits.--> +தமிழில்: ஆமாச்சு</div> + +<p class="unprintable"><!-- timestamp start --> +புதுப்பிக்கப் பட்ட விவரம்: + +$Date: 2019/06/23 15:55:46 $ + +<!-- timestamp end --> +</p> +</div> +</div> +</body> +</html> |